என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UAPA Act"

    • ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
    • இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன.

    2019-23 க்கு இடையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் மொத்தம் 10,440 பேர் கைது செய்யப்பட்டதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் 335 பேர் மட்டுமே குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

    உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் சமர்ப்பித்த தரவுகளின்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜம்மு-காஷ்மீரில் UAPA-வின் கீழ் அதிகபட்சமாக 3,662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 23 பேர் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தக் காலகட்டத்தில் இரண்டாவதாக உத்தரப் பிரதேசத்தில் 2,805 கைதுகள் நடந்துள்ளன. இவற்றில் 222 வழக்குகளில் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடைபெறும் பிற மாநிலங்களில் அசாம், மணிப்பூர் மற்றும் ஜார்கண்ட் ஆகியவை அடங்கும்.

    1967 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட UAPA, மத்திய அரசை ஒரு நபர் அல்லது அமைப்பை சட்டவிரோதமானது என்று அறிவிக்க அனுமதிக்கிறது மற்றும் பயங்கரவாதம் என்ற வரையறையின் கீழ் பாவிக்கப்படுகிறது. இது மற்ற வழக்குகளை போலல்லாமல் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக உரிமையை குறைக்கிறது.

    UAPA-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறுவதும் கடினமானதாகும். அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அதிகரித்து வரும் UAPA வழக்குகள் குறித்து சமூக ஆர்வலர்களும் ஜனநாயக சக்திகளும் கவலை தெரிவித்துவரும் சூழலில் அரசின் இந்த தரவு வந்துள்ளது. 

    • கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ராயப்பேட்டை பகுதியில் 3 பேர் செயல்பட்டு வருவதாக சென்னை மாநகர போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் ராயப்பேட்டை பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    அப்போது "ஹிஸ்ப் உத் தகீர்" என்ற பெயரிலான பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக ராயப்பேட்டையை சேர்ந்த டாக்டர் அமீது உசேன், அவரது தந்தை அகமது அன்சூர், தம்பி அப்துல்ரகுமான் ஆகியோர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சைபர் கிரைம் போலீசார் 3 பேரையும் வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் 3 பேரும் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது யூடியூப் சேனல் மூலமாக பயங்கரவாத இயக்கம் தொடர்பான கருத்துக்களை பதிவிட்டு பிரசாரம் செய்து ஆட்களை சேர்த்து வந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் போலீசில் சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் சமூக வலைதளங்களில் மோதலை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது.

    அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருவதை கண்டுபிடித்தனர். அப்போது ஹிஸ்ப் உத் தகிர் என்கிற பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து டாக்டர் ஹமீது உசேன் பரப்பியது தெரிய வந்தது.

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி இருக்கிறார். 3 பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.

    சென்னை போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உலகம் முழுவதுமே "கிலாபத்" என்கிற இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வரும் வகையில் பயங்கரவாத இயக்கம் செயல்பட்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் தெரிவித்த கருத்துக்கள் இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார்? என்பது பற்றிய விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    ×