என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
- விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் 50 பேரும், ஆரணி பகுதியை சேர்ந்த 20 பேரும் கலந்து கொண்டனர்.
பெரியபாளையம்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு வைக்கப்படும் விநாயகர் சிலைகள் எந்த அளவில் இருக்க வேண்டும், அதனை கண்காணிக்க தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களுக்கு போலீசார் ஆலோசனை வழங்கும் கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பப்பி விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இக்கூட்டத்தில், பெரியபாளையம் பகுதியை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள் 50 பேரும், ஆரணி பகுதியை சேர்ந்த 20 பேரும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கலந்து கொண்டார்.






