என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மெஸ்ஸியின் அர்ஜெண்டினா குரூப் J-வில் இடம் பெற்றுள்ளது.
    • ரொனால்டோவின் போர்ச்சுகல் குரூப் K-வில் இடம் பெற்றுள்ளது.

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    இந்நிலையில் உலக கோப்பை கால்பந்து பிரிவுகள் பிரிக்கப்பட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மெஸ்ஸியின் அர்ஜெண்டினா குரூப் J-விலும், ரொனால்டோவின் போர்ச்சுகல் குரூப் K-விலும் இடம் பெற்றுள்ளன. 

     

     

     

    • கடந்த மாதம் 23-ம் தேதி மந்தனாவுக்கும் - பலாஷ் முச்சலுக்கும் திருமணம் நடக்கவிருந்தது.
    • மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார்.

    சாங்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா. இவர் மராட்டிய மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் இந்திய அணி மகளிர் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.

    இந்த சூழலில் 29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் மத்தியபிரதேசத்தை சேர்ந்த பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவரின் திருமணம் கடந்த 23-ம் தேதி சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்த நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டடு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மந்தனா மனம் உடைந்து போனார். தந்தை பூரண குணமடைந்து திரும்ப வேண்டும். அதன் பிறகே திருமணம் என்று மந்தனா சொல்லிவிட்டார். அதனால் அவரது திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில் மந்தனாவின் வருங்கால கணவர் பலாஷ் முச்சல் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் 'ஸ்கிரீன்ஷாட்கள்' இணையத்தில் வேகமாக பரவின. முச்சலின் 'துரோகம்'தான் திருமணம் நின்றதற்கு உண்மையான காரணம் என இணையத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.

    இந்த விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிவிட்டார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார். இது பலரது மத்தியில் சந்தேகத்தை கிளப்பியது.

    இந்த நிலையில் திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார். அதில் இன்ஸ்டாகிராமில் அவர் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். தனியார் நிறுவன விளம்பரத்தில் நடித்து வீடியோ வெளியிட்டுள்ள ஸ்மிருதி மந்தனாவின் கைகளில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை. இது பேசுபொருளாகி இருக்கிறது. அதேபோல் இந்த விளம்பரம் திருமணத்திற்கு முன்பு படமாக்கப்பட்டதா என்பதும் முழுமையாக தெரியவில்லை. இதனை வைத்து நெட்டிசன்கள் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தர்ப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டார்க் 77 ரன்கள் விளாசினார். இதனால் 177 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஸ்டார்க் படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்கள் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். WTC-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் ஸ்டார்க் (1003) உள்ளார். 1020 ரன்களுடன் கம்மின்ஸ் 8-வது இடத்தில் உள்ளார்.

    முதல் 7 இடங்கள் முறையே ஸ்மித் (4358), மார்னஸ் லெபுஷன் (4350), டிராவிஸ் ஹெட் (3477), கவாஜா (3290), டேவிட் வார்னர் (2423), அலெக்ஸ் கேரி (2099), கேமரூன் கிரீன் (1634) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் WTC-ல் அதிக ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் ஸ்டார்க் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 51 போட்டிகளில் 1003 ரன்கள் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் 4 இடங்களில் அஸ்வின், ஜடேஜா, பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர். 

    • ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பிரிஸ்பேன்:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

    அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தர்ப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேரி 63 ரன்களிலும் மைக்கேல் நெசர் 16 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஸ்டார்- போலண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸ்டார் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரெண்டன் டாகெட் 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 177 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ் வென்றது
    • 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்றதன் மூலம் 20 சர்வதேச ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணி டாஸ் வென்று சாதனை படைத்துள்ளது. டாஸ் வென்ற மகிழ்ச்சியில் கேஎல் ராகுல் சிரித்தப்படி அதனை கொண்டாடினார். அதனை பார்த்த தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா சிரித்தப்படி நின்றார்.

    மைதானத்தில் பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த இந்திய வீரர்கள் ஹர்ஷித் ரானா துள்ளிக் குதித்து இடதனை கொண்டாடினார். அருகில் ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இதனை இருந்தனர். மேலும் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் இதனை சிரித்தப்படி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும் 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
    • இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.


    இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக திலக் வர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    • அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • அவரது பயிற்சியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    புது டெல்லி:

    இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது மூன்றாவது டோப்பிங் வயலேஷன் ஆகும். இது அவரது 20 ஆண்டுகால கேரியருக்கு பெரும் பின்னடைவு ஆகும்.

    அவரது பயிற்சியாளரும் தடைசெய்யப்பட்ட பொருள்களை விநியோகித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா புனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.

    • கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசல் விளையாடி வந்தார்.
    • 2026 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலத்திற்கு முன் ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா அணி விடுவித்தது.

    2026 ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக அடுத்த மாதம் டிசம்பர் 16-ந்தேதி மினி ஏலம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்கள் மற்றும் விடுவிக்கக்கூடிய வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணிகளும் வெளியிட்டது.

    கொல்கத்தா அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாடிய ஆண்ட்ரே ரசலை அந்த அணி விடுவித்தது பேசுபொருளானது. இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவித்துள்ளார். மேலும் மற்ற ஜெர்சியை போட்டு பார்ப்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. அதனால் ஓய்வு பெறுவதாக அறிவித்ததாக அவர் கூறினார்.

    இதனையடுத்து அவர் 2026 சீசனில் கொல்கத்தா அணியின் POWER COACH ஆக செயல்படவுள்ளதாகவும், உலகின் பல்வேறு தொடர்களில் தொடர்ந்து விளையாடப் போவதாகவும் ரசல் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் இவரை அணியில் இருந்து கழற்றி விட அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் ஆலோசனை வழங்கியதாக கொல்கத்தா அணியின் CEO வெங்கி மைசூர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆண்ட்ரே ரசலுக்கு தற்போது 37 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
    • கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்னும் எடுத்தன. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 531 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    531 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது. ஷாய்ஹோப் 116 ரன்னுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 319 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. ஷாய்ஹோப் 140 ரன்னிலும், அடுத்து வந்த டெவின் இம்லாக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 277 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 7-வது விக்கெட்டான ஜஸ்டின் கிரீவ்ஸ்-கேமர் ரோச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.

    ஜஸ்டின் கிரீவ்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 12-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு 2-வது செஞ்சுரியாகும். தொடர்ந்து விளையாடிய கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இருவரும் போட்டியை டிரா செய்ய உதவினர். கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது.

    தோல்வியடைய வேண்டிய போட்டியில் பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம்.
    • போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

    நடப்பு தொடரில் இந்தியாவின் பேட்டிங் சூப்பராக இருக்கிறது. விராட் கோலி, ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் ரன் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஆனால் 2-வது ஆட்டத்தில் 358 ரன்கள் குவித்த போதிலும் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சொதப்பியதால் வெற்றி வாய்ப்பை இந்தியா கோட்டை விட்டது. இரவில் பனியின் தாக்கம் இருப்பதால் பவுலர்கள் பந்தை கச்சிதமாக பிடித்து வீச முடியாமல் சிரமப்படுகிறார்கள். இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் எடுக்க முடிகிறது. அதாவது சூழல் 2-வது பேட்டிங்குக்கே சாதகமாக காணப்படுவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் 'டாஸ்' இந்தியாவை துரத்தும் துரதிர்ஷ்டமாக இருக்கிறது. கடைசி 20 ஒரு நாள் ஆட்டங்களில் தொடர்ச்சியாக டாசில் தோற்றுள்ள இந்தியாவுக்கு இன்றைய போட்டியிலாவது அதிர்ஷ்டம் அடிக்குமா என்பதை பார்க்கலாம்.

    மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் இந்த ஆண்டில் விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும். அதனால் அவர்கள் வெற்றியோடு நிறைவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முதல் இரு ஆட்டங்களில் முறையே 135 மற்றும் 102 ரன்கள் வீதம் எடுத்த விராட் கோலி 'ஹாட்ரிக்' சதம் விளாசுவாரா? என ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். விசாகப்பட்டினம், கோலிக்கு ராசியான மைதானம். இங்கு ஏற்கனவே ஒரு நாள் போட்டியில் 3 சதங்கள் அடித்துள்ள கோலி மறுபடியும் சதம் கண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம் தடுமாறும் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் இன்னும் வலிமையடையும்.

    நமது பந்து வீச்சு தான் மெச்சும்படி இல்லை. கடந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 8.2 ஓவர்களில் 85 ரன்களை வாரி வழங்கினார். ஆனால் மாற்று வேகப்பந்து வீச்சாளர் இல்லாததால் இந்த ஆட்டத்திலும் அவருக்கு இடம் கிடைக்கும். இந்திய அணி சொந்த மண்ணில் ஒரே பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை 1986-87-ம் ஆண்டுக்கு பிறகு இழந்ததில்லை. அந்த பெருமையை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    தென்ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம், மேத்யூ பிரீட்ஸ்கே, பிரேவிஸ், யான்சென் நல்ல பார்மில் உள்ளனர். முந்தைய ஆட்டத்தில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். தசைப்பிடிப்பால் அவதிப்படும் நன்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜிக்கு இடமிருக்காது என்று தெரிகிறது.

    தென்ஆப்பிரிக்க வீரர் மேத்யூ பிரீட்ஸ்கே நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு இந்தியா வலுவாக மீண்டு வரும் என்பது தெரியும். அத்துடன் இது தொடரை தீர்மானிக்கும் ஆட்டம் என்பதால் உண்மையிலேயே சிறந்த போட்டியாக இருக்கப்போகிறது. எங்களது அணியில் சில பவுலர்கள் பேட்டிங்கும் செய்வதன் மூலம் அணியின் கலவை சரியாக அமைந்துள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பிரேவிஸ், யான்சென், கார்பின் பாஷ் போன்ற வீரர்கள் எந்த தருணத்திலும் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்கள். தற்போதைய பேட்டிங் வரிசை மீது நிறைய நம்பிக்கை உள்ளது. நாளைய தினம் (இன்று) நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

    மொத்தத்தில் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டி நடக்கும் விசாகப்பட்டினத்தில் இந்திய அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற்றொரு ஆட்டம் சமனில் முடிந்தது. தென்ஆப்பிரிக்கா இங்கு இதற்கு முன்பு ஒரு நாள் போட்டியில் ஆடியதில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், லோகேஷ் ராகுல் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா

    தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ரம், குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, ரையான் ரிக்கெல்டன், டிவால்ட் பிரேவிஸ், மார்கோ யான்சென், கார்பின் பாஷ், கேஷவ் மகராஜ், லுங்கி இங்கிடி, பார்த்மேன்.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.  

    • இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்தது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

    இந்த இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போட்டியிட்டதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம்.

    விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×