என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா நாளை முதல் உத்தரபிரதேசத்தில் ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 2 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இன்று 3வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    மீதமுள்ள தொகுதிகளுக்கு 5  கட்டங்களாக  ஏப்ரல் 29 மற்றும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக பிரியங்கா அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் உத்தரபிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டார்.

    இதையடுத்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பிரியங்கா, ரோட்ஷோ நடத்தி மக்களை நேரில் சந்தித்து பேசி வருகின்றார்.



    அந்த வகையில்  நாளை ககா மற்றும் காசிப்பூர் பகுதிகளில் நடைபெறவுள்ள பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றவுள்ளார்.

    இதனையடுத்து ஏப்ரல் 25 தேதி  ஜான்சி தொகுதியில் காலை 11 மணி அளவில் ரோட்ஷோ  நடத்திய பின்னர்  ஜலாவுன் தொகுதிக்கு உட்பட்ட குர்சராய் மற்றும் ஓராய் பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்துக் கொள்ளவுள்ளார்.

    மேலும் ஏப்ரல் 26ம் தேதி  மதியம் 12.30 மணி அளவில் உன்னாவோ பகுதியில் வாகன அணிவகுப்பு நடத்தி, பின்னர் இஸ்ரவுளி மற்றும் தெவா ஷெரீப் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi

    அமேதி தொகுதி மக்களுக்கு காலணிகளை வழங்குவதன் மூலம் ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என்று நினைப்பதாக ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi
    அமேதி:

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். 2 தொகுதிகளிலும் அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்தநிலையில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் உள்ள வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    அமேதி, ரேபரேலி பாராளுமன்ற தொகுதி மக்கள் சுயமரியாதை உள்ளவர்கள். அவர்கள் யாரிடமும் யாசகம் பெற மாட்டார்கள். அவ்வாறு யாராவது ஒருவர் யாசகம் பெற்றால் அவர் பா.ஜனதாவை சேர்ந்தவராகத்தான் இருப்பார்.


    உங்கள் ஓட்டுக்காக யார் உங்களிடம் யாசகம் கேட்கிறார்கள். ஸ்மிருதி இரானி வெளிஆள். அவர் அமேதி தொகுதி மக்களுக்கு காலணிகளை வழங்குகிறார். இவ்வாறு அவர் செய்வதன் மூலம் ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என்று நினைக்கிறார். ஆனால் உண்மையில் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதி மக்களைத்தான் அவமதிக்கிறார்.

    இந்த தொகுதி மக்கள் விவேகமுள்ளவர்கள். அமேதியில் உணவு பூங்கா இப்போது வரை திறக்கப்படாமல் இருக்கிறது. அதை திறக்கப்போவது யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு பிரியங்கா கூறினார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi
    தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElectrions2019 #TNBypoll #ADMKCandidates
    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு பாராளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. விடுபட்ட சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-


    சூலூர்- வி.பி.கந்தசாமி, கோவை புறநகர் மாவட்ட அம்மா பேரவை தலைவர். அரவக்குறிச்சி- வி.வி.செந்தில்நாதன், கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருப்பரங்குன்றம் - எஸ்.முனியாண்டி, அவனியாபுரம் பகுதி அதிமுக செயலாளர். ஒட்டப்பிடாரம் (தனி) - பெ.மோகன், முன்னாள் எம்எல்ஏ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர்.  #TNElectrions2019 #TNBypoll #ADMKCandidates
    வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    வாரணாசி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு வருகிற 26-ந்தேதி மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ் வாடியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இதில் வாரணாசி தொகுதியில், சமாஜ்வாடி போட்டியிடுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    இவர் பாராளுமன்ற மேல்-சபையின் முன்னாள் துணை சபாநாயகர் ஷியாம்லால் யாதவின் மருமகள் ஆவார். காங்கிரசில் இருந்து ஷாலினி யாதவ் சமீபத்தில் விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

    இதுபற்றி ஷாலினி யாதவ் கூறும் போது, எங்களது கட்சி தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையின் கீழ் பணியாற்றுவேன். அவரது வழி காட்டுதலின்படி செயல்படுவேன் என்றார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav
    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் பா.ஜனதா கட்சியில் எம்.பி. ஆக இருந்தார். அதில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது இவர் பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 15-ந்தேதி பீகார் மாநிலம் கத்திகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டு மக்களிடம் பிரசாரம் செய்தார். இது தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் கமி‌ஷனிடம் புகார் செய்யப்பட்டது.


    அது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

    இன்று காலை 10 மணி முதல் அறிக்கைகள் வெளியிட கூடாது. பிரசாரம் எதுவும் செய்யக் கூடாது என தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ளது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு அரசு துறைகளிலும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். வெளிமாநில பொது பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் உமாசங்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு உமாசங்கர் சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த உமாசங்கர், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவர் மத பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் நோயாளிகள் பலர் அவரை தேடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றனர். இதுபற்றிய தகவல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது.

    மாநில தலைமை தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அவருக்கு பதில் இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகார் பார்தி புதிய தேர்தல் பார்வையாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். #LoksabhaElections2019
    திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க-தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட உள்ளன. அ.ம.மு.க. சார்பில் சூலூர் தொகுதியில் முன்னாள் எம்.பி., சுகுமார், திருப்பரங்குன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன், ஒட்டபிடாரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரராஜ், அரவக்குறிச்சியில் பி.எச்.சாகுல் அமீது போட்டியிடுகிறார்கள்.

    தி.மு.க.வில் அரவக்குறிச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், சூலூரில் பொங்கலூர் பழனிச்சாமி, ஒட்டப்பிடாரத்தில் மூக்கையா போட்டியிடுகிறார்கள். மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது இன்று அறிவிக்க உள்ளனர்.

    இதில் தி.மு.க.வில் தொகுதி பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என ஒவ்வொரு தொகுதிக்கும் 25 பேர்களை நியமித்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், இதில் இடம் பெற்றுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலை பெற்று வீடுவீடாக வாக்காளர்களின் விபரங்களை சரிபார்த்து வருகின்றனர்.

    தொகுதியில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் அதை தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தி.மு.க. வழக்கறிஞர் அணி சார்பிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த அணியின் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சூலூர் தொகுதியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் பணி குறித்து சிறப்புரையாற்றுகிறார். ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் தொகுதியில் 27-ந் தேதியும், அரவக்குறிச்சியில் 28-ந்தேதியும், வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார். #TNByPoll #DMK
    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 10 மணி நிலவரப்படி 10.29 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. #LokSabhaElections2019 #PollingPercentage
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்தனர். காலை 10 மணி நிலவரப்படி சராசரியாக 10.29 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அசாமில் 12.36 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    பீகாரில் 12.64 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 10.36 சதவீதம், கோவாவில் 11.70 சதவீதம், குஜராத்தில் 9.99 சதவீதம், திரிபுராவில் 5.83 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 16.85 சதவீதம், சத்தீஸ்கரில் 12.58 சதவீதம், மகாராஷ்டிராவில் 6.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. ஜம்மு காஷ்மீரில் குறைந்தபட்சமாக 1.59 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

    பிரதமர் மோடி அகமதாபாத்தின் ராணிப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அவரது தாயார் ஹீராபென்மோடி ரெய்சானில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.



    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் வேட்பாளருமான சசி தரூர், திருவனந்தபுரத்தில் உள்ள பூத்தில் ஓட்டு போட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் கும்மணம் ராஜசேகரன், இடது ஜனநாயக முன்னணி சார்பில் திவாகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். #LokSabhaElections2019 #PollingPercentage
    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LoksabhaElections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அந்த தொகுதியில் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந்தேதி வாரணாசி செல்கிறார்.

    அன்று பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் பிரதமர் மோடி சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த பேரணியில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நவின் கோலி கூறுகையில், “பிரதமர் மோடியை வரவேற்பதை வாரணாசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என்றார். #LoksabhaElections2019 #PMModi
    ஜனநாயகத்தின் வலிமை வாக்காளர் அடையாள அட்டை என்றும், வெடிகுண்டைவிட அது மிகவும் சக்திவாய்ந்தது என்றும் வாக்களித்தபின் பிரதமர் மோடி குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #Modi
    அகமதாபாத்:

    பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    என் தாய் வீடான குஜராத்தில் எனது கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்ததன்மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன். கும்ப மேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதைப்போல, ஜனநாயக திருவிழாவில் வாக்கை பதிவு செய்தபின் வாக்காளர் தூய்மையானவராக உணரலாம். தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும்.



    பயங்கரவாதத்தின் ஆயுதம் ஐஇடி(வெடிகுண்டு), ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது ஓட்டர் ஐடி (வாக்காளர் அடையாள அட்டை). ஐஇடி-யை விட மிகவும் சக்தி வாய்ந்தது ஓட்டர் ஐடி. எனவே நாம் நமது ஓட்டர் ஐடியின் வலிமையை புரிந்துகொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Modi

    பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றபின் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #Modi
    அகமதாபாத்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.

    உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.



    பின்னர் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்ட பிரதமர் மோடி, அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த மோடியை, காந்தி நகர் வேட்பாளர் அமித் ஷா வரவேற்று அழைத்துச் சென்றார். #LokSabhaElections2019 #Modi
    கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #PinarayiVijayan
    கண்ணூர்:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டம்  பினராயி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.



    கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதி பாஜக வேட்பாளர் ராகவேந்திரா ஷிகாரிபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.  #LokSabhaElections2019 #PinarayiVijayan
    ×