என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிரட்டல்
    X
    மிரட்டல்

    சாராயம் வாங்கி கொடுக்காததால் ஆத்திரம்- முதியவரை தாக்கி கொலை மிரட்டல் வாலிபருக்கு வலைவீச்சு

    வில்லியனூர் அருகே சாராயம் வாங்கி கொடுக்காத ஆத்திரத்தில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 75). கூலி தொழிலாளி. இவருக்கு சாராயம் குடிக்கும் பழக்கம் உள்ளது.

    இவர் தினமும் வேலை செய்து விட்டு அதில் கிடைக்கும் பணத்தில் தொண்டமாநத்தம் சாராய கடையில் சாராயம் குடிப்பது வழக்கம்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயா என்ற வாலிபர் சாராயம் வாங்கி கொடுக்குமாறு கலியமூர்த்தியை வற்புறுத்துவார். ஒரு சில நேரங்களில் உதயாவுக்கு கலியமூர்த்தி சாராயம் வாங்கி கொடுப்பார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கலியமூர்த்தி சாராய கடைக்கு சாராயம் குடிக்க சென்றார். அப்போது உதயா சாராயம் குடிக்க பணம் தருமாறு கலியமூர்த்தியிடம் கேட்டார். அதற்கு ஏற்கனவே பல முறை சாராயம் வாங்கி கொடுத்து விட்டேன். அதற்கு பணம் தரவில்லை. எனவே, இப்போது சாராயம் வாங்கி தர முடியாது என்று கலியமூர்த்தி உறுதியாக தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம அடைந்த உதயா தகாத வார்த்தைகளால் திட்டி கலியமூர்த்தியை சரிமாரியாக தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த கலியமூர்த்தி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உதயாவை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×