என் மலர்
கிரிக்கெட் (Cricket)

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜஸ்டின் கிரீவ்ஸ்-ன் இரட்டை சதத்தால் போராடி டிரா செய்த WI
- கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
- கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது.
கிறிஸ்ட்சர்ச்:
நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 167 ரன்னும் எடுத்தன. நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 466 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 531 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
531 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் எடுத்து இருந்தது. ஷாய்ஹோப் 116 ரன்னுடனும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. வெற்றிக்கு மேலும் 319 ரன் தேவை. கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து ஆடியது. ஷாய்ஹோப் 140 ரன்னிலும், அடுத்து வந்த டெவின் இம்லாக் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 277 ரன்னில் 6 விக்கெட்டை இழந்தது. இதனால் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்ந்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால் 7-வது விக்கெட்டான ஜஸ்டின் கிரீவ்ஸ்-கேமர் ரோச் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார்.
ஜஸ்டின் கிரீவ்ஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 12-வது டெஸ்டில் ஆடும் அவருக்கு 2-வது செஞ்சுரியாகும். தொடர்ந்து விளையாடிய கிரீவ்ஸ் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். இருவரும் போட்டியை டிரா செய்ய உதவினர். கடைசி நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 457 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டிரா ஆனது.
தோல்வியடைய வேண்டிய போட்டியில் பொறுப்புடன் ஆடிய இந்த ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.






