search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின்
    X
    அஸ்வின்

    இந்திய வேகப்பந்து வீச்சு அபாயகரமானது: அஸ்வின் சொல்கிறார்

    இந்திய வேகப்பந்து வீச்சு யுனிட் உலகிலேயே மிகவும் அபாயகரமானது என்று சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
    வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சு அருமையாக இருந்தது. தொடக்க முதலே வங்காளதேசத்துக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர்.

    மூன்று பேரும் இணைந்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இவர்களைத் தவிர அஸ்வின் மட்டும் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். ஒரு விக்கெட் ரன்அவுட் ஆகும்.

    இந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் டெஸ்ட் அணியில் பும்ராவும் சேர்ந்து விட்டால், இந்திய வேகப்பந்து வீச்சு உலகில் மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என கருதுகிறேன்.

    எனது இந்த கருத்துக்கு மற்றவர்கள் என்ன தீர்மானிப்பார்கள் என்பதை அறிய விரும்பவில்லை. ஆனால் சமீப காலமாக நான் பார்த்தவரையில் இந்திய வேகப்பந்து வீச்சு தாக்குதல் சிறந்ததாக உள்ளது என்றார்.
    Next Story
    ×