என் மலர்
தேர்தல் செய்திகள்
திண்டுக்கல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் 7 லட்சத்து 43 ஆயிரத்து 516 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 74 ஆயிரத்து 717 பெண் வாக்காளர்களும் 152 இதரர் என மொத்தம் 15 லட்சத்து 18 ஆயிரத்து 385 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
இதே போல் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 508 ஆண்கள், 1 லட்சத்து 14 ஆயிரத்து 204 பெண்கள், இதரர் 4 என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 716 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் இது வரையில் 13 ஆயிரத்து 620 மாற்று திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 26 பறக்கும்படைகள், 8 நிலையான கண்காணிப்பு குழுக்கள் என 34 குழுக்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இக்குழுக்கள் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு ரூ. 52 லட்சத்து 81 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு குழுக்களால் பணமோ, பொருளோ கைப்பற்றப்பட்டதில் ஆட்சேபணை இருந்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் மேல் முறையீடு செய்யலாம்.
வாக்காளர்களின் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் மீறல் தொடர்பான புகார்களை ஆதாரங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கலாம். இதில் புகார் அளிப்பவர் தனது பெயர் விபரங்களை விரும்பினால் அளிக்கலாம். இல்லையென்றாலும் புகார் பதிவு செய்து கொள்ள இந்த செயலியில் வசதி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு 1,829 வாக்குச்சாவடிகளும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 265 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் மாற்று திறனாளிகள் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #Parliamentelection #LSPolls


பேரையூர்:
விருதுநகர் பாராளுமன்ற தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கோசு குண்டு சீனிவாசனை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மத்தியில் நடக்கும் மோடியின் பாசிச ஆட்சியை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் அல்ல. ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் மக்களோடு, மக்களாக நானும், தி.மு.க.வும் இருக்கிறோம்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி அளித்த வாக்குறுதிகளில் எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? அவர்மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.
பிரதமராக இருப்பதால் தான் அவரிடம் கேள்வி கேட்கிறேன். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சி கேவலமானது. 2 ஆட்சியையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். விவசாய, கல்விக்கடன் தள்ளுபடி, ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி, இலவச ரெயில் பாஸ், நீட் தேர்வு ரத்து, கியாஸ், கேபிள் கட்டணம் குறைப்பு போன்ற ஏராளமான வாக்குறுதிகளை அளித்திருக்கிறோம்.
மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தவுடன் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கிறேன்.
காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழை மக்களுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என கூறியிருக்கிறார். அது பற்றி கவலைப்பட தேவையில்லை. அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் உறுதியளிக்கிறேன். ஏனென்றால் வாக்குறுதி அளித்தது மோடி அல்ல, ராகுல் காந்தி. அவர் நிச்சயம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருக்கின்றன. கொள்கை ரீதியாக அவர் எதிரியாக இருந்தாலும் முதல்- அமைச்சர் என்ற முறையில் மரியாதை இருக்கிறது. எனவே அவரது மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டறிந்து சிறையில் அடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். #mkstalin #rahulgandhi #parliamentelection
ஈரோடு:
பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் முடிந்த கையோடு தற்போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஈரோடு பகுதிகளில் இன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மாலை 5 மணி முதல் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
அவர் மாலை 5 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசாரத்தை தொடங்கி சூளை, கனிராவுத்தர் குளம், வில்லரசம்பட்டி, நசியனூர் அக்ரகாரம் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பிரசாரம் செய்து பேசுகிறார்.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.
அவர் கோபி, கவுந்தப்பாடி, ஆர்.என்.புதூர் ஈரோடு கிருஷ்ணம் பாளையம் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். #vaiko #premalatha
தூத்துக்குடி:
முன்னாள் நகர்மன்ற தலைவர் குரூஸ்பர்னாந்து 89-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு இன்று கனிமொழி எம்.பி. மாலை அணிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசி தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.-பா.ஜ.க. அரசுகளின் 5 ஆண்டு ஆட்சிகளில் தூத்துக்குடியில் முக்கிய தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. மேலும் பல்வேறு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இங்கு படித்த ஏராளமான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு 5 ஆண்டு ஆட்சியில் இவர்கள் வேலை வழங்கவில்லை. ஆனால் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புல்லட் ரெயில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதை விட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது தான் முக்கியம். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பேன். படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க.-பா.ஜ.க.வினரின் 5 ஆண்டு ஆட்சியில் 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தான் இவர்களின் சாதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #kanimozhi #admk #bjp
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தூத்துக்குடி நகரில் இன்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 108 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்க நகைகளை பறிமுதல் செய்து ஓட்டுநர் ஹரிஹரனிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.
உரிய ஆவணமின்றி நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களைக் காட்டிவிட்டு பிறகு தங்கத்தைக் கொண்டு செல்ல அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஏப்ரல் 1-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
ஏப்ரல் 1-ந் தேதி தஞ்சாவூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளிலும், 2-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை தொகுதிகளிலும், 3-ந் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தொகுதிகளிலும், 4-ந் தேதி தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார்.
ஏப்ரல் 5-ந் தேதி மதுரை, திண்டுக்கல், தேனி பாராளுமன்ற தொகுதிகளிலும், 6-ந் தேதி தஞ்சை பாராளுமன்றம், சட்டமன்ற தொகுதிகளிலும், 7-ந் தேதி சிதம்பரம், கும்பகோணம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிகளிலும், மீண்டும் தஞ்சையிலும் பிரசாரம் செய்கிறார். 8-ந் தேதி செல்லும் இடம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
ஏப்ரல் 9-ந் தேதி ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளிலும், 10-ந் தேதி கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, 11-ந் தேதி திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், ஆரணி பாராளுமன்ற தொகுதிகளில ஜி.கே.வாசன் பிரசாரம் செய்கிறார்.
12-ந் தேதி சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகளிலும், 13-ந் தேதி திருச்சி, தஞ்சை தொகுதிகளிலும், 14-ந் தேதி தஞ்சை, 15-ந் தேதி திருவாரூர், நாகை தொகுதிகளிலும் மீண்டும் தஞ்சாவூரிலும் பிரசாரம் செய்கிறார். 16-ந் தேதி ஜி.கே.வாசன் பிரசாரம் செய்யும் இடங்கள் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #GKVasan
அரியலூர்:
திருமாவளவனை அறிமுகம் செய்து வைத்ததே நான் தான் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அவரை அறிமுகம் செய்தது நான் தான் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இது தொடர்பாக அரியலூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர் கூட்டணியின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அ.தி.மு.க. பணத்தை இந்த தேர்தலில் கொட்டுகிறார்கள். தி.மு.க. கூட்டணி பேரம் பேசி அமையவில்லை. அ.தி.மு.க. கூட்டணி பாவத்தை சுமக்கும் கூட்டணி. நாட்டை காப்பாற்ற தி.மு.க. தலைமை தேவை என்பதை கருத்தில் கொண்டு அமைந்தது.
தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து அதை திசை திருப்பவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். மீண்டும் வேண்டாம் மோடி என்பதே தேர்தல் முழக்கமாக இருக்க வேண்டும்.

ராமதாஸ் அரசியலை சொல்லி தரமாட்டார். பா. ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த தேசத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. தேசத்தை காப்பாற்ற ராகுல் பிரதமராக வேண்டும். என்னை அறிமுகம் செய்து வைத்ததாக ராமதாஸ் கூறுகிறார். அவரை நான்தான் மேலூரில் அறிமுகம் செய்து வைத்தேன்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்தவர்களை ராமதாஸ் இதுவரை பார்க்க வில்லை. கருணாநிதிதான் அவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கி பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார். #ramadoss #thirumavalavan
ஆலந்தூர:
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூற செல்கிறேன்.
பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க அழுத்தமான அரசு வேண்டும். இதனை கட்டுப்படுத்த காவல் துறைக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் மக்களை சந்திக்கும் போது சந்தோசமாக இருக்கின்றது.
தீர்ப்பு என்பது மக்கள் கையில் தான் உள்ளது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுப்பது என்பது நல்ல விஷயம் எனக்கு கூட ஆரத்தி எடுக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் கொடுப்பது தவறு.
நாங்கள் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கென்று முழுமையான தனி காவல் நிலையம் செயல்படும். ஏற்கனவே உழவர் சந்தை என்று ஒன்று உள்ளது. ஆனால் அது முழுமையாக செயல்படவில்லை. மற்ற கட்சிகள் செயல்படுத்தும் நல்ல திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்வோம்.அதைவிட்டுவிட மாட்டோம்.
தேர்தல் நேரத்தில் பி.எம். மோடி படம் வெளியிட காங்கிரஸ் தடை கேட்டுள்ளது. இது சரியானது தான். தேர்தலில் அந்த கட்சிக்கு இது விளம்பரம் தான்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், தமிழக அரசின் மனுவிற்கு ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். #KodanadIssue #MKStalin






