என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    20 ஓவர் கடைசி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி
    X

    20 ஓவர் கடைசி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி

    • ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
    • ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 3 நாடுகள் இடையேயான 20 ஓவர் தொடர் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பரபரப்பான கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 4 ரன்னில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது. முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது.

    கேப்டன் இப்ராகிம் ஜர்தான் 35 பந்தில் 48 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), ரகுமானுல்லா குர்பாஸ் 38 பந்தில் 40 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), கரீம் ஜனத் 14 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    பின்னர் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 20 ஓவ ரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. கேப்டன் முகமது வாசிம் 29 பந்தில் 44 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), ஆசிப் கான் 28 பந்தில் 40 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    ஆப்கானிஸ்தான் ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது.

    நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    Next Story
    ×