search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயங்க் அகர்வால்
    X
    மயங்க் அகர்வால்

    இந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தார் மயங்க் அகர்வால்

    வங்காளதேச அணிக்கெதிரான இந்தூர் டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
    இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய தொடக்க பேட்ஸ்மேன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இன்றைய 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் 98 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 183 பந்தில் சதம் அடித்தார். சதத்தோடு நிற்காமல் சதத்தை இரட்டை சதமாக மாற்றினார்.

    196 ரன்கள் எடுத்திருக்கும்போது சிக்சர் அடித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார். அவர் 303 பந்தில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் இரட்டை சதம் அடித்தார்.

    இவர் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×