என் மலர்
இந்தியா
- லடாக்கில் இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
- போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
லடாக்:
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 10-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில்முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலையில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஸ்விக்கி, சொமேட்டோ ஆகியவை முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான உள்ளன.
- மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் மழை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், முன்னணி ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, சொமேட்டோவில் மழை பெய்யும் பொது உணவு டெலிவரி செய்தால் தனியாக வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. அப்புகைப்படத்தில் ஸ்விக்கியில் மழை கட்டணம் ரூ.25 என்றும் அதற்கு ஜிஎஸ்டி என்று ரூ.4.50 கட்டணம் என மொத்தமாக ரூ.29.50 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில், "மழை கடவுளான இந்திரனுக்கும் வரி போட ஆரம்பித்துள்ளார்கள். இனிமேல் வெயில் அடித்தால் அதற்கு ஒரு கட்டணம், ஆக்சிஜனுக்கு ஒரு கட்டணம், மூச்சு விடுவதர்க்கு ஒரு கட்டணம் என்று கூட வசூலிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கிண்டலடித்துள்ளார்.
- ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
- அவரது கணவரும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கர்நாடகாவில் மகளின் கண்முன்னே மனைவியை கணவன் 11 முறை கொடூரமாக குத்தி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரேகா (32) என்ற பெண் கால் சென்டரில் வேலை பார்த்து வந்துள்ளார். ரேகாவின் பரிந்துரையால் அவரது கணவர் லோஹிதாஷ்வாவும் அதே கால் சென்டரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
ரேகா மற்றும் அவரது கணவருக்கும் இது 2 அவனது திருமணமாகும். ரேகாவுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சுங்கடகட்டே பேருந்து நிலையம் அருகே ரேகாவும் அவரது மூத்த மகளும் சாலையை கடப்பதற்காக காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த லோஹிதாஷ்வாவுக்கும் ரேகாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த லோஹிதாஷ்வா தான் மறைந்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை 11 முறை கொடூரமாக குத்தி கொன்றார். இதனை நேரில் பார்த்த மூத்த மகள் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் லோஹிதாஷ்வா அங்கிருந்து தப்பி ஓடினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50% குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறினார்
- இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு.
ஜிஎஸ்டி 12%, 28% வரி அடுக்குகள் நீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு ஆகியவை அமலுக்கு வந்துள்ளது.
ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கையால் 375 பொருட்களின் விலை குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் பொருட்களின் விலை 50%க்கும் மேல் குறைத்துள்ளதாக பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறியது இணையத்தில் கிண்டலுக்கு உள்ளானது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி கிஷன், "ஜிஎஸ்டி வரி குறைப்பினால் 1 ரூபாய் பொருளின் விலை 40-45 பைசாவாகவும், 100 ரூபாய் பொருளின் விலை 45 ஆகவும் இருக்கும். இது 3 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடியின் பரிசு என்று தெரிவித்தார்.
பாஜக எம்.பி. ரவி கிஷன் பேசிய இந்த இந்த வீடியோவை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து விமர்சித்துள்ளார். அவரது பதிவில், "ரவி கிஷனுக்கு நிதியமைச்சரிடமிருந்து விரைவில் அழைப்பு வரும். பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பொய் கூறி உலக சாதனை படைத்தது வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது.
- கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர்.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ் நகரில் பிரவீன்- சந்தனா (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு கடந்த மே மாதம் 5-ந்தேதி தான் திருமணம் நடந்தது. முதலிரவு மற்றும் அடுத்தடுத்த நாட்களிலும் பிரவீன், தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை என தெரிகிறது.
இதையடுத்து சந்தனா, தனது கணவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதில் பிரவீன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அவர் மன அழுத்தம் காரணமாக தனது மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாமல் இருந்துள்ளார். இதனால் டாக்டர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்படி பிரவீனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
இருப்பினும் பிரவீன், மனைவி சந்தனாவுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அறிந்த சந்தனாவின் உறவினர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி வீடு புகுந்து பிரவீனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீன் கோவிந்தராஜ் நகர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
சந்தனா என்னை ஆண் அல்ல. திருநங்கை என கூறி அவதூறான தகவலை பரப்பினார். மேலும் சந்தனா தனது உறவினர்களை வீட்டுக்கு வரவழைத்து என்னை தாக்கினார். கடந்த ஜூன் மாதம் 5-ந்தேதி வந்து பஞ்சாயத்து பேசினர். அப்போது ரூ.2 கோடி சொத்தை சந்தனாவுக்கு எழுதி கொடுக்கும்படி கூறினர். சந்தனாவும் என்னிடம் சொத்து கேட்டு மிரட்டுகிறார்.
ஆனால் நான் கால அவகாசம் கேட்டேன். அதன்பிறகு ஆகஸ்டு 17-ந்தேதி சந்தனாவும், அவரது உறவினர்களும் என்னுடன் தகராறு செய்து என்னை தாக்கினர். அத்துடன் வீட்டில் இருந்த எனது பொருட்களை வீட்டில் இருந்து வெளியே அள்ளிப்போட்டதுடன் என்னையும் வீட்டில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
எனது தொழில்முறை வாழ்க்கையின் அழுத்தத்தால் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என கூறினாலும், சந்தனா என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார். அவரது குடும்பத்தினர், உறவினர்களும் என்னை தாக்கினர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.
- ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "புல்டோசர் நடவடிக்கை" குறித்த தான் அளித்த தீர்ப்பு தனக்கு பெரும் திருப்தியை அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆளும் வட மாநிலங்களில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சட்டவிரோத ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், மாநகராட்சிகளால் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன. குறிப்பாக இஸ்லாமியர்களின் வீடுகள் குறிவைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே 2024 நவம்பர் 13 அன்று, நீதிபதிகள் கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, புல்டோசர் நடவடிக்கை சட்டபூர்வமானது அல்ல என்று தீர்ப்பளித்து அதற்கு நாடு தழுவிய வழிகாட்டுதல்களை வகுத்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் கல்விக்குழு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் தலைமை நீதிபதி கவாய் பேசுகையில், "அந்தத் தீர்ப்பின் மையத்தில் மனிதத்தின் பிரச்னைகள் இருந்தன. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்காக, ஒட்டுமொத்த குடும்பமும் துன்புறுத்தப்படுவதுதான் அந்த வழக்கில் இருந்த முக்கியப் பிரச்னை.
இந்தத் தீர்ப்பின் பெருமை எனக்கு அளிக்கப்பட்டாலும், அதற்கு இணையான பங்கு நீதிபதி விஸ்வநாதனுக்கும் உண்டு" என்று தெரிவித்தார்.
மேலும், நாடு முழுவதும் நீதித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்துவதற்கும் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை என புரியவில்லை.
- மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
1992 இல் இந்து அமைப்பு கும்பல்களால் உத்தரப் பிரதேச அயோத்தியில் அமைந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த 2019 நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. மேலும் அதற்கு பதிலாக வேறு இடத்தில் மசூதி கட்டுவதற்காக அயோத்தி மாவட்டத்தின் சோஹாவல் தாலுகாவில் உள்ள தன்நிபூர் கிராமத்தில், மாநில சன்னி மத்திய வக்பு வாரியத்துக்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, 2020 ஆகஸ்ட் 3 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமார் ஜா அந்த நிலத்தை சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் ஒப்படைத்தார்.
மசூதி அறக்கட்டளை, மசூதி மற்றும் பிற வசதிகள் கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு 2021 ஜூன் 23 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்தது. அனால் அதன் பின் எந்த பணிகளும் இதுவரை நடைபெறவில்லை.
இதுதொடர்பாக மத்திய பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவுக்கு கடந்த செப்டம்பர் 16 அன்று அயோத்தி மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்துள்ளது.
அந்த பதிலில், மசூதி அறக்கட்டளையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
பொதுப்பணித் துறை, மாசுக்கட்டுப்பாடு, சிவில் விமானப் போக்குவரத்து, நீர்ப்பாசனம், வருவாய், நகராட்சி, மாவட்ட ஆட்சியர் மற்றும் தீயணைப்புத் துறை போன்றவற்றிலிருந்து தடையில்லாச் சான்றிதழ்கள் பெறப்படாததைக் காரணம் காட்டி இந்த நிராகரிப்பு நடந்துள்ளது.
மேலும், இந்த விண்ணப்பம் மற்றும் ஆய்வு கட்டணமாக மசூதி அறக்கட்டளை ரூ. 4,02,628 செலுத்தியுள்ளதாகவும் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூ
இந்த நிராகரிப்பு குறித்து மசூதி அறக்கட்டளையின் செயலாளர் அதர் ஹுசைன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டது.
உத்தரபிரதேச அரசு நிலத்தை ஒதுக்கியது. இந்த அரசுத் துறைகள் ஏன் தடையில்லாச் சான்றிதழ்களை வழங்கவில்லை, மேம்பாட்டு ஆணையம் ஏன் மசூதியின் திட்டத்தை நிராகரித்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்தார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ரூ.1800 கோடி மதிப்பில் ராமர் கோவில் குறுகிய காலத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த நிலையில் அதற்கு மாற்றாக வழங்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டுவதற்கு உ.பி. பாஜக அரசு சார்பில் மெத்தனம் காட்டப்படுவது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
- அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தால் விமான, ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. துர்கா பூஜைக்கான பந்தல்கள் மற்றும் சிலைகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச மழைப்பொழிவாகும்.
இந்திய வானிலை ஆய்வு மையம்அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் 98 மிமீ மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது மேகவெடிப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது.
- சமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்ட் பதிவிட்டதாக குற்றச்சாட்டு.
- மருத்துவமனையில் இருந்தவரை வெளியில் அழைத்து சேலை அணிந்துவிட்ட பாஜக-வினர்.
சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்தை பதிவிட்டதற்காக, காங்கிரஸ்காரருக்கு பாஜக தொண்டர்கள் சேலைக்கட்டிவிட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உல்காஸ்நகரைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரே (வயது 73), சமீபத்தில் பிரதமர் மோடியின் உருமாற்றம் செய்யப்பட்ட படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
அத்துடன் பொது இடத்தில் பகாராவை பிடித்து வைத்து, வலுக்கட்டாயமாக சேலை அணிவித்துள்ளனர். மேலும், அதை வீடியோ எடுத்துள்ளனர். அத்துடன் இதுபோன்று பதிவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
ஆனால், பேஸ்புக்கில் உள்ள போஸ்ட் நான் Forward மட்டுமே செய்தேன் என பகாரே தெரிவித்துள்ளார். மேலும், நான் மருத்துவமனையில் இருந்தபோது பாஜக தவைலர் சந்தீப் மாலி போன் செய்தார். மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது, சந்தீப் மாலி மற்றும் அவருடன் வந்தவர்கள் என்னை பிடித்து, போஸ்ட் குறத்து கேட்டு மிரட்டல் விடுத்தனர். நான் என்ன தவறு செய்தேன் என அவர்களிடம் கேட்டேன். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேணடும். அவர்களுடைய அட்டூழியங்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
உள்ளூர் பாஜக தலைவர் நரேந்திர சர்மா கூறுகையில் "பகாரே பிரதமர் மோடியை இழிவுப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற விசயம் நடைபெற்றால், இதேபோன்று சேலை அணிந்து விடுவோம்" என்றார்.
- மத்திய பிரதேச மாநிலத்தில் பாம்புடன் ஒருவர் ரெயிலில் ஏறியுள்ளார்.
- திடீரென பாம்பை காட்டி பணம் வசூலிக்க தொடங்கியதால், பயணிகள பயத்தில் உறைந்தனர்.
அகமதாபாத் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் வழியாக வந்துள்ளது. அப்போது மங்காலி (Mungaoli) என்ற ரெயில் நிலையத்தில் ஒருவர் ஏறியுள்ளார். ரெயில் புறப்பட்டதும், அவர் திடீரென மறைத்து வைத்திருந்த பாம்பை வெளியே எடுத்துள்ளார். இதனால் பயணிகள் பயத்தில் உறைந்துள்ளனர்.
பாம்பை காட்டி பயணிகளிடம் பணம் கேட்டுள்ளார். அவர்களும் பயந்துபோய், பணம் கொடுத்துள்ளனர். இதை ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலான அதே நேரத்தில், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்த கொண்ட அந்த நபர் மீது ரெயில்வே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ எடுத்த நபர், ரெயில்வேக்கும் புகார் அளித்துள்ளார். அதற்கு ரெயில்சேவா எக்ஸ் பக்கத்தில், ஆர்.பி.எஃப்.-க்கு உத்தரவிட மேலும், விரிவான விவரங்களை பகிரவும் எனவும் பதில் அளித்துள்ளது. அத்துடன் "உங்களுடைய பயண விவரங்கள் (PNR/ UTS no.) மற்றும் செல்போன் நம்பர் எங்களுக்கு தேவைப்படும். DM வழியாக முன்னுரிமை அளிக்கப்படும். உங்களுடைய புகாரை http://railmadad.indianrailways.gov.in இதன் மூலம் அனுப்பலாம் அல்லது விரைவாக தீர்வு பெற 139 நம்பருக்கு டயல் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளது.
- காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
- வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.
நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.
- கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
- சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் உள்ளொழுக்கு படம் வென்றுள்ளது.
71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.
நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.
ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.
நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.
தமிழ் சினிமாவில் பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ். பாஸ்கர் (சிறந்த துணைநடிகர்), ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றனர்.






