என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருபுவனை அருகே பஸ் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி

    திருபுவனை அருகே பஸ் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருபுவனை:

    விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இதயத்துல்லா மகன் ஷபியுல்லா (வயது 35). இவர் புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இவர் தினமும் காலையில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று காலை ஷபியுல்லா வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு வேலைக்கு புறப்பட்டார்.

    திருபுவனை அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் செல்லும்போது பின்னால் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கிவந்த தனியார் பஸ், ஷபியுல்லாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அந்த பஸ், சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருபுவனையை சேர்ந்த ஏழுமலை என்பவர் மீது மோதியதில் அவருக்கு வலதுகாலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×