என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பறை இசைத்து அசத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி
- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் அமைந்துள்ளது.
- இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாக துவங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு வந்த ஆளுநர் ரவியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வேலு ஆசான் உடன் 100-க்கும் மேற்பட்ட பறை இசை கலைஞர்கள் பறை இசைத்தனர்.
இதன்பின் ஆளுநர் ஆர்.என்.ரவி பறையை இசைத்தார். பின்னர் பண்பாட்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி ஆளுநர் ரவி திறந்து வைத்தார்.
இந்த நிலவில் பேசிய அவர் பறை இசை பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்றும் பறை இசை குறித்து ஆய்வு படிப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியறுத்தினார்.
Next Story






