search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி
    X

    டெல்லி கிழக்கு தொகுதியில் பாஜக சார்பாக கம்பீர் போட்டி

    பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். #Gambhir #bjp #parliamenetelection
    டெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர். இவர் தோனி தலைமயிலான 2011, 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் விளையாடினார். பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய காரணம். ஐபிஎல் போட்டிகளில் இவர் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். தற்போது இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி உள்ளார். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பிரதமர் மோடியின் கொள்கையை பார்த்து பாஜகவில் இணைந்ததாகவும். மக்களுக்கு சேவை செய்வதே தனது குறிக்கோள் என்றும் இவர் கூறி இருந்தார்.

    பாஜகவில் இணைவதை பெருமையாக கருதுவதாக இவர் தெரிவித்தார். இந்த நிலையில் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் டெல்லியை சேர்ந்தவர் என்பதால் அங்கு இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் லோக்சபா தேர்தலில் இவர் பாஜக வேட்பாளர்கள் சார்பாக பிரச்சாரம் செய்ய இருக்கிறார். #Gambhir #bjp #parliamenetelection
    Next Story
    ×