என் மலர்
தேர்தல் செய்திகள்

பனாஜி:
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.
நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.

அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நந்தர்பார் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
நான் ஆட்சிக்கு மீண்டும் வந்தபின், இட ஒதுக்கீட்டை மாற்றி அமைத்து விடுவேன் என எதிர்கட்சியினர் பொய்யான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், மோடியாகிய நான் இங்கு இருக்கும் வரை இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க இயலாது. இட ஒதுக்கீட்டிற்கு எவ்வித பாதிப்பும் நேராது. டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கார் எங்களுக்கு கொடுத்த இந்த இட ஒதுக்கீட்டை யாராலும் தொட இயலாது.
வடக்கு மகாராஷ்டிராவில் எத்தனால் தயாரிப்பிற்காக கரும்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர இயலும். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதனை நடைமுறைப்படுத்த விடமாட்டார்கள்.
மாற்றாக எரிபொருள் இறக்குமதி செய்வதன் மூலம் காங்கிரஸ் கட்சியினர் லஞ்சம் பெற முயல்கின்றனர். எத்தனால் இறக்குமதி செய்தால் எரிபொருளால் கிடைக்கும் வருமானத்தை இழக்க நேரிடும் என்பதனால் இவ்வாறு செய்ய மறுக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi
சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் அமெரிக்காவில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். கடந்த பிப்ரவரி 16-ந்தேதி சென்னை திரும்பிய விஜயகாந்த் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.
இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் வந்ததால் கூட்டணி தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் அவரை வீட்டில் சந்தித்து பேசினார்கள். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தார்.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விஜயகாந்த்துக்கு பேசுவதில் சிரமம் ஏற்பட்டது. அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே பிரேமலதா விஜயகாந்த் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டார்.
கடைசி கட்டத்தில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் விஜயகாந்த் வேனில் இருந்தபடியே ஓரிரு நிமிடங்கள் மெதுவாக பேசி சென்றார்.
இந்த நிலையில் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்கிறார். பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

இப்போது 4 தொகுதிகள் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் பிரசாரத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் அமெரிக்கா செல்வதை தள்ளிப் போடலாமா அல்லது பிரசாரத்தை தவிர்க்கலாமா என்று பிரேமலதா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. #Vijayakanth #dmdk #premalatha
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23,29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட பிம்பல்கலின் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இரங்கல் கூட்டங்களை தான் நடத்திக் கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் சென்று, பாகிஸ்தான் அதை செய்தது, இதை செய்தது என குறைக் கூறி அழுவதே அவர்கள் செயல். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதிகளை கோழைத்தனமாக கையாளும் காங்கிரஸின் அணுகுமுறையை மாற்றினோம்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை நினைத்து எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி இருக்கின்றனர். எனது தலைமையிலான அரசு வெங்காயத்தின் உற்பத்தி உயர்வு மற்றும் போக்குவரத்துக்கான வரிகளை குறைக்கவும் பாடுபடுகிறது. பயிர் விலைகளை மாற்றி இடைத்தரகர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில் காங்கிரஸ் செயல்பட்டது. இந்த இடைத்தரகர்களுக்கு எதிராக நான் போராடுவேன்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #PMModi
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனு செல்லுபடியாகும் என தெரியவந்தது. இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulNomination #Amethi
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சென்னை கோட்டையில் தலைம தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொன்பரப்பியில் 280 தலித் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள். இதுதொடர்பாக 95 பேர் தனித்தனியாக புகார் மனு தந்துள்ளார்கள். அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளேன்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 57-வது பிரிவின் படி வாக்குச்சாவடிக்கு வெளியே வன்முறை நடந்து வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். எனவே அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைய அதிகாரிகள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தலையிடவோ, ஊழல், முறைகேடு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கவோ போதிய அதிகாரம் இல்லை.
காவல்துறை மற்றும் இதர அரசு நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்கிறது. பொன்பரப்பியில் மொத்தம் 680 தலித் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 400 பேர் மதியம் 2 மணி வரை வாக்குப்பதிவு செய்துள்ளார்கள். அதன்பிறகு பதிவான வாக்குகள் அனைத்தும் கள்ள ஓட்டுகள்.

கூட்டணி கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தும் அந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வரும், துணை முதல்வரும் கூறியதில் இருந்தே அங்கு எவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்து இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் வருகிற (24-ந்தேதி) புதன்கிழமை தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அவ்வகையில், இன்று டெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #CongressCandidates

சாந்தினி சவுக் - ஜே.பி.அகர்வால்
வடகிழக்கு டெல்லி- ஷீலா தீட்சித்
கிழக்கு டெல்லி- அரவிந்தர் சிங் லவ்லி
புதுடெல்லி - அஜய் மக்கான்
வடமேற்கு டெல்லி (தனி) - ராஜேஷ் லிலோதியா
மேற்கு டெல்லி- மகாபல் மிஸ்ரா
சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுவேன் என கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறி வந்த நிலையில், அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. #LokSabhaElections2019 #CongressCandidates
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

இவ்வாறு அவர் கூறினார். #Amitshah #BJP
தமிழகத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி நீங்கலாக ஏனைய 38 தொகுதிகளுக்கு கடந்த 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், இந்த தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்திருந்தது.
அதன்பிறகு, சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகள் தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வந்தன. அதன்பின்னர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், 4 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தரராஜ், சூலூர் தொகுதியில் கே.சுகுமார், திருப்பரங்குன்றம் தொகுதியில் மகேந்திரன், அரவக்குறிச்சி தொகுதியில் சாகுல் ஹமீது ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். #TNElections2019 #TNAssemblyBypoll #AMMKCandidates
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டு, அதற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய மத்திய படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தவிர அங்குள்ள ஒரு அறையில் சட்டசபை தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை சீல் வைக்கப்பட வில்லை. இந்த நிலையில் அந்த அறைக்கு அனுமதியின்றி உதவி கலால் ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பெண் தாசில்தார் சம்பூரணம், ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேர் சென்று திரும்பி உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த மா.கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை மற்றும் அந்த கட்சியினர் நேற்று முன் தினம் இரவு மருத்துவக்கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெண் அலுவலர் சம்பூரணம் உள்பட 4 பேரும் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவினை காண்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த கலெக்டர் நடராஜன் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் அங்கு பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வேட்பாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தார். அந்த கேமரா காட்சியில், பெண் அதிகாரி சம்பூரணம் உள்பட 4 பேரும் ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்று வருவது உறுதியானது.
எனவே இது குறித்து கலெக்டர் நடராஜன், தமிழக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிக்கு அறிக்கை அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக சம்பூரணம், சீனிவாசன், ராஜபிரகாஷ், சூரியபிரகாஷ் ஆகிய 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டுள்ளார். #MaduraiConstituency
தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காண்பிக்கும் எந்திரங்கள் உள்ள அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) அருகில் உள்ள தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைத்திருந்த அறைக்குத் தான் (ஸ்டோர் ரூம்) சென்றுள்ளார். வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறை பாதுகாப்பாக உள்ளது. அங்கு யாரும் அத்துமீறி நுழையவில்லை. நுழையவும் முடியாது. இருந்த போதிலும் விதிகளை மீறித் தான் அவர் சென்றுள்ளார். முறையாக அனுமதி பெறாமல், முறையான அடையாள அட்டை காண்பிக்காமல் அறைக்குள் சென்றதால் அவர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தபால் ஓட்டுகளில் முறைகேடு செய்யத் தான் தாசில்தார் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் உள்ள வளாகத்துக்கு சென்றதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தபால் ஓட்டுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) தான் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு துணை ராணுவத்தை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கேட்கின்றனர். அனைத்து மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பில் உள்ளன. முதல் அடுக்கில் துணை ராணுவத்தினர்தான் உள்ளனர். அதனை தொடர்ந்து மாநில போலீசாரும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
அரசியல் கட்சியினரும் அங்கு சென்று பார்க்கலாம். ஏதாவது குறை இருந்தால் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கலாம். இருந்தாலும் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களிடமும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடைமுறைப்படி மின்னணு எந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது.
மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கான மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னையில் இருந்து கண்காணிக்க இணைப்பு வசதி இல்லை.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் சில பகுதியில் வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டரிடம், எந்தந்த பகுதிகளில் எத்தனை பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர், ஒரு சப்-கலெக்டர் தலைமையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புவதாக கூறி உள்ளார்.
தொடர்ந்து மே 19-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 4 சட்டசபை தொகுதி இடைதேர்தல்களுக்கான மனுதாக்கல் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #MaduraiConstituency






