search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீகாந்த் கிதாம்பி
    X
    ஸ்ரீகாந்த் கிதாம்பி

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் கிதாம்பி

    சென் லாங் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதால் ஹாங்காங் ஓபன் பேட்மிண்டனில் ஸ்ரீகாந்த் கிதாம்பி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி சீனாவைச் சேர்ந்த சென் லாங்கை எதிர்கொண்டார். முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-13 என எளிதில் கைப்பற்றினார்.

    2-வது செட் தொடங்குவதற்கு முன் சென் லாங் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சென் லாங் உடன் ஸ்ரீகாந்த் கிதாம்பி 8 முறை மோதியுள்ளார். இதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனில் வீழ்த்தியிருந்தார்.

    அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி லீ செயுக் யியு அல்லது விக்டர் அக்செல்சனுடன் மோத உள்ளார்.
    Next Story
    ×