என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாகன சோதனை
    X
    வாகன சோதனை

    தவளக்குப்பம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

    தவளக்குப்பம் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்து சென்ற ரூ.1 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    பாகூர்:

    தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கடலூர் - புதுச்சேரி சாலை கொருக்கன் மேடு சந்திப்பில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் தலைமையில் போலீசார், துணை ராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற ஒரு சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் காரில் வந்த அந்தோணிராஜிடம் விசாரித்ததில் காரைக்காலில் உள்ள உறவினர் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க மறுத்து உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் துறை பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×