search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anand sharma"

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆனந்த் சர்மா.
    • இவர் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி கொண்டுள்ளவர்கள் ஜி23 தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரும் அதில் அடக்கம். காங்கிரஸ் கட்சியில் ஆனந்த் சர்மா பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 26-ம் தேதி இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவராக முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் சர்மா இமாச்சல பிரதேச காங்கிரசின் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அக்கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ள ஆனந்த் சர்மா, கட்சிக் கூட்டங்கள் தொடர்பாக தன்னிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை, அழைக்கவும் இல்லை. இதனால் எனது சுயமரியாதை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது. இதனால் இமாச்சல பிரதேச காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், இருப்பினும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வேன் எனக்கூறியுள்ளார்.

    ஏற்கனவே, ஜம்மு காஷ்மீர் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே முன்னாள் மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத் அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • நட்டாவுடனான சந்திப்புக்கு அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.
    • நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வந்துள்ளோம்.

    டெல்லி

    காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வரும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய G-23 குழுவை சேர்ந்தவர் ஆனந்த் சர்மா. இவர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து ஆனந்த் சர்மா கூறியுள்ளதாவது: நட்டாவை சந்திக்க தமக்கு முழு உரிமை உண்டு. அவரை சந்திக்க வேண்டும் என்றால் வெளிப்படையாகவே சந்திப்பேன். இதில் அரசியல் முக்கியத்தும் எதுவும் கிடையாது.

    நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தில் இருந்து வருகிறோம். கருத்து ரீதியாக எதிப்பாளராக இருப்பதால் எங்களுக்குள் தனிப்பட்ட முறையில் பகை இருப்பதாக அர்த்தமில்லை. நட்டாவுடன் எனக்கு சமூக ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் உறவுகள் உள்ளன. இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.

    எனது மாநிலம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த ஒருவர் ஆளும் கட்சியின் தலைவராக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். ஹிமாச்சலப் பிரதேச பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் என்னையும், நட்டாவையும் பாராட்ட அழைப்பு விடுத்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே நட்டாவை ஆனந்த் சர்மா சந்திக்கவில்லை என்றும், தொலைபேசியில் கலந்துரையாடியதாகவும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று ஆனந்த்சர்மா கூறியுள்ளார். #anandsharma #rahulgandhi #pmmodi

    பனாஜி:

    காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா எம்.பி. பனாஜியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தேசிய முற்போக்கு கூட்டணி அரசும் வாஜ்பாய் அரசு போன்று தோல்வியை சந்திக்க போகின்றன. 2004-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் அரசு இந்தியா ஒளிர்கிறது என்ற தலைப்பில் பிரசாரம் செய்து தோல்வி அடைந்தனர். அதே நிலைதான் இப்போதும் ஏற்படும்.

    நான் ஒரு ஜோதிடர் அல்ல. ஆனால் நான் ஒன்றை உங்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். மோடி மீண்டும் பிரதமராக வரமாட்டார். பா.ஜனதாவை காங்கிரஸ் தோற்கடித்து அதிக இடங்களில் வெற்றி பெறும்.

    அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் எதையும் தனது 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றவில்லை. அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மோடியும், பா.ஜனதாவும் மக்களின் உணர்வுகளோடு விளையாடுகின்றனர். நாட்டின் வரலாற்றிலேயே முதன் முறையாக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை பயன்படுத்துகின்றனர் இது வெட்கப்படக் கூடியது. அரசியலுக்காக ராணுவத்தை பயன்படுத்தக் கூடிய அவரது செயல் கண்டிக்கதக்கது. இந்திய ராணுவம் நரேந்திரமோடியின் அரசுக்கு சொந்தமானது அல்ல. அது நாட்டுக்கும், மக்களுக்கும் சொந்தமானது.


    அவர்கள் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களையும், நமது வீரர்களின் தியாகத்தையும் அவமதித்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது குறித்து காங்கிரசுக்கு பா.ஜனதா பாடம் நடத்த தேவையில்லை. காங்கிரஸ் பழமை வாய்ந்த கட்சி. பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என 2 பிரதமர்களை இழந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மத்திய பிரதேச முதல் மந்திரி கமல்நாத் கூறும்போது, “மத்தியில் ஆட்சி அமைக்க தேவைப்படும் அளவுக்கு காங்கிரசுக்கு பெரும் பான்மை கிடைக்காது. எனவே தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்“ என்றார். #anandsharma #rahulgandhi #pmmodi

    சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு குறித்து மத்திய-மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். #Congress #AnandSharma #Sabarimala
    கொச்சி:

    கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மாநிலத்தில் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு மாநில பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கேரள அரசை வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா நேற்று கொச்சி வந்தார். அப்போது அவரிடம் சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு செய்யும் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து மத்திய-மாநில அரசுகள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியால் எதுவும் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார்.

    சபரிமலை தீர்ப்பை மாநில காங்கிரசார் எதிர்ப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் சர்மா, உள்ளூர் பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுடன் மத உணர்வுகளை இணைத்து ஒரு சமநிலையை உறுதி செய்வதில் அவர்கள்தான் சிறந்த நீதிபதிகள் எனக்கூறினார். முன்னதாக சபரிமலை தீர்ப்பை வரவேற்றிருந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, இதுவே இறுதியானது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Congress #AnandSharma #Sabarimala 
    ரபேல் போர் விமான விவகார சர்ச்சையில், பிரதமரின் பொய்களை மறைக்க மத்திய மந்திரிகள் போட்டி போடுவதாக காங்கிரஸ் கட்சி கூறியது. #Rafale #Congress #AnandSharma #Modi
    புதுடெல்லி:

    காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா, நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரபேல் போர் விமான பேரத்தில், பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் (எச்.ஏ.எல்.) இந்தியாவில் 108 போர் விமானங்களை தயாரிப்பதாக காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசப்பட்டது.

    ஆனால், பா.ஜனதா ஆட்சியில், எச்.ஏ.எல்.-ஐ விலக்கி விட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் கம்பெனியை சேர்த்துள்ளனர். பிரான்ஸ் அரசோ அல்லது விமானம் தயாரிக்கும் டசால்ட் ஏவியேசன் நிறுவனமோ, எச்.ஏ.எல்.-ஐ ஒதுக்கச் சொன்னார்களா?



    யாருக்குமே தெரியாமல், இந்த மாற்றத்தை செய்துள்ளனர். இந்திய விமானப்படையையோ, ராணுவ மந்திரியையோ கலந்து பேசாமல், பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார். தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்பதைக்கூட அருண் ஜெட்லியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந் தேதி, பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார். அதற்கு முன்பு, மார்ச் 28-ந் தேதிதான், அனில் அம்பானியின் நிறுவனம் பதிவு செய்யப்பட்டது.

    மேலும், விமானத்தின் விலையையும் ஒரு விமானத்துக்கு ரூ.1,670 கோடியாக உயர்த்தி உள்ளனர். இவற்றுக்கெல்லாம் பிரதமர் பதில் சொல்ல வேண்டும். ராணுவ மந்திரியோ, நிதி மந்திரியோ சொல்லத் தேவையில்லை. பிரதமரின் பொய்கள் அம்பலமாகி விட்டதால்தான் அவர் மவுனம் காக்கிறார். அவர் தப்ப முடியாது.

    நூற்றாண்டு கால மிகப்பெரிய ஊழல், ரபேல் போர் விமான ஊழல் ஆகும். இந்த ஊழலை மூடி மறைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிக்கப்படும்.

    பிரதமரின் பொய்களை மூடி மறைப்பதற்காக, எச்.ஏ.எல். நிறுவனம் போர் விமானம் தயாரிக்கும் திறனை பெற்றிருக்கவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இதன்மூலம் பொதுத்துறை நிறுவனத்தை இழிவுபடுத்தி விட்டார். இந்த விமானங்களை தயாரிக்கும் திறன் பெற்ற ஒரே நிறுவனம், எச்.ஏ.எல். மட்டுமே.

    இந்த விவகாரத்தில், அவர் மட்டுமின்றி, மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஆகியோரும் பிரதமரின் பொய்களை மறைக்க ஒருவருக்கொருவர் போட்டி போடுகிறார்கள். திரும்பத்திரும்ப பொய் சொல்கிறார்கள். இது, இந்த அரசின் இயல்பை காட்டுகிறது.

    இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார். #Rafale #Congress #AnandSharma #Modi

     
    பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்று இந்திரா காந்தி குறித்த மத்திய மந்திரி அருண்ஜெட்லி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மீதும், இந்திராகாந்தி குடும்பத்தினர் மீதும் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    அதேபோல் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை போன்றவர் இந்திராகாந்தி என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கருத்து தெரிவித்திருந்தார்.

    பிரதமர் மோடி மற்றும் அருண்ஜெட்லியின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மிக உயர்ந்த தலைவர். நெருக்கடி நிலை குறித்து அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரிகள் தேர்தல் நடத்துவது இல்லை. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை வாபஸ் பெற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தினார். அதில் தோல்வியை தழுவினாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.


    ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா பள்ளியில் படித்த அருண்ஜெட்லி சர்வாதிகாரி ஹிட்லரையும், அவரது கொள்கைகளையும் போற்றுபவர். கடந்த 1980-ம் ஆண்டு மக்கள் மீண்டும் இந்திரா காந்திக்கு பெரும்பான்மை ஆதரவு அளித்தனர். மக்கள் மனதில் இன்னும் இந்திரா காந்தி ஹீரோவாக உள்ளார்.

    பிரதமர் மோடி தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜீவாலா கூறியதாவது:-


    முகலாய மன்னர் அவுரங்க சீப்பையை விட மோசமான சர்வாதிகாரியாக மோடி ஆட்சி நடத்துகிறார். அவர் தற்போது 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். இன்றைய அவுரங்க சீப்பான மோடி நாட்டின் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ளார். தனது சொந்தக் கட்சியான பா.ஜனதாவிலும் அவர் இதைத் தான் செய்துள்ளார்.

    தனது தோல்விகளையும், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மூடி மறைப்பதற்காக காங்கிரஸ் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். இதற்காக வரலாற்றுடன் அவர் விளையாடுகிறார். ஆனால் தாமும் விரைவில் வரலாறு ஆகப் போகிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார்.

    ஜனநாயகம் பற்றி தனக்கு காங்கிரஸ் பாடம் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். அவுரங்கசீப் யாரிடம் இருந்தும் ஒரு போதும் பாடம் கற்றதில்லை. சர்வாதிகாரிகள் யாரிடம் பாடங்களை கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வரலாறுதான் தக்க பாடங்களை கற்பிக்கும். மோடிக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

    மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று மாநிலங்களை பிரதமர் மோடி மிரட்டுகிறார். நாட்டில் கடந்த 49 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. கடந்த 49 மாதங்களில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பது தெரிந்து விட்டது.

    வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் திருப்பி கொண்டு வரப்படவில்லை. மோடி ஆட்சியில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது.

    நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக அதில் இடையூறுகளை ஏற்படுத்தும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

    43 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கு ஜனதா கட்சியே காரணம். அந்த கட்சி வசதி படைத்தவர்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது. எனவே ஏழைகள், தலித்துகள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கவே அப்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. மோடியின் அரசு பெரு முதலாளிகளை பாதுகாக்கிறது.

    1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு வறுமைக்கு எதிரான போரை நடத்தியது. வங்கிகளை நலிவடைந்த மக்களும் பயன்படுத்தும் உரிமையை பெற்றுத் தந்தது. ஆனால் மோடியின் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுகின்றன.

    தங்களை எதிர்ப்போருக்கு கொலை, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுப்போரை மோடி பின்பற்றுகிறார். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக நாட்டில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Modi #AnandSharma #RandeepSurjewala
    ×