என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    மோடி நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் போல் தெரிகிறது. ஆனால், சீனா அல்லது பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி போல் ராகுல் காந்தி தெரிகிறார் என குஜராத் மந்திரி குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில மந்திரி கன்பத் வசவா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தார்.

    பிரதமர் மோடி எழுந்து நின்றால் கம்பீரமான குஜராத் சிங்கம் நிற்பதுபோல் தெரிகிறது. ஆனால், ராகுல் காந்தி நின்றால் வாலாட்டும் நாய்க்குட்டி போல்  தெரிகிறார்.  சீனா ஒரு ரொட்டியை வீசினால் அவர் சீனாவுக்கு போவார்.  

    பாகிஸ்தான் வீசும் ரொட்டிக்காக பாகிஸ்தானுக்கு போவார் என கன்பத் வத்சவா செய்திருக்கும் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அவரது கருத்துக்கு குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பரபரப்பான தேர்தல் பிரசார காலங்களில் இதுபோன்ற தரக்குறைவான தனிநபர் விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். #Gujaratminister #Rahul #Rahulpuppy #GanpatVasava
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மீது அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி 22-ம் தேதி விசாரணை நடத்தவுள்ளார். #Amethi #AmethiECofficer #RahulGandhi #Rahulnomination
    லக்னோ:

    காங்கிரஸ் தலைவராக தற்போது பதவி வகிக்கும் ராகுல் காந்தி கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது பிரிட்டன் நாட்டில் உள்ள நிறுவனத்தில் சில முதலீடுகளை செய்திருப்பதாக தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

    பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் அவர் அந்த முதலீட்டை செய்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது சுட்டிக்காட்டி இருந்தன. மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற ராகுல் காந்தியின் பட்டமளிப்பு சான்றிதழில் அவரது பெயர் ’ராகுல் வின்சி’ என்ற இத்தாலிய துணைப்பெயருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில், தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவரை எதிர்த்து நிற்கும் சுயேட்சை வேட்பாளரான துருவ் லால் என்பவர், பிரிட்டன் குடிமகனான ராகுல் காந்தி நம் நாட்டு தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? என்று அந்த தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்யவும் புகார்தாரர் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுல் காந்திக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை வரும் 22-ம் தேதி நடைபெறும் என அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி ராம் மனோகர் மிஷ்ரா தெரிவித்துள்ளார். #Amethi #AmethiECofficer #RahulGandhi #Rahulnomination
    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #Ponparappi #pmk

    அரியலூர்:

    தமிழகத்தில் வன்முறையை தூண்டிவிடும் பா.ம. கட்சியின் செயலைக் கண்டித்து ஒவ்வொரு மாவட்டதலை நகரிலும் வரும் 24-ந் தேதி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். இது குறித்து அரியலூரில் அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெறும். அதேபோல் 18 தொகுதிகளில் நடத்தப்பட்ட இடைதேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.


    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அன்புமணிராமதாஸ் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதே வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. தர்மபுரி உட்பட பல்வேறு இடங்களில் வாக்குச்சாவடியை கைப்பற்ற திட்டமிட்டனர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராம வாக்கு சாவடியில் வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    மேலும் பா.ம.க.வினர் பானை சின்னத்தை போட்டு உடைத்தனர். ஆதிதிராவிடர் பகுதிக்குள் நுழைந்து பானை சின்னம் போடப்பட்ட வீடுகளை உடைத்து சேதப்படுத்திருந்தனர். இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளன.

    பத்திரிகையாளர்கள் யார்? என்று தெரியாமல் தாக்கியுள்ளனர். அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பத்திரிகையாளரை பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.

    தமிழகம் முழுவதும் பா.ம. க.வினர் வன்முறையை தூண்டி வருகிறார்கள். தேர்தல் தோல்வி பயத்தால் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அரசும், காவல் துறையும் மெத்தனம் காட்டி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் வருகின்ற 24-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையிலும், அரியலூரில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., அனைத்து தோழமைக் கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு திருமாளவளவன் கூறினார்.

    பேட்டியின்போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் கிட்டு, மேலிட பொறுப்பாளர் கோவேந்தன், துணை பொது செயலாளர் கனி அமுதன், மாவட்ட செயலாளர் செல்வநம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பா நந்தம், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் லூயிகதிரவன் உட்பட ஏராளமானோர் இருந்தனர். #thirumavalavan #Ponparappi #pmk

    நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே காரியம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியதுதான் என்று குற்றம்சாட்டினார்.



    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்தனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.

    அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.

    பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka  #Priyankainwayanad

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.#TNElections2019 #PollCodeViolation
    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  #TNElections2019 #PollCodeViolation

    இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #PollCodeViolation

    அரியலூர் மாவட்டத்தில் மோதல் நடந்த பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். #TNElections2019 #Ponparappi
    சென்னை:

    தர்மபுரியில் தேர்தலின்போது வாக்குசாவடிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், அதனால் அங்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் மனு அளித்துள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் மோதல் ஏற்பட்டதால் அங்கும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் மோசடி நடந்ததாக வந்த புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கடலூரில் 1, திருவள்ளூரில் 1, தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தவேண்டுமா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் பொது பார்வையாளரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அந்த அறிக்கை இன்று மாலை டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

    அதன் அடிப்படையில், இந்த 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டுமா? இல்லையா? என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.



    அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த இடத்தில் பிரச்சினை இல்லை. எனவே, பொன்பரப்பில் மறுவாக்குப்பதிவுக்கு அவசியம் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #Ponparappi
    பாராளுமன்ற தேர்தலில் வெளிநாட்டினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக இங்கு தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புனியாட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத்தில் ஆளும்  திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்த மோடி, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் இங்குள்ள மக்களை வந்தடையாதவாறு உங்கள் முதல் மந்திரி தடைக்கல்லாக இருந்து வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.



    மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தொண்டர்களுக்கு எதிரான அராஜகத்தை மம்தா கட்டவிழ்த்து விடுவதாக குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார்.

    மேலும், அண்டைநாடான வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமான நடிகர்கள் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ததை சுட்டிக்காட்டிய மோடி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வெளிநாட்டினர் இங்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்வது வெட்கக்கேடானது என்றும் குறிப்பிட்டார்.

    இங்கு நடந்து முடிந்த இருகட்ட வாக்குப்பதிவால் மம்தா தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார். எனவே, வெளிநாட்டில் பிரபலமானவர்களை வைத்து சிறுபான்மையினத்தவர்களின் ஓட்டுகளை கவர்ந்து விடலாம் என்ற கற்பனையில் மம்தா மிதக்கிறார் என்றும் மோடி தெரிவித்தார். #LSpolls2019 #Mamata #TMC #Modi
    4 தொகுதி இடைத்தேர்தல் மே 19ந் தேதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார். #TNAssemblyElection #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் (தனி), அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ‘மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    மே 1, 2-ந் தேதி:- ஒட்டப்பிடாரம் (தனி) தொகுதி.

    3, 4-ந் தேதி:- திருப்பரங்குன்றம் தொகுதி.

    5, 6-ந் தேதி:- சூலூர் தொகுதி.

    7, 8-ந் தேதி:- அரவக்குறிச்சி.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #TNAssemblyElection #MKStalin

    தேர்தலில் வாக்குப்பதிவின்போது ரஜினிகாந்துக்கு வலதுகையில் மை வைத்தது பற்றி  விசாரணை நடத்தப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று நடந்தது.

    நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார். இந்த தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்தபோது அவருக்கு வலதுகையில் மை வைக்கப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.

    தேர்தல் நடைமுறை விதிகளின்படி வாக்களிப்பவரின் இடது கை ஆள் காட்டி விரலில் தான் மை வைக்கப்பட வேண்டும். இடது கை விரலில் காயம் என்றாலோ மை வைக்க முடியாத சூழ்நிலை என்றாலோ அதற்கு அடுத்த விரலில் மை வைக்கப்படவேண்டும். ஒருவேளை இடது கையில் மை வைக்க முடியாதபட்சத்தில் தான் வலது கையில் மை வைக்கப்படவேண்டும்.

    ரஜினிகாந்த் வாக்களிக்கும்போது அவருக்கு மை வைத்த அலுவலர் பதற்றத்தில் அவரது வலது கையில் மை வைத்துவிட்டதாக தெரிகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் நடிகர் அஜித்துக்கு ஆள்காட்டி விரலுக்கு பதிலாக நடுவிரலில் மை வைக்கப்பட்டு விட்டது.

    அதை மீடியாவுக்கு முன்னால் காட்டக்கூடாது என்று கையின் நான்கு விரல்களையும் சேர்த்து காண்பித்தார். அதுபோன்ற ஒரு தர்மசங்கடம் ரஜினிக்கும் அவருக்கு மை வைத்த அலுவலருக்கும் ஏற்பட்டுள்ளது.



    சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முன்னணி நடிகர் என்பதால் அலுவலர் பதற்றத்தில் செய்தாரா? இதற்கு எப்படி ரஜினி சம்மதித்தார்? இது விதிமீறலில் வராதா? இது போன்ற பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

    இந்த கேள்விகளுக்கு பதில் அளித்த சத்யபிரத சாகு ‘தேர்தல் பணியில் இருந்த ஊழியர்கள், தவறுதலாக ரஜினிகாந்தின் வலது கைவிரலில் அடையாள மையை வைத்திருக்கலாம்.

    ரஜினி ஓட்டு போட வரும்போது பத்திரிகையாளர்கள் உள்பட பெருங்கூட்டம் கூடியதால் அவசரத்தில் தேர்தல் அதிகாரி இடது கைவிரலுக்கு பதில் வலது கைவிரலில் மை வைத்திருக்கலாம்.

    பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் தவறு செய்தது தொடர்பாக அறிக்கை கேட்கப்படும். மேலும், அதிக ரசிகர்களுடன் வாக்குச்சாவடி மையத்துக்கு ரஜினிகாந்த் வந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக அறிக்கை கேட்கப்படும்.

    அதேபோல் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு விதியின்படி வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது குறித்தும் அறிக்கை கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #SatyabrataSahoo #Rajinikanth

    தமிழகத்தில் மே 19-ம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு மதிமுக பாடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். #Vaiko #TNElections2019
    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று கட்சி நிர்வாகிகளுடன் திமுக  தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தர். சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

    இந்த சந்திப்புக்குப் பிறகு வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-



    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பார்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததுடன், தொடர்ந்து நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தேர்தல் பணிக்கு ஊக்கம் அளித்த திமுக தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தோம். இந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும் என்பது எங்களின் நம்பிக்கை. இதேபோல் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற மதிமுக பாடுபடும்.

    தேர்தலின்போது வன்முறை ஏற்பட்ட பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படவேண்டும். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றமாக உள்ள பொன்னமராவதியில் அமைதியை நிலைநாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaiko #TNElections2019
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆனால், அவருக்கு பக்கபலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவேகவுடா கூறியுள்ளார். #DeveGowda #Rahul
    பெங்களூரு:

    கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கி உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் பாராளுமன்றத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஜிஎஸ் பசவராஜை எதிர்த்து போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், தனது எதிர்கால திட்டம் குறித்தும் தேவேகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தேன். தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எந்த லட்சியமும் இல்லை. ஆனால், எப்போதும் கூறுவது என்னவென்றால், நான் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை.



    நான் பிரதமர் ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாக குமாரசாமி கூறியது பற்றி பெரிதுபடுத்தவில்லை. எங்கே மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிடுவாரோ என்பதுதான் என் கவலை. இதை பிரதமரின் முகத்தை பார்த்து சொல்லும் அளவுக்கு எனக்கு தைரியம் உள்ளது. ராகுல் காந்தி பிரதமராக வந்தால், நான் அவருக்கு பக்கபலமாக இருப்பேன். பிரதமர் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #DeveGowda #Rahul
    மோடியை விட தனது தந்தை தேவேகவுடா சிறந்த பிரதமராக மக்களுக்கு சேவை செய்ததாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    ஹூப்ளி:

    கர்நாடக முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவேகவுடா, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    எனது தந்தை தேவேகவுடாவின் ஆட்சிக்காலத்தில் நாடு மிகவும் அமைதியாக இருந்தது. ஒரு பயங்கரவாத தாக்குதல் கூட நடைபெறவில்லை. நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியை விட மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.



    தேவேகவுடாவின் 10 மாத ஆட்சிக்காலத்தில் என்ன நடந்தது? மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் என்ன நடந்தது? என்பதை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

    தேவேகவுடா ஆட்சியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த மோதலும் நடைபெறவில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை. நாட்டிற்குள்ளேயும் வெடிகுண்டு தாக்குதல் நடக்கவில்லை.

    பாலக்கோட் விமான தாக்குதலை பாராளுமன்றத் தேர்தலில் தனது அரசியல் ஆதாயத்துக்காக மோடி பயன்படுத்துகிறார். இதுவரை எந்த பிரதமரும் இதுபோன்று இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த சண்டையில் ஆதாயம் தேடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவேகவுடா 1996ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 1997ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி வரை பிரதமராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Kumaraswamy #DeveGowda
    ×