என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
அரியாங்குப்பம் அருகே மணவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஸ்ரீதரன் (வயது 29). டிரைவர் வேலை செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி பவித்ரா என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மது குடிக்கும் பழக்கம் உள்ள ஸ்ரீதரன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.
மேலும் குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது இல்லை. இதனால் ஸ்ரீதரனுக்கும், அவரது மனைவி பவித்ராவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவும் இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மனைவியை மிரட்டுவதற்காக ஸ்ரீதரன் வீட்டில் இருந்த எலி மருந்தை தின்றார்.
இதில் மயங்கி விழுந்த ஸ்ரீதரனை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீதரன் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை திமுக வெளியிட்டது.
புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
உப்பளம் - அனிபால்கென்னடி
மங்கலம் - சண்குமரவேல்
முதலியார்பேட்டை - எல்.சம்பத்
வில்லியனூர் - சிவா
நெல்லித்தோப்பு - கார்த்திகேயன்
ராஜ்பவன் - சிவக்குமார்
மண்ணாடிப்பட்டு - கிருஷ்ணன்
காலாப்பட்டு - முத்துவேல்
திருப்புவனை (தனி) - முகிலன்
காரைக்கால் - நாஜிம்
நிரவி திருப்பட்டினம் - நாக தியாகராஜன்
புதுவை லாஸ்பேட்டை தொகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மதவாத சக்திகளோடு இணைந்துள்ளார். இதன்மூலம் மக்களின் உணர்வுகளை அவர் புறக்கணித்துள்ளார். அதை பிரதிபலிக்கும் வகையில் வைத்தியநாதன் இங்கு வந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இணைய பலர் வந்து கொண்டுள்ளனர். இதற்கு முன் நடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த நியமன எம்.எல்.ஏ.க்களை வைத்து ஆட்சியை கவிழ்த்து பா.ஜ.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. சில துரோகிகளும் அவர்களுக்கு துணைபோய் விட்டனர். அதன் பலனை தற்போது அனுபவிக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் பதவிக்காக சென்றவர்கள் தற்போது போட்டியிட தொகுதி இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். மக்கள் அனைவரும் பா.ஜ.க.வை வெறுக்கிறார்கள். புதுவை மக்கள் அனைத்து மதத்தையும் மதிப்பவர்கள். மதவாத சக்திகள் ஒற்றுமையை குலைக்கக் கூடாது என்பதற்காக ஒருங்கிணைந்து நாங்கள் செயல்படுகிறோம்.
பா.ஜ.க.வினர் சிலரை மிரட்டியும், நிர்ப்பந்தப்படுத்தியும், சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு உள்ளிட்ட அமைப்புகளை கொண்டும், பணபலம், அதிகார பலத்தை வைத்தும் சிலரை பிடித்து ஆட்சியை கவிழ்த்தார்கள். நியமன எம்.எல்.ஏ.க்களை கொண்டு ஆட்சியை கவிழ்த்த சம்பவம் இந்தியாவில் எங்கும் நடந்தது கிடையாது. அதன் விளைவுகளை இந்த தேர்தலில் சந்திப்பார்கள்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன் லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 75). கூலி தொழிலாளி. இவருக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளது.
இவர் தினமும் வேலை செய்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொண்டமாநத்தம் சாராய கடையில் சாராயம் குடிப்பது வழக்கம்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயா என்ற வாலிபர் சாராயம் வாங்கி கொடுக்குமாறு கலியமூர்த்தியை வற்புறுத்துவார். ஒரு சில நேரங்களில் உதயாவுக்கு கலியமூர்த்தி சாராயம் வாங்கி கொடுப்பார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கலியமூர்த்தி சாராய கடைக்கு சாராயம் குடிக்க சென்றார். அப்போது உதயா சாராயம் குடிக்க பணம் தருமாறு கலியமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு ஏற்கனவே பல முறை சாராயம் வாங்கி கொடுத்து விட்டேன். அதற்கு பணம் தரவில்லை. எனவே, இப்போது சாராயம் வாங்கி தர முடியாது என்று கலியமூர்த்தி உறுதியாக தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம அடைந்த உதயா தகாத வார்த்தைகளால் திட்டி கலியமூர்த்தியை சரிமாரியாக தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கலியமூர்த்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயாவை தேடி வருகிறார்கள்.






