என் மலர்
நீங்கள் தேடியது "ஊக்கமருந்து சோதனை"
- சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
- தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது.
தமிழகத்தின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்கனை எஸ்.தனலட்சுமி ஏற்கனவே ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 3 ஆண்டு தடையை அனுபவித்தார். கடந்த ஆண்டு மறுபிரவேசம் செய்த அவர் ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்த 64-வது தேசிய தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டத்தில் 11.36 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று கவனத்தை ஈர்த்தார்.
அதற்கு முன்பாக அவரிடம் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஊக்கமருந்து சோதனை நடத்திய போது டிரோஸ்டானோலான் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து தேசிய ஊக்கமருந்துதடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரித்தது. 2-வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் அவருக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. 27 வயதான தனலட்சுமி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.
- அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அவரது பயிற்சியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புது டெல்லி:
இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது மூன்றாவது டோப்பிங் வயலேஷன் ஆகும். இது அவரது 20 ஆண்டுகால கேரியருக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
அவரது பயிற்சியாளரும் தடைசெய்யப்பட்ட பொருள்களை விநியோகித்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா புனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.
- பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
- இவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்.
லாசானே:
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான பிரான்ஸ் வாள்வீச்சு வீராங்கனை யசாவ்ரா திபஸ் கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். அவரது காதலரான அமெரிக்க வாள்வீச்சு வீரர் ரேஸ் இம்போடன் முத்தமிட்டபோது எச்சில் மூலம் 'ஆஸ்டரின்' என்ற தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து அவரது உடலுக்குள் புகுந்து புத்துணர்ச்சி கொடுத்ததாக உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை குற்றம் சாட்டியது. ஆனால் இந்த புகாரில் இருந்து அவரை சர்வதேச வாள்வீச்சு சம்மேளனத்தின் ஒழுங்கு கமிட்டி விடுவித்தது. இதனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் அவரால் பங்கேற்க முடிந்தது.
இதை எதிர்த்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை, சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அவருக்கு 4 ஆண்டு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'முத்தமிடும் போது எச்சில் வழியாக ஊக்கமருந்தின் தாக்கம் அடுத்தவருக்கு செல்லும் என்பது உண்மை தான். ஆனால் முத்தமிடும் போது தனது காதலர் ஊக்கமருந்தை உட்கொண்டு இருந்தார் என்பது யசாவ்ரா திபசுக்கு தெரியாது. அவர் வேண்டுமென்றே ஊக்கமருந்து விதியை புறக்கணிக்கவில்லை' என கூறி குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்தது.
- 30 வயதான பஜ்ரங் புனியா 2020 -ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.
- முன்னதாக அவரை ஏப்ரல் 23-ந்தேதி இடை நீக்கம் செய்து இருந்தது.
புதுடெல்லி:
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. 30 வயதான இவர் 2020 -ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தார்.
இந்த நிலையில் தேசிய அணி தேர்வு சோதனையில் ஊக்கமருந்து சோதனை மாதிரியை சமர்ப்பிக்க மறுத்ததற்காக பஜ்ரங் புனியாவுக்கு தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை 4 ஆண்டுகள் தடைவிதித்துள்ளது.
இதே குற்றத்திற்காக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை முன்னதாக அவரை ஏப்ரல் 23-ந்தேதி இடை நீக்கம் செய்து இருந்தது. இந்த இடைநீக்கத்தால் அவர் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்கவோ அல்லது வெளிநாட்டு பயிற்சிகளைப் பெறவோ அனுமதிக்கப்படமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.
- அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன்.
ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த தடையால் நான் அதிர்ச்சி அடையவில்லை. ஏனெனில் கடந்த ஓராண்டாகவே இதற்கான முயற்சி நடந்தது. ஏற்கனவே சொன்னது மாதிரி, ஊக்கமருந்து தடுப்பு முகமை ஊழியர்கள் எனது வீட்டிற்கு வந்து மாதிரியை கேட்ட போது அவர்கள் கொண்டு வந்த மருத்துவ உபகரணங்கள் எல்லாம் பழையது. காலாவதியானது என்பதை கண்டறிந்து தான் சிறுநீர் மாதிரியை கொடுக்கவில்லை.
இந்த விவரங்களை அப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டேன். தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமைக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களின் தவறை ஏற்கவில்லை. கடந்த 10-12 ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று உள்ளேன். எல்லா விளையாட்டு தொடர், பயிற்சி முகாம்களின் போது ஊக்கமருந்து சோதனைக்காக மாதிரியை வழங்கி இருக்கிறேன்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மூலம் பழிவாங்க முயற்சிப்பதாக கருதுகிறேன். இந்த அரசாங்கத்தின் நோக்கம் எனது உத்வேகத்தை சீர்குலைத்து, என்னை தலைவணங்க வைக்க வேண்டும் என்பது தான். ஒரு வேளை நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தால், எல்லாவிதமான தடையும் நீக்கப்படும் என்று நினைக்கிறேன்' என்றார்.
- பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது.
- தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக ஸ்வியாடெக் கூறினார்.
லண்டன்:
பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக்கிடம் (போலந்து) கடந்த ஆகஸ்டு மாதம், போட்டியில் பங்கேற்காத சமயத்தில் நடத்தப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவர் ஒரு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். அத்துடன் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. பிறகு அப்பீல் செய்ததால் இடைநீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
தனக்கு விதிக்கப்பட ஒரு மாத தடையை முறைப்படி ஏற்றுக்கொள்வதாக 23 வயதான ஸ்வியாடெக் தற்போது அறிவித்த பிறகே அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தகவல் அனைவருக்கும் தெரிந்துள்ளது. 'இது தெரியாமல் நடந்த தவறு, பயண கலைப்பு, தூக்கமின்மை பிரச்சினைக்காக எடுத்த மெலடோனின் மருந்தால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது' என ஸ்வியாடெக் அளித்த விளக்கத்தை விசாரணை கமிட்டியினர் ஏற்றுக்கொண்டதால் குறைந்த தண்டனையுடன் தப்பித்தார். வருகிற 4-ந்தேதிக்கு பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்கலாம்.






