search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்
    X

    வாரணாசி தொகுதியில் மோடி 26-ந்தேதி மனுதாக்கல்

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய உள்ளார். #LoksabhaElections2019 #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் மே 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அந்த தொகுதியில் பிரதமர் மோடி வருகிற 26-ந்தேதி வேட்புமனுதாக்கல் செய்ய உள்ளார். இது குறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறியதாவது:-

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் வருகிற 26-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக அவர் 25-ந்தேதி வாரணாசி செல்கிறார்.

    அன்று பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. பேரணியில் பிரதமர் மோடி சாலை வழியாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். இந்த பேரணியில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பேரணியில் கலந்து கொள்கிறார்கள்.

    26-ந்தேதி காலையில் காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இது குறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நவின் கோலி கூறுகையில், “பிரதமர் மோடியை வரவேற்பதை வாரணாசி மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்” என்றார். #LoksabhaElections2019 #PMModi
    Next Story
    ×