என் மலர்
செய்திகள்

சொன்னபடி சுப்ரீம் கோர்ட் சென்ற பாதுகாப்புப்படை வீரர் - தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குப்பதிவு
வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளரான தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து சொன்னபடியே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்துள்ளார். #TejBahadurYadav #Samajwadi
புது டெல்லி:
பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது.

இதையடுத்து முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக முன்னதாக தெரிவித்திருந்தார். வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் தேஜ் கூறுகையில், ‘வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது உறுதி. எந்த சூழலிலும் தேர்தலை விட்டு விலகப்போவதில்லை. நிச்சயம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’ என கூறியிருந்தார்.
சொன்னபடியே தேஜ் இன்று சுப்ரீம் கோர்ட்டில், தனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தேர்தல் ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். #TejBahadurYadav #Samajwadi
Next Story