search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "carrom"

    • ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும்.
    • பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மாநில கேரம் கழகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கேரம் கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கேரம் போட்டி நேற்று தொடங்கியது.

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யா மொழி கலந்துகொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.

    கலெக்டர் தீபக்ஜேக்கப், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    போட்டியில் 24 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

    வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடினர். ஆண்களுக்கு ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கு ஒற்றையர் பிரிவில் மட்டும் நடை பெறும்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக போட்டி நடந்தது.

    நாளை வரை போட்டி நடை பெறும்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட கேரம் கழக துணை தலைவர் ராஜகோபால், செயலாளர் சீனிவாசன், நிர்வாக குழு உறுப்பினர் விக்னேஷ் செய்திருந்தனர்.

    • பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது
    • ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா்.

    உடுமலை:

    உடுமலை வட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் பங்கேற்கும் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை தொடங்கியது.இதில் கால்பந்து, ஆக்கி, கபடி, கையுந்து பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட குழு போட்டிகள், தனி நபா் போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    முதல் நிகழ்வாக உடுமலையை அடுத்துள்ள ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் கேரம் போட்டி நடைபெற்றது. கல்லூரி ஆலோசகா் ஜெ.மஞ்சுளா போட்டிகளை தொடங்கிவைத்தாா்.இதில் இரட்டையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 17 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 21 பள்ளிகளும், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 11 அணிகளும் கலந்து கொண்டன.

    ஒற்றையா் பிரிவில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 18 பள்ளிகளும், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 21 பள்ளிகளும், 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 பள்ளிகளும் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதலாவதாக வந்த மூன்று போ் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கு பெற முடியும். 

    ×