என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    பிரிஸ்பேனில் மிரட்டல் பந்துவீச்சு: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
    X

    பிரிஸ்பேனில் மிரட்டல் பந்துவீச்சு: வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
    • அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் உள்பட 5 பேட்ஸ்மேன்கள் அரை சதம் கடந்தனர்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டு வீழ்த்தி அசத்தினார்.

    தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

    அந்த அணியின் மிட்செல் ஸ்டார்க் 77 ரன்னும், ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், அலெக்ஸ் கேரி 63 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 44 ரன்கள் எடுத்தார். ஒல்லி போப் 26 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. இதுவரை 43 ரன் பின்தங்கியுள்ளது.

    இன்னும் இரண்டு நாள் மீதமுள்ள நிலையில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவை. இதனால் 2வது டெஸ்ட் போட்டியையும் ஆஸ்திரேலியா எளிதில் வெல்லும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.

    Next Story
    ×