search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carrom competition"

    • க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
    • மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள்.

    திருப்பூர்:

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்டம் மற்றும் மாணவர் அணி சார்பில் க.முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்கள் ஒற்றையர் கேரம் போட்டி (தம்பிங்) குலாலர் திருமண மண்டபத்தில் தொடங்கியது. மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கிவைத்தார். மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலர் சிவபாலன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கோபிநாத் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வீரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 192 அணியினர் பங்கேற்று விளையாடினார்கள். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று மாலை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    • கேரம் போட்டி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாணவர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முத்தம்மாள் நினைவு கோப்பை தேசிய அளவிலான ஆண்களுக்கான ஒற்றையர் கேரம் போட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருப்பூர் லட்சுமிநகர் குலாலர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மாவட்ட நிர்வாகி திலகராஜ் தலைமை தாங்குகிறார். போட்டியை மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் பங்கேற்கிறார்கள். முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.10 ஆயிரம், 4-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

    • மாநில அளவிலான கேரம் போட்டிக்கு கரூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • மாணவிகள் மகாலட்சுமி, ஹர்ஷினிபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கேரம் போட் டிக்கு தகுதி பெற்றனர்.

    கரூர்

    மாநில அளவிலான கேரம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கரூரில், வருவாய் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நி லைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி மகாலட்சுமி, 8ம் வகுப்பு மாணவி ஹர்ஷினிபிரியா ஆகியோர் முதலிடம் பிடித்து மாநில அளவிலான கேரம் போட் டிக்கு தகுதி பெற்றனர். மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கண்ணன், உதவி தலை மையாசிரியர் ரமேஷ், உடற்கல்வியாசிரியர் கதிர்வேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், ஜெம் லயன்ஸ்சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்சிப் போட்டிகளை நடத்தியது.
    • பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், ஜெம் லயன்ஸ்சங்கம் ஆகியவை இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்சிப் போட்டிகளை நடத்தியது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    கேரம் சங்க தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க தலைவர் குமார், பட்டேல், ஹாக்கி அகாடமி நிறுவனர் ரமேஷ்பட்டேல், கேரம் சங்க துணைத்தலைவர் இளங்கோவன் ஆகியோர் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி, வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் பள்ளி ஆகியவை கோப்பைகளை வென்றன.

    18 வயது மாணவர்கள் பிரிவில் ஒற்றையரில் சர்வேஸ்வரர், இரட்டையரில் சர்வேஸ்வர், யுவமுகேஷ் ஆகிய எம்.எஸ்.பி பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
    • ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் விளையாட்டுத்துறை) சார்பில் நடைபெற உள்ள மாவட்ட கேரம் போட்டியில் ஆர்வமுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நடப்பாண்டுக்கான கேரம் போட்டி வரும், 29-ந் தேதி சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. மாவட்டத்தைச்சேர்ந்த 5-ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். முதல்பரிசு ஆயிரம் ரூபாய், 2வது மற்றும் 3வது பரிசு முறையே 500 மற்றும், 250 ரூபாய்.ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒருவர் ஒரு பிரிவு போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.மாணவர்கள் தங்களின் முழுவிபரங்களை sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர் மட்டுமே போட்டிக்கு அனுமதிக்கப்படுவர்.போட்டியாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கு எண், பாஸ்புக், பள்ளியில் பயில்வதற்கான படிப்பு சான்றிதழ் தலைமை ஆசிரியர்களிடம் பெற்று போட்டிக்கு வரவேண்டும். போட்டி நடக்கும் நாளன்று காலை, 8:30 மணிக்கு அரங்கில் இருத்தல் வேண்டும். தகவல்களுக்கு 7401703515 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×