என் மலர்
விளையாட்டு
மயங்க் அகர்வால் 243 ரன்கள் விளாசி இந்தியா ஒரேநாளில் 407 குவித்ததால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அரைசதம் அடித்த புஜாரா 54 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி டக்அவுட் ஆனார்.

அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.

ரகானே 86 ரன்கள் சேர்த்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் அவர் 330 ரன்களில் 28 பவுண்டரி, 8 சிக்சருடன் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சகா 12 ரன்னில் வெளியேறினார். ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். உமேஷ் யாதவ் அதிரடியாக விளையாடி 10 பந்தில் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா இன்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்துள்ளது.
ஜடேஜா 60 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்றைய ஒரேநாளில் 407 ரன்கள் அடித்தது சிறப்பம்சமாகும்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் நாளில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்தது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என வென்றது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 21-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.
இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் முடிவு செய்தது. முதல் பயிற்சி ஆட்டம் கடந்த 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 428 ரன்கள் குவித்தது. ஆசாத் ஷபிக், பாபர் அசாம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். மேலும் எதிரணியை 122 ரன்னில் சுருட்டியது.
இந்நிலையில் இரண்டு நாட்கள் கொண்ட 2-வது பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 44 ரன்கள் சேர்த்தார்.
அடுத்து வந்த ஷான் மசூத் 76 ரன்கள் குவித்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆசாத் ஷபிக் இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அதேபோல் பாபர் அசாம் 63 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் சேர்த்துள்ளது. ஆசாத் ஷபிக் 101 ரன்களுடனும், காஷிஃப் பாத்தி 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
அடுத்தடுத்த போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியதால் பாகிஸ்தான் அணி முதல் டெஸ்டை ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கிறது.

வங்காளதேச அணிக்கெதிரான இந்தூர் டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்றைய 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் 98 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 183 பந்தில் சதம் அடித்தார். சதத்தோடு நிற்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.
196 ரன்கள் எடுத்திருக்கும்போது சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 303 பந்தில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார்.
இவர் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த சித்தேஷ் லாட் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மாறியுள்ளார்.
2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடருக்கான வீரர்கள் மாற்றத்திற்கான கெடு நேற்று மாலையுடன் முடிவடைந்தது. சித்தேஷ் லாட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே மயங்க் மார்கண்டேவை வெளியேற்றியுள்ளது. சித்தேஷ் லாட் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், தவால் குல்கர்னி ஆகியோரை ஏற்கனவே மற்ற அணிகளில் இருந்து வாங்கியுள்ளது.

சென் லாங் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதால் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி சீனாவைச் சேர்ந்த சென் லாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-13 என எளிதில் கைப்பற்றினார்.
2-வது செட் தொடங்குவதற்கு முன் சென் லாங் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சென் லாங் உடன் ஸ்ரீகாந்த் கிதாம்பி 8 முறை மோதியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனில் வீழ்த்தியிருந்தார்.
அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி லீ செயுக் யியு அல்லது விக்டர் அக்செல்சனுடன் மோத உள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய டி20 போட்டி தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றன. முதல் டெஸ்ட் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.
இதற்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பு காயத்தில் இருந்து குணமடைந்துள்ள கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்கு திரும்பி உள்ளார். வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் முதல் முறையாக டெஸ்ட் அணியில் இடம் பிடித்து உள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:-
வில்லியம்சன் (கேப்டன்), ஜீத் ராவல், டாம் லாதம், ராஸ் டெய்லர், ஹென்ரி நிக்கோலஸ், வாட்லிங், கிராண்ட் ஹோம், சான்ட்னெர், டாட் ஆஸ்லே, டாம் ப்ளெண்டெல், போல்ட், மெட் ஹென்ரி, டிம் சவுத்தி, நீல் வாக்னர், லூக்கி பெர்குசன்.

இந்திய வேகப்பந்து வீச்சு யுனிட் உலகிலேயே மிகவும் அபாயகரமானது என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சு அருமையாக இருந்தது. தொடக்க முதலே வங்காளதேசத்துக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.
மூன்று பேரும் இணைந்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இவர்களைத் தவிர அஸ்வின் மட்டும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு விக்கெட் ரன்அவுட் ஆகும்.
இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் டெஸ்ட் அணியில் பும்ராவும் சேர்ந்து விட்டால், இந்திய வேகப்பந்து வீச்சு உலகில் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என கருதுகிறேன்.
எனது இந்த கருத்துக்கு மற்றவர்கள் என்ன தீர்மானிப்பார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. ஆனால் சமீப காலமாக நான் பார்த்தவரையில் இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதல் சிறந்ததாக உள்ளது என்றார்.

வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் விராட் கோலி டக்-அவுட் ஆன நிலையில், மயங்க் அகர்வால் அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.
இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்கம் முதலே வங்காளதேச வீரர்கள் இந்திய பந்து வீச்சுக்கு திணறினார்கள். 31 ரன்னுக்கு 3 விக்கெட் டை இழந்தது. அதன்பிறகு மொமினுல் ஹக் - முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சிறிது தாக்கு பிடித்து விளையாடியது.
மொமினுல் ஹக் 37 ரன்னிலும், அடுத்து வந்த மெஹ்முதுல்லா 10 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 43 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தன. வங்காளதேச அணி 58.3 ஓவரில் 150 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பிறகு மயங்க் அகர்வால் - புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 26 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 86 ரன் எடுத்து இருந்தது. மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும், புஜாரா 43 ரன்னுடனும் ஆட்மிழக்காமல் இருந்தனர்.
இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா - மயங்க் அகர்வால் தொடர்ந்து விளையாடினர். புஜாரா 68 பந்தில் அரை சதம் அடித்தார். அதன்பின் சிறிது நேரத்தில் அவர் 54 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை அபு ஜயத் கைப்பற்றினார்.

அடுத்து மயங்க் அகர்வாலுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அகர்வால் அரைசதத்தை கடந்தார். நேரம் செல்லசெல்ல இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ரகானே அரைசதம் அடிக்க மறுமுனையில் அரைசதத்தை சதமாக மாற்றினார் மயங்க் அகர்வால். இந்தியாவில் விளையாடிய நான்கு டெஸ்டில் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 150 ரன்னைக் கடந்துள்ளார். மதியம் 2 மணி நிலவரப்படி இந்தியா 79 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 153 ரன்னுடனும், ரகானே 70 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

அடுத்து களம் வந்த கேப்டன் விராட் கோலி டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அபு ஜயத் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். கோலி அவுட் ஆனபோது ஸ்கோர் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்னாக இருந்தது.

அடுத்து மயங்க் அகர்வாலுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினார்கள். அகர்வால் அரைசதத்தை கடந்தார். நேரம் செல்லசெல்ல இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ரகானே அரைசதம் அடிக்க மறுமுனையில் அரைசதத்தை சதமாக மாற்றினார் மயங்க் அகர்வால். இந்தியாவில் விளையாடிய நான்கு டெஸ்டில் 3-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து விளையாடிய அவர் 150 ரன்னைக் கடந்துள்ளார். மதியம் 2 மணி நிலவரப்படி இந்தியா 79 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. மயங்க் அகர்வால் 153 ரன்னுடனும், ரகானே 70 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான மயங்க அகர்வால் சதமடித்து அசத்தினார்.
இந்தூர்:
இந்தியா - வங்காளதேசம் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டி தொடரில் முதல் டெஸ்ட் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நேற்று தொடங்கியது. வங்காளதேச கேப்டன் மொமினுல் ஹக் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும் ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். ரோகித் சர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் சேர்த்தது. புஜாரா 43 ரன்னுடனும், மயங்க் அகர்வால் 37 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நிதானமாக ஆடிய புஜாரா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த கேப்டன் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலேயே வெளியேறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது 3-வது சதத்தை பதிவு செய்தார்.
தற்போது இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. அகர்வால் 111 ரன்களுடனும், ரகானே 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது என்று சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்தூர்:
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ந் தேதி இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார். 2013-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தெண்டுல்கர் டெஸ்டில் அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
1970 மற்றும் 1980-களில் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். அவர்களின் பந்து வீச்சு ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் வகையிலும் இருந்தது. ஆனால் தற்போது தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். இதனால் டெஸ்ட் போட்டியின் தரம் குறைந்து விட்டது. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு நல்லதல்ல. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் தரம் உயர வேண்டியது அவசியமானதாகும். கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் ஆணி வேர் ஆடுகளங்கள் தான் என்பதை நான் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைக்கும் ஆடுகளத்தை நாம் வழங்கினால், அது பேட்டிங், பந்து வீச்சுக்கு இடையே சரிசம போட்டி அளிக்கும் வகையில் இருக்கும். இந்த நடுநிலை தன்மை தவறும்போது போட்டி பலவீனம் அடையும். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தரமான ஆடுகளங்கள் அவசியமாகும்.
ஐ.பி.எல். போட்டியில் ஒருவர் சிறப்பாக செயல்பட்டால் அவரை சர்வதேச 20 ஓவர் போட்டிக்கான அணியில் சேர்க்கலாம். அதேநேரத்தில் ஐ.பி.எல். போட்டியில் நன்றாக செயல்படும் ஒருவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்த்தால் அது கேள்விக்குறியாகி விடும். இது பும்ரா போன்ற திறமையான சில வீரர்களுக்கு விதிவிலக்காகும்.
5 தலைமுறை வீரர்களுடன் விளையாடிய ஒரே வீரர் நானாக தான் இருப்பேன். கபில்தேவ், ரவிசாஸ்திரி, ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், அசாருதீன் ஆகியோருடன் முதலில் விளையாடினேன். அடுத்து கங்குலி, டிராவிட் ஆகியோருடனும், அடுத்தபடியாக யுவராஜ்சிங், ஹர்ஜபன்சிங், ஜாகீர்கான், ஷேவாக், நெஹரா ஆகியோருடனும், அதன் பிறகு சுரேஷ்ரெய்னா தலைமுறையினருடனும், தொடர்ச்சியாக விராட்கோலி, ரோகித் சர்மா, ரஹானே உள்ளிட்டோருடனும் இணைந்து விளையாடி இருக்கிறேன். வீரர்களின் ஓய்வறை கோவில் போன்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

சூரத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 30 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 55 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணியின் கஜுரியா- வாத்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கஜுரியா 22 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 49 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த மன்சூர் டார் 24 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார்.
வாத்வான் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 48 ரன்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 15.5 ஓவரில் விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. பாகிஸ்தான் அணியில் 16 வயதேயான இளம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா இடம் பிடித்துள்ளார். இவருடன் 19 வயதான முசா கான், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் மூத்த வீரர் இம்ரான் கான் இடம் பிடித்துள்ளார்.
இளம் வீரர்களை வைத்துக் கொண்டு பாகிஸ்தான் எப்படி விளையாட போகிறது என்ற விமர்சனம் எழும்பியது. ஆனால், ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு அபாரமாக இருந்தது.
இம்ரான் கான் ஐந்து விக்கெட் வீழ்த்தினார். நசீம் ஷா வீசிய ஒரு ஸ்பெல் அனைவரையும் ஈர்த்தது. கவாஜாவை திக்குமுக்காடச் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்தினார்.
இளம் வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியது மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது என பாகிஸ்தான் அணியின் பவுலிங் கோச் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பயிற்சி ஆட்டத்தில் இளம் வீரர்கள் விளையாடியதை பார்க்கும்போது, நாங்கள் அப்பாவியாக இங்கு வரவில்லை. எங்களது வேலையை மிகவும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று உணர்கிறோம்.
எங்களது பந்து வீச்சாளர்கள் ஜோ பேர்ன்ஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஹாரிஸ், பான்கிராப்ட் ஆகியோரை வீழ்த்தி 122 ரன்னில் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணியை சுருட்டியுள்ளனர். இந்த பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஆஸ்திரேலிய அணியில் விளையாடியவர்கள். அல்லது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பவர்கள்.
அவர்கள் விரைவில் அவுட்டாக்கியது நாங்கள் இங்கே சரியான போட்டியாளராக வந்துள்ளோம் என்ற மிகவும் சந்தோசமான தகவலை எங்களுக்கு கொடுத்துள்ளது. நாங்கள் வெற்றி பெறவும், ஆஸ்திரேலிய அணிக்கு சவாலாக இருக்கவும் விரும்புகிறோம். ஆகவே, எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு யுனிட்டை பார்த்து பாகிஸ்தான் வீரர்கள் அச்சப்படுவார்கள் அல்லது கவலையடைவார்கள் என்று நினைக்கவில்லை’’ என்றார்.