என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பாராளுமன்றத்துக்கு 6 மற்றும் 7 வது கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி 6 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு நடைபெற்று வருகிறது. #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு வருகிற 12-ந்தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    அதுபோல வருகிற 19-ந்தேதி 59 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்த இரு கட்ட தேர்தலுக்காக 118 தொகுதிகளில் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இந்த 118 தொகுதிகளில் கணிசமான இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று வியூகம் அமைத்துள்ளனர்.

    அதற்காக அவர்கள் இருவரும் இந்த 118 தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி பா.ஜனதா தலைவர் அமித்ஷா 11 கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக 5 பேரணிகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி 6 பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பேச ஏற்பாடு நடந்து வருகிறது. இது தவிர 10-க்கும் மேற்பட்ட சிறிய கூட்டங்களிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.


    மோடி-அமித்ஷா இருவரும் ஏற்கனவே திட்டமிட்டதை விட கூடுதலாக பல இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளனர். அமித்ஷா இதுவரை 290 தொகுதிகளில் பிரசாரம் செய்துள்ளார்.

    பிரசாரம் செய்ய கடைசி நாளான 17-ந்தேதிக்குள் மேலும் 10 இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். மோடியும் இதே அளவுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் காங்கிரஸ் தலைவர்களும் கூடுதல் இடங்களில் பேசுவதற்கு முடிவு செய்துள்ளனர். #Loksabhaelections2019 #BJP #NarendraModi
    மக்களவை தொகுதியில் 50% வாக்குகளை விவிபெட்டுடன் எண்ண வேண்டிய எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #VVPAT #Supremecourt
    புது டெல்லி:

    மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில்  இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவாகும் 50% வாக்குகளை விவிபேட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் மனு அளித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.   #VVPAT #Supremecourt
    தமிழகத்தில் அதிக மழை பெய்தும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். #KamalHaasaan

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார்.

    நேற்று நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் பல்வேறு பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது குடிநீர். இதனை தீர்க்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கு குடிநீர்தான் முக்கியம். குடிமராமத்து செய்யாமலேயே செய்ததாக கூறி ஆட்சியாளர்கள் கணக்கு காட்டுகின்றனர். மக்கள் மீது நேசம் இல்லாமல், அவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஆட்சி நடக்கிறது.

    ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மழை அதிகமாக பெய்கிறது. இதை நான் சொல்லவில்லை. விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. ஆனால் குடி நீருக்காக தண்ணீரை அரசு பாதுகாப்பதில்லை.

     


     

    தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களை விலைக்கு வாங்க வசதியாக அவர்களை ஏழைகளாகவே ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழிய வேண்டும். அவர்களிடம் பணம் உள்ளது. எங்களிடம் இல்லை. மக்களாகிய நீங்கள்தான் தலைவர்கள். அரசியல்வாதிகள் உங்களது சேவகர்கள்.

    மக்களை நம்பிதான் நான் களம் இறங்கி இருக்கிறேன். உங்கள் ஓட்டுகளை விலை கொடுத்து விடாதீர்கள். மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதியாக ஏற்படும். அதற்கான விதைகள் தூவுவோம். மக்களின் அன்பு எங்களுக்கு அதிகமாக உள்ளது.

    உங்கள் குழந்தைகளுக்காக நான் பேசுகிறேன். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்ய தொடங்குங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasaan

    உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையின் காரணமாக வருகிற 23-ந்தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #EdappadiPalaniswami #ADMK #ThangaTamilselvan

    மதுரை:

    அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கி உள்ளனர்.

    ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பியபோது இது போன்ற உத்தரவு வந்திருந்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள். இனி என்ன செய்தாலும் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது.

     


    வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட வேண்டியதுதான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும்.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை நடிகரைபோல செயல்படுகிறார். முதல்-அமைச்சர் பழனிசாமி எப்படி பிரசாரம் செய்தாலும் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி.

    ஜெயலலிதா மரணத்தின் மர்மம், பொள்ளாச்சி, கொடநாடு விவகாரம் குறித்து அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #ADMK #ThangaTamilselvan

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரப்பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, ராஜீவ் காந்தி குறித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் மோடி மீது புகார் அளித்துள்ளனர். #PMModi #Congress
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி  துவங்கிய பாராளுமன்ற தேர்தலின் 5 கட்டங்கள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 2  கட்டங்களாக  மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றியபோது, 'ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்–1’ ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது' என கூறினார்.

    மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக நேற்று  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்தனர்.

    அப்போது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். #PMModi #Congress
    ராமாயணம், மகாபாராதத்தில் ரத்தம் இல்லையா, யுத்தம் இல்லையா? என்று இந்து மதத்தை இழிப்படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு ‘பேஷன்’ ஆகி விட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #fashionforcommunists #derogatorylanguage #Hindureligion #Modi
    கொல்கத்தா:

    இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்னும் பொருள்படும் வகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருவது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘ராமாயணம், மகாபாரதத்தில் இல்லாத வன்முறையா? அவற்றில் இல்லாத போர் முறைகளா?’ என குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு இன்று பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு தற்போது பேஷன் ஆகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

    மேற்கு வங்காளம் மாநிலம், ஜக்ராம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் மிட்னப்பூர் மாவட்டத்துக்கு பிரசாரம் செய்ய சென்றபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்ட 3 பேரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்ததை இன்றைய பொதுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, ’இந்த மேடையில் நானும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடப் போகிறேன்.

    மம்தா பானர்ஜிக்கு துணிச்சல் இருந்தால் என்னை பிடித்து சிறையில் போடட்டும். அதன் மூலமாவது இந்த மாநிலத்து மக்களுக்கு திரிணாமுல் கட்சியின் ஆட்சியில் இருந்து விமோசனம் கிடைக்கட்டும்’ என்றார்.

    ராமாயணம், மகாபாராதத்தில் ரத்தம் இல்லையா, யுத்தம் இல்லையா? என்று இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு ‘பேஷன்’ ஆகி விட்டது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். #fashionforcommunists #derogatorylanguage #Hindureligion #Modi
    முன்னணி கிரிக்கெட் வீரர் மற்றும் ‘தல’ என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி தொகுதியில் மனைவியுடன் சென்று வாக்களித்தார். #MSDhoni #LSPolls2019
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 2வது கட்டமாக நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையடுத்து இன்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்காளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கலந்துக் கொண்டார்.



    இதனையடுத்து இன்று காலை,  ஜார்க்கண்ட்டின் ராஞ்சி தொகுதியில்  வாக்களிக்க வேண்டி,  சிறப்பு தனி விமானத்தின் மூலம் சென்னையில் இருந்து ஜார்க்கண்ட் வந்தடைந்தார்.

    அதன் பின்னர் தனது மனைவி சாக்‌ஷியுடன் ராஞ்சி தொகுதியில் உள்ள ஜேவிஎம் ஷியாமலி பள்ளிக்கு சென்று வாக்களித்தார். மேலும்  தோனி தனது மகள் சைவாவை தோளில் தூக்கி வந்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தோனி பேசவில்லை. உடனடியாக அங்கிருந்து தனது குடும்பத்தாரை காண சிமாலியா பகுதிக்கு காரில் புறப்பட்டார். #MSDhoni #LSPolls2019 
    பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா விதிமுறை மீறியதாகவும் அவர்கள் மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. #PMModi #Amitshah

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் பலமுறை தேர்தல் கமி‌ஷனில் புகார் அளித்து இருந்தது.

    ஆனால் தேர்தல் கமி‌ஷன் காங்கிரசின் இந்த புகார்களை நிராகரித்து தள்ளுபடி செய்தது. மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்று தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

    இந்த நிலையில் மோடி, அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமி‌ஷனுக்கு எதிராக இன்று முறையிட்டது.

    அசாம் மாநிலம் சில்சார் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதாதேவ் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

     


     

    அமித்ஷா பேசிய அதே வி‌ஷயத்தை மற்றொரு நபர் பேசி இருக்கிறார். ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஒருதலைபட்சமாக தேர்தல் கமி‌ஷன் செயல்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எம். சிங்கி ஆஜரானார். அப்போது மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.

    அப்போது ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 8-ந்தேதி விசாரிக்கிறது. #PMModi #Amitshah

    ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் பகுதியில் வசிக்கும் ஒருவர், 105 வயது நிரம்பிய தன் தாயை தோளில் சுமந்து வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. #LSPolls2019 #Oldwomanvote
    ராஞ்சி:

    பாராளுமன்ற தேர்தல் 5வது கட்டமாக இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

    மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் தன் மனைவி காயத்ரியுடன் ஜெய்ப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். மத்திய மந்திரியும் ஹசாரியாபாக் தொகுதி பாஜக வேட்பாளருமான ஜெயந்த் சின்கா ஜார்க்கண்டில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, லக்னோ மாண்டிசோடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்நிலையில் பொது மக்களும் காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து, மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். 



    அந்த வகையில்  ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி எண் 450க்கு, வாக்காளர் ஒருவர் தனது 105 வயதான தாயை தோளில் சுமந்து ஓட்டுப்போட வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். இந்த காட்சி பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    இந்த 5ம் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 1 மணி நிலவரப்படி சராசரியாக  31.29% வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. #LSPolls2019 #Oldwomanvote  
    தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து சிதறி விடும் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

    பிரதமர் மோடி இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். நீட் தேர்வு ரத்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், மாநில பட்டியலில் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளது.

    மோடியின் நடவடிக்கையால் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்டவைகள் அழிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சி 5 ஆண்டுகள் பின்னால் சென்று விட்டது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல.

    தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே சமயத்தில் தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து சிதறி விடும். அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் அவர்கள் கூட்டணி. ஆனால் நமது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    பாராளுமன்றத்துக்கு ஐந்தாம் கட்டமாக இன்று நடைபெற்றுவரும் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி மேற்கு வங்காளத்தில் மிக அதிகமாகவும் காஷ்மீரில் மிக குறைவாகவும் வாக்குகள் பதிவானது. #Phase5polling #pollingpc #LokSabhaElections
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களால தேர்தல் நடந்து வருகிறது. ஏப்ரல் 11-ந்தேதி 91 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18-ந்தேதி 96 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 23-ந்தேதி 116 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 29-ந்தேதி 71 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற்றது.

    இன்று (திங்கட்கிழமை) 5-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), ராஜஸ்தான் (12), மேற்கு வங்காளம் (7), மத்திய பிரதேசம் (7), பீகார் (5), ஜார்க்கண்ட் (4), காஷ்மீர் (2) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும் 674 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ஜெயந்த் சின்கா, அர்ஜுன்ராம் மேக்வால், வீரேந்திர குமார், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், சத்ருகன்சின்காவின் மனைவி பூனம் சின்கா, முன்னாள் முதல்-மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பாபுலால் மாரண்டி ஆகியோர் இன்று களத்தில் இருப்பவர்களில் முக்கியமானவர்கள். 51 தொகுதிகளிலும் 8 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 96 ஆயிரத்து 88 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. தொடக்கம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.



    பிற்பகல் ஒரு மணி நிலவரப்படி சராசரியாக 31.29 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 39.26 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

    அதற்கு அடுத்தபடியாக ஜார்கண்ட் மாநிலத்தில் 37.24 சதவீதம் வாக்குகளும் ராஜஸ்தானில் 33.82 சதவீதம் வாக்குகளும் மத்தியப்பிரதேசத்தில் 31.46 சதவீதம் வாக்குகளும் பதிவாகின. உத்தரப்பிரதேசத்தில் 26.53 சதவீதம் வாக்குகளும் பீகாரில் 24.49 சதவீதம் வாக்குகளும் மிகவும் குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 6.54 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. #Phase5polling #pollingpc #LokSabhaElections 
    வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளரான தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சொன்னபடியே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். #TejBahadurYadav #Samajwadi
    புது டெல்லி:

    பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

    இதையடுத்து முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.  வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.



    இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது.  இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.  வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் தேஜ் கூறுகையில், ‘வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது உறுதி. எந்த சூழலிலும் தேர்தலை விட்டு விலகப்போவதில்லை. நிச்சயம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’ என கூறியிருந்தார்.

    சொன்னபடியே தேஜ் இன்று சுப்ரீம் கோர்ட்டில், தனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததை  எதிர்த்து தேர்தல் ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.  #TejBahadurYadav #Samajwadi
    ×