என் மலர்
தேர்தல் செய்திகள்
கர்நாடகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மண்டியா, துமகூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. 2-வது கட்ட தேர்தல் தார்வார், பல்லாரி உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி கர்நாடக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வட கர்நாடகத்தில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பல்லாரியில் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு பேசியதாவது:-
மோடி மீண்டும் பிரதமரானால் என்ன கதி என்ற ஆதங்கம் எனக்குள் ஏற்பட்டுள்ளது. மோடி மீண்டும் பிரதமரானால் ஜனநாயகம் அழிந்துவிடும். நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடைபெறும். அரசியலமைப்பு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படும். இந்த தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு பா.ஜனதா டிக்கெட் வழங்கவில்லை.
ஆனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த 8 பேருக்கு டிக்கெட் கொடுத்துள்ளோம். பா.ஜனதா வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 10-க்கு மேல் தாண்டக்கூடாது. காங்கிரஸ் கூட்டணி குறைந்தது 20 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடியின மக்கள் நிம்மதியாக வாழவில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். மோடியை போல் பொய் பேசும் பிரதமரை நான் பார்த்தது இல்லை.
நாட்டின் வளர்ச்சியில் மோடியின் பங்கு என்ன?. பல்லாரியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேவேந்திரப்பா, காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். பா.ஜனதாவுக்கு வேட்பாளர்கள் இல்லாததால், தேவேந்திரப்பாவை அக்கட்சியினர் அழைத்து சென்றுவிட்டனர். அவரிடம் அதிக பணம் உள்ளது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது, அவர் என்னிடம் வந்து டிக்கெட் கேட்டார். டிக்கெட் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டேன். அதனால் அவர் பா.ஜனதாவுக்கு சென்றுவிட்டார். நான் 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்தேன். மோடியும் 5 ஆண்டுகள் பிரதமராக இருந்துள்ளார்.
நான் 5 ஆண்டுகள் எத்தனை பணிகளை செய்துள்ளேன். அதற்கு விவரங்களை வழங்க தயாராக உள்ளேன். மோடி தனது பணிகள் குறித்து விவரங்களை வழங்க தயாரா?. மோடி நாட்டில் எங்காவது இலவசமாக உணவு வழங்கி இருக்கிறாரா?. விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு பிரதமரிடம் நான் கேட்டேன். அவர் அதை கண்டுகொள்ளவில்லை.
விவசாய கடன் தள்ளுபடி செய்ய என்னிடம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் எந்திரம் இல்லை என்று சொன்னவர் எடியூரப்பா. அவர் தனது தோளில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு சித்தராமையா பேசினார். #Siddaramaiah #LokSabhaElections2019


லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி கட்சி ஆகியவை தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் தேர்தலுக்கு பின்னர் இழுபறி நிலை ஏற்பட்டால் இந்த கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனால் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த கட்சிகளை விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் முதன் முதலாக அவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளை அவர் கடுமையாக தாக்கி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் படாம் என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இது சமாஜ்வாடி கட்சி வலுவாக உள்ள இடம் ஆகும். அங்கு பேசிய அவர் இரு கட்சிகளையும் விமர்சித்தார்.
உத்தரபிரதேச மாநிலத்தை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகளும் நாசமாக்கிவிட்டன. இங்கு மறுபடியும் காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரியங்காவையும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவையும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் நியமித்து உள்ளது.
2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைக்கும்.
அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் இது நன்றாக தெரியும். சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

ஆனால் நாங்கள் மோடிக்கு பயப்படுபவர்கள் அல்ல. எங்களையும் சி.பி.ஐ.யை காட்டி மிரட்டுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடி தன்னை காவலாளி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் திருடர் என்று நான் சொல்கிறேன்.
இதே வார்த்தையை சொல்லும் தைரியம் அகிலேஷ் யாதவுக்கோ, மாயாவதிக்கோ இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ராகுல்காந்தி இவ்வாறு விமர்சித்து இருப்பது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #rahulgandhi #mayawati #akhilesh
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் வரும் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம்.
விண்ணப்பப் படிவங்களை ரூ.25,000-ஐ செலுத்தி பெற்று பூர்த்தி செய்து அன்றைய தினமே வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #ADMK #EPS #OPS

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. சராசரியாக 71.87 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தர்மபுரியில் அதிகபட்சமாக 80.49 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. தென் சென்னையில் குறைந்தபட்சமாக 56.41 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இதில் சராசரியாக 75.57 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
அதிகபட்சமாக சோளிங்கரில் 82.26 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. பெரம்பூரில் குறைந்தபட்சமாக 64.14 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
வாக்குச்சாவடிகளில் ஆங்காங்கே நடந்த அசம்பாவித சம்பவங்கள் தொடர்பாக அவ்வப்போது கேட்டுக்கொண்டே இருந்தோம். முடிவில் அவர்கள் கொடுக்கும் அறிக்கையை வைத்து அந்தந்த வாக்குச் சாவடிகளில் தேர்தல் சரியாக நடத்தப்பட்டுள்ளதா என்பதை முடிவு செய்வோம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க சிறப்பு முகாம் நடத்தினோம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 நாட்கள் முகாம் நடத்தி உள்ளோம்.
ஆனால் சிலர் வாக்காளர் பட்டியலை பார்க்காமல் கடைசி நேரத்திலும் இண்டர்நெட்டில் பார்த்தும், 1950 நம்பருக்கு போன் செய்து விசாரித்தும் ஓட்டு போட வந்துள்ளனர். முகவரி மாறி சென்றுள்ளதால் பலரது பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளன. அதிக பெயர்கள் நீக்கப்பட்டுள்ள இடங்களில் ஆய்வு நடத்த சொல்லி இருக்கிறோம்.

கே:- தர்மபுரி தொகுதி நத்தமேடு, மோட்டார் குறிச்சி 4 வாக்குச்சாவடியில் பா.ம.க. வினர் கேமராக்களை திருப்பி வைத்து, தி.மு.க. ஏஜெண்டுகளை விரட்டி விட்டு ஓட்டு போட்டார்கள். அங்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர் கோரிக்கை வைத்துள்ளாரே?
ப:- நேற்று ஒரு சில கட்சியினர் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இன்று செய்தித்தாள்களிலும் வந்துள்ளது. அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளேன்.
கன்னியாகுமரியில் ஒரு பிரச்சனை தொடர்பாக புகார் வந்துள்ளது. அதற்கும் அறிக்கை கேட்டுள்ளோம். மேலும் தேர்தல் தொடர்பாக ஏதாவது புகார் வந்தாலும் மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்புவோம். அதன்பிறகு இதுதொடர்பாக முடிவு எடுக்கப்படும்.
4 தொகுதிகளுக்கு தேர்தல் பற்றிய அறிவிப்பு 22-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
கே:- பறக்கும்படை சோதனை இனி 4 தொகுதிகளில் மட்டும் நடத்தப்படுமா அல்லது தமிழகம் முழுக்க நடத்தப்படுமா?
ப:- அந்தந்த மாவட்டங்களில் மட்டும் தான் சோதனை நடத்தப்படும். இது பற்றிய அதிகாரப்பூர்வ சிறப்பு அறிவிப்பு தேர்தல் கமிஷனில் இருந்து பின்னர் வரும்.
கே:- நடிகர் ரஜினிகாந்தின் வலது கை விரலில் மை வைக்கப்பட்டுள்ளதே?
ப:- குறிப்பிட்ட விரலில் வைக்க வாய்ப்பு இல்லை என்றால் சில நேரங்களில் வேறு விரல்களில் வைக்கலாம். இது பொதுவானது தான்.
ப:- பார்க்கலாம் இது பொதுவாக தவறுதான்.
கே:- எத்தனை இடங்களில் வாக்குகள் எண்ணப்படும்?
ப:- 45 இடங்களில் வாக்குகள் எண்ணப்படும். மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணிநேரமும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் மின்னணு எந்திரங்கள் உள்ளே வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பை அரசியல் கட்சியினர் கண்காணித்துக் கொண்டே இருக்கலாம். மே 23ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். அனைத்து மின்னணு எந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டன.
கே:- பறக்கும்படையினர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருப்பி கொடுக்கப்படுமா?
ப:- அந்தந்த மாவட்டங்களில் எங்கெல்லாம் பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அங்கு ஆவணங்களை சரியாக காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆதாரம் காட்டியவர்களுக்கு பணத்தை ஏற்கனவே திருப்பி கொடுத்துள்ளோம். தொடர்ந்து பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
வருமானத்துறையினரும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை ஆதாரத்தை காட்டினால் திருப்பி கொடுத்துவிடுவார்கள். அல்லது வருமானவரித்துறை சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கே:- சென்னை தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் எத்தனை?
ப:- வடசென்னையில் 63.47 சதவீதமும், தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
கே:- நகரப்பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக உள்ளதே?
ப:- வழக்கமாக நகரப் பகுதிகளில் ஓட்டுகள் குறைவதை நாம் பார்த்திருக்கிறோம். நகரப்பகுதிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நடத்தினோம். அதற்கு பலன் கிடைத்தது. அதனால் கூடுதலாக ஓட்டு பதிவாகி இருக்க வேண்டும். பொது மக்கள் விடுமுறையை கொண்டாட வெளியூர் சென்றதும் இதற்கு ஒரு காரணம்.
கே:- பூத் சிலிப் கொண்டு செல்லாதவர்களை பல இடங்களில் ஓட்டுபோட அனுமதிக்கவில்லையே?
ப:- பூத்சிலிப் இல்லாமல் அடையாள அட்டை எடுத்து சென்றவர்கள் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை எடுத்து செல்லாதவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections
கும்பகோணம்:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கும்பகோணத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இதனால் தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மேலும் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. தோல்வி பயத்தால் பல்வேறு இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. குறிப்பாக சொல்ல வேண்டு மென்றால் பா.ம.க வாக்குச் சாவடிகளில் கைப்பற்ற வேண்டும் சாதிய வன்முறைகளை தூண்டி விட்டு அறிக்கையை வெளியிட்டனர்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடிகளில் கைப்பற்ற வட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன சில இடங்களில் வன்முறைகளும் நிகழ்ந்துள்ளது .நேற்று நடைபெற்ற சிதம்பரம் தொகுதியில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி இடத்தில் காலை 10 மணிக்கு தலித் மக்களை வாக்களிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வன்முறையால் குடிசைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை தீ இட்டு கொளுத்தியுள்ளனர். இதனால் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் மரத்துறை, நீலத்தநல்லூர் போன்ற பகுதிகளிலும் தலித்துகள் மீது வன்முறை நடைபெற்றுள்ளது. அரசியல் ஆதாயம் தேட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது. இதை கடுமையாக முயற்சித்து இவர்கள் தோல்வி அடைந்தனர்.
அரியலூரில் நடைபெற்ற பொன்பரப்பியில் இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. மேலும் 2 ஆயிரம் வாக்குகள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 83 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இதனால் கள்ள ஓட்டு போட்டது கூட காரணமாக இருக்கலாம். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்பரப்பில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்
இது குறித்து சிதம்பரம் தேர்தல் நடத்தும் அதிகாரி அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் இன்று சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன்.
சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சிறப்பாக பணியாற்றின.
தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து விடக்கூடாது என்று பலர் பகிரங்க முயற்சியில் இறங்கினர். அதை நாங்கள் தெளிவாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளோம்.
இந்த கூட்டணியில் இணைந்த பிறகு நாங்கள் வெற்றிக்கரமாக கடந்து இருக்கிறோம். அவர்கள் செய்த வன்முறைகள் எல்லாம் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம். பா.ம.க. போன்ற ஜாதி வெறி கட்சி. பா.ஜ.க. போன்ற மதவெறி கட்சிகள் செயல்படுகிற வரை சமூக நல்லிணக்கம் சமூக ஒற்றுமை ஏற்படாது .
இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #ariyalurponparappi
உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள், இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்துடன் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மெயின்புரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர். அரசியலில் எதிரும் புதிருமான இரு தலைவர்களும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரே மேடையில் பிரசாரம் செய்தது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னர் உரையாற்றிய முலாயம் சிங், “நீண்ட காலத்திற்குப் பிறகு தானும் மாயாவதியும் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அவரை வரவேற்பதுடன், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவரை வரவேற்று, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
மாயாவதி பேசும்போது, “தலைவர் முலாயம் சிங் யாதவ், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் உண்மையான தலைவர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர். மோடி போன்று போலியான தலைவர் அல்ல” என பாராட்டினார். #MulayamMayawati #LokSabhaElections2019
சென்னை, ஏப்.19-
தமிழகம், புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடந்தது.
தேர்தலில் பயன் படுத்தப் படும் வாக்குப்பதிவு இயந் திரங்களை இடம் மாற்று வதற்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட வாக னங்கள் பயன்படுத்தப் படுவது வழக்கம். ஆனால் தமிழகத்தின் மலைப் பகுதி களில் வாக்குப்பதிவு இயந் திரங்களையும் உபகரணங் களையும் இடம் மாற்ற ஜி.பி.எஸ் தொழில்நுட்பங் களை பயன்படுத்த முடியாது.
மலை உச்சியில் உள்ள சில குக்கிராமங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வது கடின மான பணி. சில பகுதி களுக்கு வாகனங்களில் செல்ல வழியே இல்லை.
தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களி லுள்ள தொலைதூர கிராம வாக்குச்சாவடிகளுக்கும் சுமார் 300 முதல் 1100 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி மாவட் டம் பென்னாகரம் பகுதி யிலுள்ள கோட்டூர், நாமக்கல் மாவட்டம் போத மலை போன்ற பகுதிகள் பாறைகள் நிறைந்த கரடு முரடானவை.
இந்த பகுதிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங் களையும், உப கரணங்களை யும் தேர்தல் அதிகாரிகள் சாக்குப்பைகளில் கட்டி கழுதைகளிலும், குதிரை களிலும் ஏற்றி தொலைதூர வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சிலர் பொருட்களை தலை யில் சுமந்தபடி சென்றனர். இவர்கள் மலைப் பகுதிகளில் 9 முதல் 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி மற்றும் பள்ளத்துக்காடு, நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங் களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன் படுத்தப் பட்டன.
வெள்ளக் கவி கிராமம் போன்ற சில வாக்குச்சாவடிகள் அடர்ந்த மலைக் காடுகளுக்கிடையே இருப்பதால் நக்சல் தடுப்பு போலீசாரின் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் பயணம் செய்தனர். பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்பட்டது.






