என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.

    இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். 

    • பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
    • கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

    இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்
    • சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் திடலில் தி.மு.க. தென்மண்டல இளைஞர் அணி சந்திப்பு கூட்டம் இன்று மாலையில் நடக்க இருக்கிறது.

    இதற்காக மாநாடு போன்று பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    இதுகுறித்து விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தென் மண்டலத்தில் திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 10 வருவாய் மாவட்டங்கள்.

    தி.மு.க. அமைப்பு ரீதியாக 20 மாவட்டங்கள் மற்றும் 58 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், கிளை, வார்டு, பூத் அளவிலான அனைத்து நிலை இளைஞரணி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தகுதியான லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அரசாணைகளை முழுமையாக பின்பற்றி உரிய துறைகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகனம் நிறுத்தும் வசதி, உணவு, குடிநீர், கழிவறைகள், ஒலி-ஒளி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் தன்னார்வலர்கள், மருத்துவக்குழுக்கள், தீயணைப்புத்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று மாலை 5 மணிக்கு திடலுக்கு வருகின்றனர்.

    ஏற்பாட்டு பணிகளை அனைத்து மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், இளைஞரணி நிர்வாகிகள் இணைந்து செய்து வருகின்றனர்.

    சட்டமன்ற தேர்தலையொட்டி மிக முக்கியமான அறிவிப்புகள் இந்த சந்திப்பு கூட்டத்தில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சண்முகத்திடம் ரூ.45.60 லட்சத்தை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்கள் எதிர்நோக்கியுள்ள எந்த பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வகையில் பட்ஜெட்டில் எதுவுமில்லை. வேலையின்மை இந்தியாவின் தலையாய பிரச்சனையாக உள்ளது.

    அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அபரிவிதமான வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் ஏற்றுமதி தொழில்கள் முடங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தொழில் முடக்கம் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கா அத்துமீறல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தொழில்களை, தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எந்த ஆலோசனையும் நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    125 நாட்கள் வேலை உயர்வு திட்டத்தை புதிதாக அமல்படுத்திவிட்டு அதற்காக ரூபாய் 95 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான்கு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அந்த திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்க முடியும். 125 நாட்கள் வேலை திட்டத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக வரவேற்றார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 150 நாட்கள் வேலை வழங்கப்படும் என தெரிவித்தார்.

    தற்போது ஒதுக்கப்பட்டு உள்ள நிதியில் இருந்து 30 நாட்கள் கூட வேலை வழங்க முடியாது. கிராமப்புற ஏழை மக்களை ஏமாற்றுவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

    பட்ஜெட்டில் மதுரை கோவை மெட்ரோ ரெயில் திட்டம் பற்றி அறிவிப்பு இல்லை. ஓசூரில் விமான நிலையம் அமைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு புல்லட் ரெயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விட்ட புல்லட் ரெயில் விபத்துக்குள்ளாகி நிற்கிறது. தமிழகத்திற்கு என அறிவிக்கப்பட்ட ஒரே அறிவிப்பு என்பது புல்லட் ரெயில் திட்டம் மட்டுமே. அதை அறிவித்தபடி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    ஓசூர் விமான நிலையம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் போன்றவை ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டது. தமிழ்நாடு அரசை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு செய்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க. அல்லாத மாநில அரசாங்கங்களை பழி வாங்குவது என்ற நோக்கத்தில் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விரோதமான அணுகுமுறையையும், பழிவாங்கும் போக்கையும் கடைபிடிக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் இந்த திட்டங்களுக்கு எல்லாம் அனுமதி மறுப்பதும் நிதி ஒதுக்கீடு செய்ய மறுப்பதும்.

    தி.மு.க. கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. மற்ற கட்சிகளை இணைப்பது குறித்து தி.மு.க. தான் முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடாது.

    இன்று இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி வைப்புத்தொகை வைத்துள்ள ஒரே கட்சி பா.ஜ.க. தான். இந்த தொகை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது. கம்யூனிஸ்டுகளுடன் கடுகளவு கூட ஒப்பிட அருகதை இல்லாத கட்சி பா.ஜ.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான நில அதிர்வு உணரப்பட்டது.
    • இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது.

    விருதுநகர்:

    விருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று இரவு 9 மணிக்கு மிதமான நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது

    சில நொடிகள் நீடித்த இந்த நில அதிர்வினால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    திடீரென ஏற்பட்ட நில அதிர்வினால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வர முடியாது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் சமத்துவம் பழகு என்ற தலைவர் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தலைவரும், நடிகருமான கருணாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததன் முக்கிய நோக்கம் தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்ற விடக்கூடாது என்பது தான் டி.டி.வி. தினகரன் மாறி மாறி பேசி வருகிறார். தமிழகத்தில் எந்த நடிகருக்கு வேண்டுமானாலும் விசிலடியுங்கள். எனக்கு அது பிரச்சனை இல்லை.

    நீங்கள் அடிக்கின்ற விசிலை விட அதிக விசில் அடிக்கும் கூட்டம் எண்ணிடத்திலும் உள்ளது. கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என்பது விஜய்யின் பேராசையை காட்டுகிறது. தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி கட்டாததை தமிழகம் மறக்கவில்லை.

    இ.பி.எஸ். மீது எவ்வளவு குற்றச்சாட்டை சொல்லி அவரை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என கூறி வந்த டி.டி.வி. தினகரன் இன்றைக்கு ஒன்றுமே இல்லையென்று கூறுகிறார். பங்காளி சண்டை என்று கூறுவதும் வேடிக்கையாக உள்ளது. படர் தாமரை உடம்புக்கு நாசம், ஆகாயத்தாமரை குளத்திற்கு நாசம். பா.ஜ.க.வின் தாமரை நாட்டுக்கே நாசம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க. வரமுடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன்.
    • மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி எனும் கேப்டன் ரத யாத்திரை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    பிரசாரத்தில் விஜய பிரபாகரன் பேசுகையில், கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு நம் கையை விட்டு சென்றாலும், வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நிச்சயமாக தே.மு.தி.க. வெற்றி பெரும் என்றார்.

    அவரைத் தொடர்ந்து பிரேமலதா பேசியதாவது:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காட்டிய வழியில் தொடர்ந்து மக்களுக்காக பாடுபடுவேன். அவர் தொடங்கிய அன்னதானத் திட்டத்தை தற்பொழுது வரை கேப்டனின் கோவிலில் தினமும் நடைபெற்று வருகிறது. கடந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தான் வெற்றி பெற்றார். ஆனால் அறிவிக்கப்பட்டது வேறொருவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தே.மு.தி.க. மாநாட்டில் கூடிய தொண்டர்கள் மூலம் நமது வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

    கேப்டன் விஜயகாந்த் விட்டுச்சென்ற பணியை இதுவரை அண்ணியாக இருந்து செயல்படுத்தி வந்த நான், இனிமேல் அம்மாவாக மக்களின் குறைதீர்க்க பாடுபடுவேன். மக்கள் விரும்பும் கூட்டணியையே தே.மு.தி.க. கையில் எடுக்கும் என்றும் தே.மு.தி.க. இணையும் கூட்டணியை நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும். அப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் தே.மு.தி.க. நிச்சயமாக செய்து கொடுக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.
    • தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே புல்லலக்கோட்டை கிராமத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார். அ.தி.மு.க.வில் நிர்வாகத்தில் உள்ளவர்கள், மக்களோடு செயலாற்றி வரும் நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள். கேப்டன் விஜயகாந்த் முடிவை பின்பற்றி தே.மு.தி.க. அ.தி.மு.க. பக்கம் தான் வருவார்கள். தான் இருக்கும் வரை தி.மு.க.வை எதிர்த்தவர் விஜயகாந்த். பிரேமலதா தனது கணவரின் கொள்கைக்கு எதிராகவோ தனது இயக்கத்தை நிறுவிய விஜயகாந்த் எண்ணங்களுக்கு எதிராகவோ செல்ல மாட்டார்.

    கரூரில் 41 பேர் உயிரிழந்த நேரத்தில் விஜய் அங்கு இருந்ததால் தான் விசாரிக்க சி.பி.ஐ. அழைத்துள்ளது.

    தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கருத்து மோதல் உள்ளது. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார்.

    தி.மு.க. கூட்டணி பிளவு ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் தனி கட்சியின் பெரும்பான்மை ஆட்சி தான் நடைபெறும். அதைத்தான் பொதுமக்கள் விரும்புவார்கள். அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளில் எடப்பாடியார் இறங்குவார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
    • வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

    கே.மேட்டுப்பட்டியில் சரவணகுமாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஷகில் உசேன், ஷபிகுல் அலி ஆகியோர் வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.

    • கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.
    • சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை.

    ராஜபாளையம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் துவார பாலகர்கள் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக் கவசம், நிலைக் கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் செப்பனிடப்பட்டது.

    அப்போது 4.54 கிலோ தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் பத்ம குமார், வாசு, நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், உன்னி கிருஷ்ணன், தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் உட்பட 10 பேரை எஸ்.ஐ.டி போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு டி.எஸ்.பி சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அதன்பின் கிருஷ்ணனிடம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இன்று கிருஷ்ணனை திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேரள போலீசார் கூறி விட்டு சென்றனர்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப் பெரியாறு பகுதியில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவினர் சோதனைக்கு வந்தபோது நான் வீட்டில் இல்லை. வீட்டில் எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. அதன்பின் போலீசார் அழைப்பின் பேரில் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். என்னிடம் 2 பேரின் பெயர்களை கூறி தெரியுமா? என கேட்டார்கள். நான் தெரியாது எனக்கூறினேன். அவர்கள் சபரிமலை குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. எனக்கும் சபரிமலை வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி திருவனந்தபுரம் அலுவலகத்தில் ஆஜராகி விசாரணை குறித்து கையெழுத்திட்டு செல்லுமாறு கூறியுள்ளனர், என்றார். 

    • கொங்கலாபுரத்தில் ராஜாமணி என்பவரது வீட்டின் கேட்டில் 2 சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • கமலிகா, ரிஷிகா கேட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது கேட் விழுந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் போலீசாக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 9 வயதில் கமலிகா என்ற மகள் இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை ராஜேஸ்வரி வீட்டின் வாசலில் கமலிகா மற்றும் உறவினர் ரமேஷ் என்பவரின் 4 வயது மகள் ரிஷிகா ஆகியோர் விளையாடி கொண்டிருந்தனர்.

    2 பேரும் வீட்டின் கேட்டை பிடித்து விளையாடினர். திடீரென கேட் பெயர்ந்து விழுந்தது. அதே வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து கமலிகா, ரிஷிகா மீது விழுந்தது. உடனே அங்கிருந்தவர்கள் பதறியடித்து கொண்டு இடிபாடுகளில் சிக்கி இருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.

    ஆனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். சிறுமிகளின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகளின் உடல்களை கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விளையாடி கொண்டிருந்த 2 சிறுமிகள் பலியான துயர சம்பவம் கொங்கலாபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் அமைந்துள்ளது.
    • இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாக துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார்.

    திறப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ரவியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.

    இதன்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பறையை இசைத்தார். பின்னர் பண்பாட்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.

    இந்த நிலவில் பேசிய அவர் பறை இசை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பறை இசை குறித்து ஆய்வு படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியறுத்தினார்.

    ×