என் மலர்

  செய்திகள்

  மிசோரம் மாநிலத்தில் முதல்வரின் வேட்பு மனு தாக்கல் தாமதம்
  X

  மிசோரம் மாநிலத்தில் முதல்வரின் வேட்பு மனு தாக்கல் தாமதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிசோரம் மாநிலத்தில் தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், முதல்வர் லால் தன்ஹாவ்லா வேட்பு மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. #MizoramElection #MizoramCM
  ஐசால்:

  நாற்பது தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 15-ம் தேதிக்குள் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்வு செய்வதற்காக வரும் 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தலில் செர்சிப் மற்றும் சாம்பாய் தெற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த முதல்வர் லால் தன்ஹாவ்லா, இன்று செர்சிப் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருந்தார்.  ஆனால், தலைமைத் தேர்தல் அதிகாரியை நீக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் தீவிரமடைந்திருப்பதால், முதல்வரால் இன்று வேட்பு மனுதாக்கல் செய்ய முடியவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை மறுதினம் கடைசி நாள் ஆகும்.

  இதுபற்றி கூடுதல் துணை கமிஷனர் கூறுகையில், ‘செர்சிப் நகரில் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள துணை கமிஷனர் அலுவலகம் அருகே போராட்டம் நடந்து வருவதால், முதல்வர் தனது வேட்பு மனு தாக்கல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாம். இன்று மனு தாக்கல் செய்ய வேண்டாம் என யாரும் அவரிடம் கூறவில்லை’ என்றார். #MizoramElection #MizoramCM
  Next Story
  ×