என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பாகூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    பாகூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே கொமந்தான்மேடு வீரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (வயது 58). தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சேகர் கடந்த 2½ ஆண்டுகளாக காசநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமானதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சேகர் வீட்டின் எதிரே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×