என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
    • ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 271 ரன் இலக்கை இந்திய அணி 39.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் சதமும் (116 ரன்), ரோகித் சர்மா (75 ரன்), விராட் கோலி (65 ரன்) அரைசதமும் விளாசினர். வெற்றியின் மூலம் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது.

    இதனையடுத்து இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கட்டாக்கில் நாளை நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லாதவர்கள் சில விஷயங்களை பற்றி சொன்னார்கள். ஐ.பி.எல். அணியின் உரிமையாளர் ஒருவர் (டெல்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜின்டால்) இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தனி பயிற்சியாளர் தேவை என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டுக்கு சம்பந்தமே இல்லாத நபர் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்களது வரம்புக்குள் இருப்பது முக்கியம். நாங்கள் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது கிடையாது. எனவே, நாங்கள் என்ன செய்தாலும் அதில் தலையிட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    • கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது.

    மும்பை:

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.

    இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.

    மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார்.

    டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டத்திறன், அணிக்கான தேவை ஆகியவை தொடர்பாக வீரர்கள் தேர்வு இருக்கும்.
    • எனக்கான நேரம் எப்போது வரும் என்று தெரியும்.

    விசாகப்பட்டினம்:

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி 116 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தனது 4-வது ஒருநாள் போட்டியில் அவர் முதல் சதத்தை பதிவு செய்தார்.

    சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் மனம் தளராமல் தனது செயல்பாட்டில் கூடுதல் கவனம் செலுத்தினார்.

    ஒருநாள் போட்டியில் தனது முதல் சதம் தொடர்பாக ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

    டெஸ்ட், 20 ஓவர் போட்டிகளில் ஏற்கனவே சதம் அடித்துள்ளேன். தற்போது ஒருநாள் போட்டியிலும் சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியில் இடம் பெறுவது எல்லாமே தேர்வுக்குழு கையில் இருக்கிறது. ஆட்டத்திறன், அணிக்கான தேவை ஆகியவை தொடர்பாக வீரர்கள் தேர்வு இருக்கும்.

    எனக்கான நேரம் எப்போது வரும் என்று தெரியும். அதுவரை எனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.

    இவ்வாறு ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

    • இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது.
    • இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.

    கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமானது 'பார்முலா 1' பந்தயமாகும். இந்த ஆண்டுக்கான 'பார்முலா 1' கார் பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற 2025 பார்முலா ஒன் உலக சாம்பியன் இறுதி போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த வீரர் லாண்டோ நோரிஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளி, 35வது பார்முலா ஒன் உலக சாம்பியனாக லாண்டோ நோரிஸ் உருவெடுத்தார். 

    • விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.
    • தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி தொடர் நாயகன் விருது வென்றார்.

    டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தான் விளையாடி வருகிறார்.

    2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விராட் கோலி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் தொடர் நாயகன் விருது வென்று தன மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    3 ஆவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், அந்த ஊரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் விராட் கோலி சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோ இணையத்தில் வைரலாகி வைரலாக பரவி வருகிறது. 

    • பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின.
    • இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் மந்தனா முக்கிய பங்காற்றினார்

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

    மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. இதைதொடர்ந்து பலாஸ் உடன் இருக்கும் திருமண புகைப்படங்களை மந்தனா நீக்கினார்.

    இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா தற்போது, தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் பலாஸ்-உம் தனது இன்ஸ்டாவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், "எனக்கு எதிராக வரும் வதந்திகளை உண்மை என்று நம்பும் மக்களைப் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வெறும் ஊகங்களின் அடிப்படையில் ஒருவர் மீது முடிவெடுப்பது சரியல்ல" என்று அவர் தனது வருத்தத்தை தெரிவித்தார்.

    அதேநேரம் "என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் ஆதாரமற்ற பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்புபவர்கள் மீது நான் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுப்பேன்" என்று தனது பதிவில் எச்சரித்துள்ளார்.  

    • இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது.
    • இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொண்டது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடமாகியது.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

    ஆனால் 4 சுற்றுகள் முடிவில் 5-1 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி ஜெர்மனி வீழ்த்தியது. இதன் மூலம் ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை ஜெர்மனி எதிர்கொள்ள உள்ளது. வரும் 10 ஆம் தேதி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 

    • ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
    • இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 334 ரன்களுக்கும், ஆஸ்திரேலியா அணி 511 ரன்களுக்கும் ஆல்-அவுட் ஆனது.

    177 ரன்கள் பின்தாங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

    65 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலியா அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த மாதம் 23-ம் தேதி மந்தனாவுக்கும் - பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
    • மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோவை நீக்கிவிட்டார்.

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

    இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.




     


    இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.

    தனது திருமணம் ரத்து செய்யப்பட்டது என்று இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "கடந்த சில வாரங்களாக என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நிறைய விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. என் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புபவள் நான் இல்லை. இதையும் அப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். ஆனால், திருமணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை மட்டும் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். இந்த விஷயத்தை இத்துடன் முடித்துக்கொள்ள விரும்புகிறேன்; நீங்களும் அதையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

    • இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

    இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.

    அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது.
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    7 ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கேரம் உலக கோப்பை தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

    ×