என் மலர்
திருவள்ளூர்
- மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்று தகவல்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்றும், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
- கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
ஆவடி பேருந்து நிலையம் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய முக்கிய நிலையமாக உள்ளது. தற்போது இந்த பஸ்நிலையம் 1.93 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கிருந்து கோயம்பேடு, திருவான்மியூர், தாம்பரம், பூந்தமல்லி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளுக்கு மட்டுமின்றி தொலைதூரப் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.
ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில் இங்குள்ள பஸ்நிலையம் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஆவடி பஸ்நிலை யத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆவடி பஸ் நிலையத்தை 3 தளங்களுடன் ரூ.36.06 கோடி செலவில் நவீன வசதியுடன் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 9-ந்தேதி அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
65 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட உள்ள இந்த புதிய பஸ் நிலையத்தில் உணவுத் திடல், ஷாப்பிங் பகுதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், கழிப்பறைகள் மற்றும் பஸ்களை நிறுத்து வதற்காக பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட தரைத்தளம், ஒரே நேரத்தில் 22 பஸ்களை நிறுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் அமைய உள்ளது.
ஆவடி பஸ் நிலையம் சென்னை- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஆவடி ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது. ஏற்கனவே ஆவடி ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதனை இந்த ஆண்டு ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது ஆவடி பஸ்நிலைய பணிகளும் நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள ரெயில் நிலையத்திற்கு பயணிகள் சாலையை கடக்காமல் எளிதாக செல்லும் வகையில் பஸ்நிலையம்- ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் உயர் மட்ட பாதை அமைக்க வேண்டும் என்று பொது மக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10-வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து மாணவி தனியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின் தொடர்ந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்தார். திடீரென அவர், மாணவியை மிரட்டி தூக்கிச் சென்றார். பின்னர் அருகில் உள்ள மாந்தோப்பிற்கு மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கதறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்ததும் மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது மாணவி தனக்கு நேர்ந்தது குறித்து தெரிவித்து அழுதார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஆரம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவரை பிடிக்க 4 தனிப்படையும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் மாணவியை மர்ம வாலிபர் மிரட்டி தூக்கி செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் மர்ம வாலிபர் மாணவியை தூக்கி செல்வதும், பின்னர் அவர் செல்போனில் பேசியபடி தப்பி செல்வதும் பதிவாகி உள்ளது. இதனை வைத்து குறிப்பிட்ட நேரத்தில் அந்த பகுதியில் இருந்து சென்ற செல்போன் அழைப்புகளை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
- தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.
இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, 46 மணி நேரம் நடைபெற்ற சீரமைப்பு பணிக்கு பிறகு ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் அரக்கோணம் மார்க்கமாக ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது.
- ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பொன்னேரி:
புழல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சங்கீதா சென்னை மாநகராட்சில் 31-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர்கள் குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றனர். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையில் மொத்தமாக குடிநீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க ஒரு குடிநீர் பாட்டிலை எடுத்த போது அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஏராளமானோர் குடிநீர் ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர்.
- மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
- இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்று அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.
இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.
தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி தீயை அணைத்தனர். அதாவது காலை 5.30 மணிக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ, மதியம் 2 மணி அளவில் அணைக்கப்பட்டது.
இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரெயில் பாதையிலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.
இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்துக்குள்ளான சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ முற்றிலும் அணைக்கப்பட்டு லாரிகளுக்கு டீசல் மாற்றப்பட்டது.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது.
- ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடினர்.
இந்த நிலையில் சரக்கு ரெயில் டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. சரக்கு ரெயில் தீ விபத்தில் ரூ. 12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமாகி உள்ளது.
சரக்கு ரெயிலில் காலை 5 மணி அளவில் ஏற்பட்ட தீ தற்போது முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் தீ விபத்து குறித்து விசாரிக்க ரெயில்வே ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நேரில் ஆய்வு செய்தார்.
- தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
- சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் சரக்கு ரெயிலின் 52 பெட்டிகளில் 10 டேங்கர்கள் தீப்பற்றி எரிந்து சேதமானது. காலை 5 மணிக்கு தீப்பற்றிய நிலையில் தற்போது வரை தீப்பற்றி எரிந்து வருகிறது. சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீயில் 70 சதவீதம் தீ அணைக்கப்பட்டது.
தீ விபத்து காரணமாக 200 மீட்டர் அளவிற்கு தண்டவாளம் சேதமடைந்த நிலையில் மின்சார கேபிள்கள் உருகி நாசமடைந்தது.
இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட சரக்கு ரெயிலின் டேங்கர்களை பிரித்தெடுக்கும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது. தீ பரவுவதை தடுக்கும் வகையில் சரக்கு ரெயில் பெட்டிகளை பிரித்து திருவள்ளூர் ரெயில் நிலையம் நோக்கி எடுத்து செல்கின்றனர்.
சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ அருகே உள்ள நிலங்களில் பரவாமல் தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன.
திருவள்ளூரை அடுத்த ஏகாட்டூரில் சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் காற்றின் தரம் மோசமடைந்தது. ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டார பகுதியில் புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் மிதமான அளவில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. விண்ணை முட்டும் புகையுடன் தீ தொடர்ந்து எரிந்து வரும் நிலையில் காற்றில் PM2.5 13.6 வரை நுண் துகள்கள் கலந்துள்ளன. எரிபொருள் பற்றி எரிவதால் காற்றின் நுண் துகள் பாதிப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூர் ரெயில் நிலையத்தை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றன. இதனால் திருவள்ளூரில் காற்றின் தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இன்று மாலையில் தீ அணைக்கப்பட்டாலும் காற்றில் கலந்துள்ள நச்சு துகள்கள் நீங்கி சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதற்கு 2 நாட்கள் வரையில் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் நாசர் கேட்டறிந்தார்.
- அப்பகுதிமக்களுக்கு அமைச்சர் நாசர் உணவு வழங்கினார்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள், மாவட்ட ஆட்சியர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சரக்கு ரெயிலில் ஏற்பட்டுள்ள தீ பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தீயணைப்பு பணி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவர் கேட்டறிந்தார்.
தீ விபத்து ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக அருகில் உள்ள வீடுகளில் இருந்து சமையல் சிலிண்டர்கள் அகற்றப்பட்டன. சிலிண்டரை எடுத்து செல்ல அப்பகுதி மக்களுக்கு உதவிய அமைச்சர் நாசர், மக்களுக்கு உணவு வழங்கினார்.
- தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
- திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் உடனடியாக புறப்பட்டு சென்றனர்.
பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 60 பேர் கொண்ட 2 குழுக்கள் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.






