search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ராகுல் காந்தி மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளாரா? - அமித் ஷா கேள்வி
    X

    ராகுல் காந்தி மோடிக்கு எதிராக பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளாரா? - அமித் ஷா கேள்வி

    ராபேல் முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்து வரும் நிலையில் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். #RafaleDeal #Modi #AmitShah #RahulGandhi
    புதுடெல்லி :

    பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

    இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார்.

    இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது. ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூறத்தக்கது.

    ஹாலன்டேவின் இந்த கருத்து இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி இந்தியாவிற்கு துரோகம் இழைத்துவிட்டார், காவலாளி மோடி ஒரு திருடர் என ராகுல் காந்தி மோடியை கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில், இதற்கு எதிர்வினையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார் என விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :-

    பிரதமர் மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறி வருகிறார். பாகிஸ்தான் அரசும் இதையே தான் கூறி வருகிறது. எனவே, மோடிக்கு எதிரான ராகுல் காந்தியின் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. இதனால் மோடிக்கு எதிராக சர்வதேச அளவில் பாகிஸ்தானுடன் ராகுல் காந்தி மெகா கூட்டணி அமைத்துள்ளரா ? என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் வார்த்தைப்போர் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #Modi #AmitShah #RahulGandhi
    Next Story
    ×