search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nomination papers"

    அமேதி பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டார். #LokSabhaElections2019 #RahulNomination #Amethi
    அமேதி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாராளுமன்றத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் சில முக்கிய தகவல்கள் முறையாக இல்லை என சுயேட்சை வேட்பாளர் துருவ் லால் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தார்.

    இங்கிலாந்து குடியுரிமை, இங்கிலாந்தில் நிறுவனம் நடத்தியது மற்றும் 2003 மற்றும் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கால சொத்து விவரம், கல்வித் தகுதி மற்றும் பெயர் தொடர்பாக ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் முறையான தகவல்கள் இல்லை என அதில் சுட்டிக்காட்டி உள்ளார். இதையடுத்து, ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டது.



    அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி இன்று விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியின் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தார். ராகுல் காந்தியின் குடியுரிமை தொடர்பான குற்றச்சாட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ராகுல் காந்தியின் வேட்பு மனு செல்லுபடியாகும் என தெரியவந்தது. இதையடுத்து வேட்பு மனு ஏற்கப்பட்டது.

    இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #RahulNomination #Amethi
    குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித் ஷா, இன்று பேரணியாகச் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #AmitShah #LokSabhaElections2019
    காந்திநகர்:

    பாராளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியானது, பாஜக மூத்த தலைவர் அத்வானி 6 முறை வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் இந்த முறை போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், கட்சியின் தேசிய தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அமித் ஷா முதல் முறையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்த அமித் ஷா, இன்று காலை அகமதாபாத் வந்தார். அங்கு சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கூட்டணியின் செல்வாக்கை காட்டும் வகையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமித் ஷாவுடன் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், கூட்டணி தலைவர்கள் உத்தவ் தாக்கரே, பிரகாஷ் சிங் பாதல், ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பலர் பங்கேற்று உரையாற்றினர்.



    இந்த பொதுக்கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து ஆதரவாளர்களுடன் பேரணியாக புறப்பட்ட அமித் ஷா, காந்திநகர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.  #AmitShah #LokSabhaElections2019
    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. #ThiruvarurByElection
    திருவாரூர்:

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (வியாழக் கிழமை) தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

    தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் வாகன சோதனையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    எந்தவித அசம்பாவித சம்பவமும் இன்றி தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான நிர்மல்ராஜ் தெரிவித்தார்.#ThiruvarurByElection
    மிசோரம் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், முதல்வர் லால் தன்ஹாவ்லா வேட்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #MizoramElection #MizoramCM
    ஐசால்:

    நாற்பது தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்வு செய்வதற்காக வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.



    இந்த தேர்தலில் செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த முதல்வர் லால் தன்ஹாவ்லா, இன்று செர்சிப் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.  ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், முதல்வரால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய முடியவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.

    இதுபற்றி கூடுதல் துணை கமிஷனர் கூறுகையில், ‘செர்சிப் நகரில் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள துணை கமிஷனர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்து வருவதால், முதல்வர் தனது வேட்பு மனு தாக்கல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாம். இன்று மனு தாக்கல் செய்ய வேண்டாம் என யாரும் அவரிடம் கூறவில்லை’ என்றார். #MizoramElection #MizoramCM
    ×