என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.

    ராஜ்கிர்:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இதில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

    51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.

    இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

    • இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும்.
    • ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு ரூ.43½ கோடி பரிசாக வழங்கப்பட்டது.

    நியூயார்க்:

    'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று அரங்கேறியது. இதில் நடப்பு சாம்பியன் ஜானிக் சின்னர், கார்லஸ் அல்காரசுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

    இந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜானிக் சின்னரை வீழ்த்தி, கார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு ரூ.43½ கோடியும், 2-வது இடம் பெற்ற ஜானிக் சின்னருக்கு ரூ.21¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டில் கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றில் இருவரும் சந்திப்பது இது 3-வது முறையாகும். முந்தைய இரு மோதல்களில் ஜூன் மாதம் நடந்த பிரெஞ்சு ஓபனில் அல்காரசும், ஜூலை மாதம் நடந்த விம்பிள்டனில் ஜானிக் சின்னரும் வெற்றி பெற்றிருந்தனர். இதுவரை இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதி இருந்தனர். இதில் அல்காரஸ் 9-5 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வந்தார்.

    2004 முதல் 2008-ம் ஆண்டு வரை சுவிட்சர்லாந்து முன்னாள் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை தொடர்ச்சியாக வென்று இருந்தார். அதன் பிறகு யாரும் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை தக்கவைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.
    • கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    உலக சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    தென் கொரியாவில், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில், ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.

    இந்த போட்டியில், மூன்று செட்களின் முடிவில் 179-179 என சமநிலையில் இருந்தது.

    4வது செட் கணக்கின் முடிவில், இந்தியாவிற்கு 59 புள்ளிகளும், பிரான்ஸ் அணிக்கு 57 புள்ளிகளும் கிடைத்தது.

    இதன்மூலம், ரிஷப், பிரதமேஷ், அமன் மூவரும் பிரெஞ்சு ஜோடியை 235-233 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

    மேலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய அணி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியது.

    • தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
    • நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

    இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

    இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    ஆசியகோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026-ல் நடைபெறும் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

    • கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் தகவல்.
    • 2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது.

    உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) ஆகும்.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.4,193 கோடி கிடைத்து உள்ளது.

    மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனைத்து நிலுவை தொகையும் வழங்கப்பட்ட பிறகு உள்ள வருவாய் உயர்வு இதுவாகும். கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக் குழுவில் சமர்பிக்கப்பட்ட கணக்கு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    2019-ல் பி.சி.சி.யின் வருவாய் ரூ.3,906 கோடி ஆக இருந்தது. 2024-ல் அது 2 மடங்கு ரூ.7,988 கோடியாக உயர்ந்தது. அதாவது ரூ.4082 கோடியாக அதிகரித்தது.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் தற்போது ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு ரூ.20,686 கோடியாக உயர்ந்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    2019-ல் பி.சி.சி.ஐ.யின் பணம் கையிருப்பு மற்றும் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்தது. இது மாநில சங்கங்களுக்கு வழங்கப்படும் முன்பு ரூ.20,686 கோடி உயர்ந்து உள்ளதாக உறுப்பினர்களிடம் அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல்., ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) வருவாய் பகிர்வு மற்றும் விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    வருமானவரி மற்றும் கோர்ட்டு நடவடிக்கைகளுக்காக கிரிக்கெட் வாரியம் 2023-24 நிதியாண்டில் ரூ.3.150 கோடியை ஒதுக்கி உள்ளது.

    • சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
    • இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது.

    12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது.

    8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா ஆகியவை சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. நேற்றுடன் சூப்பர் 4 சுற்று முடிவடைந்தது.

    சூப்பர் 4 சுற்று முடிவில் இந்தியா 2 வெற்றி, 1 டிராவு டன் 7 புள்ளியுடன் முதல் இடத்தையும், தென் கொரியா 4 புள்ளியுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. மலேசியா, சீனா தலா 3 புள்ளிகள் பெற்றன.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.

    இந்திய அணி தென் கொரியாவை வீழ்த்தி 4-வது முறையாக ஆசிய கோப்பையை வெல்லுமா? என்று ஆவலடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2003, 2007, 2017 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை கைப்பற்றி இருந்தது. இந்த தொடரிலும் இரு அணிகளும் மோதிய சூப்பர்-4 சுற்று ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

    முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா-சீனா அணிகள் மோதுகின்றன.

    • செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.
    • சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும்.

    நியூயார்க்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்கிய பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்கா (பெலாரஸ்) - அமெரிக்காவை சேர்ந்த 8-வது வரிசையில் உள்ள அமண்டா அனிஸ்மோவா மோதினார்கள்.

    இதில் சபலென்கா 6-3, 7-6 ( 7-3) என்ற நேர் செட் கணக்கில் அனிஸ் மோவாவை எளிதில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார். அமெரிக்க ஓபன் கோப்பையை வெல்ல அவருக்கு 1 மணி 34 நிமிட நேரமே தேவைப்பட்டது.

    சபலென்கா கடந்த ஆண்டு ஜெசிகா பெகுலாவை தோற்கடித்து அமெரிக்க ஓபன் கிராண்ட் சிலாமை கைப்பற்றினார். தற்போது தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் பெற்றுள்ளார். இதன் மூலம் செரீனா வில்லியம்சுக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டதை தொடர்ச்சியாக வென்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். செரீனா 2012 முதல் 2014 வரை அமெரிக்க ஓபன் கோப்பையை தொடர்ச்சியாக வென்று இருந்தார்.

    சபலென்கா கடந்த ஜனவரி மாதம் மேடிசன் கெய்சிடம் (அமெரிக்கா) ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும், ஜூன் மாதம் கோகோ கவூப்பிடம் (அமெரிக்கா) பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியிலும் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த ஆண்டில் 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அமெரிக்க வீராங்கனையை பழி தீர்த்துக் கொண்டு பட்டத்தை வென்று சாதித்தார்.

    27 வயதான சபலென்கா கைப்பற்றிய 4-வது கிராண்ட் சிலாம் இதுவாகும். அவர் அமெரிக்க ஓபன் பட்டதை 2 தடவையும் (2024, 2025 ), ஆஸ்திரேலிய ஓபன் பட்டதை 2 முறையும் ( 2023, 2024 ) வென்றுள்ளார்.

    அமெரிக்க ஓபன் கோப்பையை வென்ற சபலென்காவுக்கு ரூ.44 கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. 2-வது இடத்தை பிடித்த அனிஸ்மோவா ரூ. 22 கோடி பெற்றார். சபலென்கா தனது 100-வது கிராண்ட்சி லாம் வெற்றியை பெற்றார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னர் (இத்தாலி) -இரண்டாம் வரிசையில் உள்ள அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    இந்த ஆண்டில் இருவரும் 3-வது முறையாக கிராண்ட் சிலாம் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். சின்னர்-அல்காரஸ் மோதும் இறுதி ஆட்டத்தை அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேரில் பார்க்கிறார்.

    • 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார்.

    இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

    இதில் அதிகபட்சமாக, கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.

    17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

    இதில், அதிகபட்சமாக டஷிங்கா முசேகிவா 21 ரன்களும், ரியான் பர்ல் 20 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து, பிரெயின் பென்னட் 19 ரன்களும், தடிவானாஷே மருமணி 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

    துஷ்மந்தா சமீரா அதிகட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்(4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

    இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதில், இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.

    • ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் இடையேயான 20 ஓவர் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 4 ரன்னில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    கேப்டன் இப்ராகிம் ஜர்தான் 35 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), ரகுமானுல்லா குர்பாஸ் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கரீம் ஜனத் 14 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவ ரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப் கான் 28 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
    • தொடக்கம் முதலே எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை அதிரடியாக விளையாடினர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப்- கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் - கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.

    இதில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை 6- 4 மற்றும் 6- 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    • அடுத்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.

    12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ள இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் (இரவு 7.30 மணி) மல்லுக்கட்டுகிறது.

    லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் டிரா கண்டது. அடுத்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. சூப்பர்4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட முடியும்.

    சீனா அணியை பொறுத்தமட்டில் ஒரு தோல்வி (மலேசியாவுக்கு எதிராக), ஒரு வெற்றியுடன் (தென்கொரியாவுக்கு எதிராக) 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் இந்திய அணி, சீனாவை (4-3) வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

    முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    ×