என் மலர்
நீங்கள் தேடியது "Australia India series"
- ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆர்ச்சர் - ஜோ ரூட் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 70 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது.
அதிகபட்சமாக ஜாக் கிராலி 76 ரன்னும், ஜோப்ரா ஆர்ச்சர் 38 ரன்னும், ஹாரி புரூக் 31 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தர்ப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஜேக் வெதரால்டு 72 ரன்னும், மார்னஸ் லபுஷேன் 65 ரன்னும், ஸ்டீவ் ஸ்மித் 61 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேமரூன் கிரீன் 45 ரன்னும், டிராவிஸ் ஹெட் 33 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 378 ரன்கள் குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 46 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை விட 44 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய கேரி 63 ரன்களிலும் மைக்கேல் நெசர் 16 ரன்னிலும் வெளியேறினர்.
இதனையடுத்து 9-வது விக்கெட்டுக்கு ஸ்டார்- போலண்ட் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸ்டார் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரெண்டன் டாகெட் 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 177 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
- ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது.
- சிட்னியில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆகியுள்ளன.
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று 46 ஆண்டுகள் ஆன நிலையில், நாளை தொடங்கும் 5-வது டெஸ்டில் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடைசியாக 1978-ல் நடந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தது. அதற்குப் பிறகு நடந்த 12 போட்டிகளில் 5-ல் இந்தியா தோல்வி அடைய 7 போட்டிகள் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் (கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது). அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் நீடிக்கலாம்.






