search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை
    X

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை

    தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    புதுடெல்லி:

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து. இவர் பா.ஜனதா கட்சியில் எம்.பி. ஆக இருந்தார். அதில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தற்போது இவர் பஞ்சாப் மாநிலத்தில் மந்திரியாக இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 15-ந்தேதி பீகார் மாநிலம் கத்திகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மதத்தின் பெயரால் ஓட்டு கேட்டு மக்களிடம் பிரசாரம் செய்தார். இது தேர்தல் விதிமுறை மீறல் என தேர்தல் கமி‌ஷனிடம் புகார் செய்யப்பட்டது.


    அது குறித்து விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது.

    இன்று காலை 10 மணி முதல் அறிக்கைகள் வெளியிட கூடாது. பிரசாரம் எதுவும் செய்யக் கூடாது என தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தியுள்ளது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu
    Next Story
    ×