search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெடி விபத்து"

    • சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.
    • விபத்து குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வடபழனியில் உணவகத்தில் கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து விபத்துக்குள்ளானது.

    சிலிண்டர்கள் வெடித்ததில் கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

    இந்த விபத்தில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    காலை நேரத்தில், பரபரப்பாக இயங்கிக்கும் கொண்டிருக்கும் வடபழனி பகுதியில் திடீரென கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை.

    இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ வெடிமருந்து கிடங்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த வெடிமருந்துகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதனால் கரும்புகை பல அடி உயரத்துக்கு எழும்பியது. உடனே தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உடனே அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் உயிர்ச்சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாவதியான வெடிமருந்துகளை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட பகுதியில் தீப்பிடித்தது என்றும் காலாவதியான வெடிமருந்துகளில் நிலையற்ற ரசாயனங்கள் உள்ளன. அதில் ஏற்பட்ட உராய்வுகள் மூலம் தீ பிடித்திருக்கலாம் என்றும் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்.
    • தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவன் வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    பிளஸ் 2 படித்து வந்த மாணவன் ஆதித்ய பிரணவ் அறிவியலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். எந்த நேரமும் அறிவியல் சார்ந்த சோதனைகளை வீட்டில் செய்து வருவது வழக்கம்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட ஆராய்ச்சியின்போது வீட்டில் இருந்து கரும்புகை வருவதாக கண்ட அக்கம் பக்கத்தினர் இதுதொடர்பாக அவரது தந்தைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தாய் கொரோனா தொற்றுக்கு பலியான நிலையில், தந்தையின் அரவணைப்பில் மாணவன் வளர்ந்து வந்தார்.

    இந்நிலையில், இன்று மதியம் திடீரென மாணவனின் வீட்டில் இருந்து சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது மாணவன் சடலமாக கிடந்ததுள்ளார்.

    இதுதொடர்பான விசாரணையில், வீட்டில் இருந்த மர்ம பொருள் வெடித்து மாணவன் ஆதித்ய பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    • தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு.
    • 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக தகவல்.

    கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.

    இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம், கை கழுவும் இடத்தில் நடந்துள்ளதாக தகவல் வெளியானது. வாடிக்கையாளர் விட்டுச் சென்ற பையில் வெடித்ததாக உணவகத்தின் உரிமையாளர் கூறியதாக எம்.பி தேஜஸ்வி சூர்யா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயம் அடைந்தவர்களிடமும் தேசிய புலனாய்வு முகமே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர்,"முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. ஆனால், இது சிலிண்டர் இல்லை. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க முடியும்" என்றார்.

    • காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
    • 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் படுகாயம்.

    கர்நாடகா மாநிலம்,பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

    மேலும், உணவத்தில் சிலிண்டர் வெடித்ததா ? அல்லது வேறு ஏதேனுமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6 ஆண்கள், 4 பெண்கள் அடங்குவர்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சமும், காயம் அடைந்தோருக்கு தலா ஒரு லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.

    இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ௧௦௦-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தீ விபத்தால், அருகே உள்ள 60 வீடுகளுக்கும் தீ பரவியது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த தீபாவளி பண்டிகைக்காகவும் பட்டாசு தயாரிப்பு தொழில் தற்போது முதலே மும்முர மாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் சிவகாசியை அடுத்த எம்.மேட்டுப்பட்டியில் சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான ஆர்.ஜி.எஸ். பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 10 அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் இங்கு வேலைபார்க்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவராக தொழிற்சாலைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை மூலப்பொருட்கள் கலவை செய்யும் அறையில் இருந்து திடீரென அதிக அளவில் புகை வெளிவந்தது. இதைப்பார்த்த தொழிற் சாலைக்கு வந்தவர்கள் உள்பட அனைவரும் அவச ரம், அவசரமாக வெளியேறி னர். அடுத்த ஒருசில விநாடிகளில் அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

    தொழிலாளர்கள் பணிகளை தொடங்கு முன்பாக விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதமும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீ அருகில் உள்ள அறைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.

    முதற்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை பட்டாசு உற்பத்தி பணியின்போது எஞ்சிய மூலப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக மூலப் பொருட்கள் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும் இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
    • விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே தனியார் ப ள்ளி பேருந்தில் எடுத்து சென்ற ஆசிட் பாட்டில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

    இதில், 18 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கழிப்பறை சுத்தம் செய்வதற்காக ஆசிட் எடுத்து சென்றபோது வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
    • வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    அரூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17பேர் உயிரிழந்தனர்.

    இதில் தரும்புரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பரிதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின், என 7 பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் நேற்று அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுக்காவை சேர்ந்த தாசில்தார் கரியநாயக், சித்தராஜ், விஏஓ நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினர்.

    இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    ×