என் மலர்
செய்திகள்

இரட்டை சதம் அடித்த மயங்க் அகர்வால், அருகில் ஜடேஜா
ஒரே நாளில் 407 ரன்கள் குவிப்பு: 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்களுடன் வலுவான நிலையில் இந்தியா
மயங்க் அகர்வால் 243 ரன்கள் விளாசி இந்தியா ஒரேநாளில் 407 குவித்ததால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் அடித்த புஜாரா 54 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.

ரகானே 86 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அவர் 330 ரன்களில் 28 பவுண்டரி, 8 சிக்சருடன் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

Next Story