என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.
    • இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன்மூலம் இந்திய அணி 2 -1 என்றகணக்கில் தொடரை கைப்பற்றியது.

    இந்த தொடரில் 2 சதம், ஒரு அரைசதம் அடித்த விராட் கோலி தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. சச்சின் 19 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ள நிலையில், கோலி 20 முறை தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார்.

    இந்த பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் 17 முறை தொடர் நாயகன் விருதை வென்று 3 ஆம் இடத்தில உள்ளார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டை சேர்ந்த முன்னாள் சாம்பியன் காசிமா கேரம் உலக கோப்பை ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார். மேலும், காசிமா இரட்டையர் பிரிவில் வெள்ளியும், அணியாக தங்கமும் வென்றார்.

    அதே சமயம் சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது.
    • இந்த தொடரில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    7 ஆவது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் மாலத்தீவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.

    சென்னை காசிமேட்டைச் சேர்ந்த கீர்த்தனா கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    கேரம் உலக கோப்பை தொடரில் மகளிர் ஒற்றையர், இரட்டையர், அணி என 3 பிரிவுகளிலும் கீர்த்தனா தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவரில் 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சிறப்பாக ஆடி சதமடித்து 106 ரன்னில் அவுட்டானார். கேப்டன் பவுமா 48 ரன்னில் வெளியேறினார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார்.

    விராட் கோலி ஜெய்ஸ்வாலுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 40 பந்தில் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 39.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றி அசத்தியது. ஜெய்ஸ்வால் 116 ரன்னும், விராட் கோலி 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.

    விசாகப்பட்டினம்:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.

    • 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.
    • குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார்.

    நடப்பு ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் உலக அளவில் இந்தியாவை சேர்ந்த 14 வயது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 6-ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்திய அளவில் அவர் முதலிடத்தில் உள்ளார்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். போட்டியில் அவர் குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளில் சதம் அடித்து சாதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் கடந்துள்ளார்.
    • இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    விசாகப்பட்டினம்:

    விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களைக் கடந்த 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ரோகித் சர்மா தான் விளையாடிய கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் மூன்று அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்து இருக்கிறார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்தும் சேர்த்து) ரோகித் சர்மா இதுவரை 505 போட்டிகளில் விளையாடி 20,000 ரன்களைக் குவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 4 வீரர்கள் மட்டுமே 20,000 சர்வதேச ரன்களைக் கடந்துள்ளனர்.

    அந்த பட்டியல்:

    சச்சின் டெண்டுல்கர்-34,357 ரன்கள்

    விராட் கோலி-27,910 ரன்கள்

    ராகுல் டிராவிட்-24,208 ரன்கள்

    ரோகித் சர்மா-20000 ரன்கள்

    • வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது.
    • ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந் தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி 7-வது முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

    போட்டியின் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதனால் வெற்றி- தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்- அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 4- 3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி அரை இறுதியில் 7 தடவை உலக கோப்பையை கைப்பற்றிய ஜெர்மனியை எதிர்கொள்கிறது. சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது.

    ரோகித் தலைமையிலான இந்திய அணி ஜெர்மனியை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது. ஜெர்மனி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது.

    உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோல்வியை சந்திக்காமல் அரை இறுதி வாய்ப்பை பெற்ற இந்தியா லீக் சுற்றில் சிலி ( 7-0), ஓமன் (17-0), சுவிட்சர்லாந்து (5-0) ஆகிய அணிகளை தோற்கடித்தது.

    ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென் ஆப்பிரிக்கா (4-0), கனடா (7-0), அயர்லாந்து (5-1) ஆகிய வற்றையும், கால் இறுதியில் பிரான்சையும் தோற்கடித்தது. இந்தியாவை போலவே ஜெர்மனியும் கால் இறுதியில் பிரான்சை பெனால்டி ஷூட் அவுட்டில் (3-1) வீழ்த்தியது. போட்டி முடிவில் 2-2 என்ற சமநிலை இருந்தது.

    13-வது முறையாக அரை இறுதியில் விளையாடும் ஜெர்மனி அணி இந்தியாவை தோற்கடித்து 10-வது தடவையாக இறுதி போட்டிக்கு நுழையும் வேட்கையில் உள்ளது.

    முன்னதாக நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் ஸ்பெயின்- அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

    5 முதல் 8-வது இடங்களுக்கான போட்டிகளில் பெல்ஜியம்- பிரான்ஸ் (மதியம் 2.30 மணி), நெதர்லாந்து-நியூசிலாந்து (மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
    • அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் உள்பட 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்தனர்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னும், ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், அலெக்ஸ் கேரி 63 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 44 ரன்கள் எடுத்தார். ஒல்லி போப் 26 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 43 ரன் பின்தங்கியுள்ளது.

    இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால் 2வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதில் வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவின் டி காக் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ரிங்கல்டன் - டிகாக் களமிறங்கினர். இதில் ரிங்கல்டன் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து டி காக் கேப்டன் பவுமா இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய டி காக் அரை சதம் கடந்தார். பவுமா 48 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மேத்யூ ப்ரீட்ஸ்கே 24, மார்க்ரம் 1 என வெளியேறினர். ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி காக் சதம் அடித்து அசத்தினார்.

    அவர் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பிரேவிஸ் 29 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து யான்சென் 17, போஸ் 9, இங்கிடி 1 என வெளியேறினர்.

    இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 47.5 ஓவரில் 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப், பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • மெஸ்ஸியின் அர்ஜெண்டினா குரூப் J-வில் இடம் பெற்றுள்ளது.
    • ரொனால்டோவின் போர்ச்சுகல் குரூப் K-வில் இடம் பெற்றுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து பிரிவுகள் பிரிக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மெஸ்ஸியின் அர்ஜெண்டினா குரூப் J-விலும், ரொனால்டோவின் போர்ச்சுகல் குரூப் K-விலும் இடம் பெற்றுள்ளன. 

     

     

     

    • கடந்த மாதம் 23-ம் தேதி மந்தனாவுக்கும் - பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
    • மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

    சாங்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

    இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

    இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார். அதில் இன்ஸ்டாகிராமில் அவர் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவன விளம்பரத்தில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் இந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பு படமாக்கப்பட்டதா என்பதும் முழுமையாக தெரியவில்லை. இதனை வைத்து நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    ×