என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • களக்காடு உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • கூடன்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கூடன்குளம், களக்காடு மற்றும் நாங்குநேரி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கூடன்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கூடன்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமை யார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ்மண்டபம், நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது. அதேபோல் நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள் மற்றும் களக்காடு துணை மின்நிலை யத்திற்குட்பட்ட மணி கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடு வெட்டி, வட மலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கரு வேலன்குளம், கோவிலம்மா ள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இத்தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.

    • வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
    • போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும், காரும் எதிர்பாராத விதமாக மோதியது. இதுதொடர்பாக அந்த 2 வாகனங்களின் உரிமையாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியில் நின்ற சிலர் அவர்கள் 2 பேரையும் விலக்கிவிட்டனர்.

    அப்போது ஏற்பட்ட வாய் தகராறில் மேலப்பாளையம் போலீசார் 5 வாலிபர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக நிலையத்தில் பொய்யான புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி அங்கு தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், ஜமாத் பிரமுகர்கள் ஒன்றிணைந்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

    தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் போலீஸ் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே போலீஸ் நிலையத்தில் பேச்சு வார்த்தைக்கு சென்றபோது அனைத்து கட்சி நிர்வாகி களுக்கும், போலீசாருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு சென்ற மேலப்பாளையம் மண்டல சேர்மன் கதிஜா இக்லாம் பாசிலா, மாமன்ற கவுன்சிலர்கள் ரம்ஜான் அலி, ஷேக் மன்சூர், நித்திய பாலையா உட்பட 8 கவுன்சிலர்கள், பிற அரசியல் கட்சி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் மீது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதனை ரத்து செய்யக்கோரி போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து அனைத்து கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் வழக்கினை வாபஸ் பெறாவிட்டால், கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து நேற்று நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மேலப்பாளை யத்தில் போலீசாரை கண்டித்து அனைத்து வியாபாரி கள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து அமைப்பினர், அனைத்து ஜமாத்துகள் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் போட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டது.

    அத்தியாவசிய பொருளான பால், மருந்து கடைகள் உள்ளிட்ட ஒரு சில கடைகள் மட்டும் திறந்திருந்தது. சில மீன்கடைகளும் திறந்திருந்தன. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் டிரைவர்கள், வாடகை கார் டிரைவர்களும் தங்களது வாகனங்களை இன்று இயக்கவில்லை. அவை சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது.

    சந்தை முக்கு ரவுண்டானா உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மேலப்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பணிகள் முடங்கியுள்ளன. அதே நேரத்தில் குறிச்சி மற்றும் கருங்குளம் பகுதிகளில் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. அங்கு ஆட்டோ, வேன், வாடகை கார்கள் ஓடின.

    • ஓட்டலில் இருந்த பிரிட்ஜ், குளிர்பானங்கள், அடுப்பு உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒட்டலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி அடுத்துள்ள ராஜபுதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 44). தி.மு.க. கிளைச்செயலாளரான இவர் ராஜபுதூர் மெயின் ரோட்டில் ஓலை செட்டால் ஆன ஓட்டல் நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவில் ஒட்டலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். தீ மள, மளவென பற்றி எரிந்தது. இதைப்பார்த்த ஜெயக்குமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயை தண்ணீர் ஊற்றி கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.

    ஆனால் தீயினால் ஓட்டல் முழுவதும் கருகியது. மேலும் ஓட்டலில் இருந்த பிரிட்ஜ், குளிர்பானங்கள், அடுப்பு உள்ளிட்ட ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும், களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளரும், நகராட்சி துணை தலைவருமான பி.சி. ராஜன், தளவாய்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மதன்ராஜ், நகராட்சி கவுன்சிலர் ஜின்னா, ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், கட்டளை கருணாகரன், மாவட்ட பிரதிநிதிகள் கோபால் பாண்டியன், ஜான் பால், ஒன்றிய அவைத்தலைவர் தங்க பாண்டியன், கிளைச் செயலாளர் வைகுண்ட ராஜன், சண்முகம் உள்பட தி.மு.க.வினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயில் நாசமான ஓட்டலை பார்வையிட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஒட்டலுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத்துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே யானையின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்டளையின் நிறுவனர் ரங்கராஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும், குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

    யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோதிலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று தாய்லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

    அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகிழகுளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.

    நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளுடைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்கமான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.

    எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவனிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள்ளார்.

    • மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது.

    நெல்லை:

    மூத்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லசிவத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

    அதன்படி நெல்லை, ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே அவரது நூற்றாண்டு விழாவையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல் தலைமை குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    நாளை மற்றும் நாளை மறுதினம் பெங்களூருவில் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. பா.ஜனதாவை வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து கூட்டம் நடத்தப்படுகிறது.

    இதுவரை மணிப்பூரில் நடந்த கலவரத்தில் 150-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்ட சூழலிலும் 36 லட்சம் மக்கள் தொகை கொண்ட மணிப்பூரில் இருந்து பல்லாயிரம் நபர்கள் வெளியிடத்திற்கு குடிபெயர்ந்த சூழலிலும் அங்கு நடக்கும் கலவரத்தை பாரத பிரதமர் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை.

    மணிப்பூரில் நடக்கும் மோதலுக்கு பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.-ன் அணுகுமுறை சரியில்லாதது தான் காரணம். இந்திய நாட்டில் பழங்குடியின மக்களுக்கென மாநில வாரியாக தனித்தனி சட்டங்கள் உள்ளது.

    யாரிடமும் எந்த கருத்தும் கேட்கப்படாமல் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பா.ஜனதா கட்சி ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை நியமனம் செய்து அங்குள்ள ஆட்சியை சீர்குலைக்கும் செயலை பா.ஜனதா செய்து வருகிறது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

    விலைவாசி உயர்வு, விலையை கட்டுப்படுத்துவது போன்றவைகள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. உணவு உற்பத்தி தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தடுக்க மத்திய அரசு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

    ஆனால் தமிழகத்தில் மாநில அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்து வருவது வரவேற்கத்தக்கது.

    மத்திய பா.ஜனதா அரசின் ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற இருக்கிறது. வருகிற 23-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்.

    2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைந்த நோக்கம்.

    மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் கட்சிகளிடம் வேறுபாடுகள் இருந்தாலும் அகில இந்திய அளவில் பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதை ஒரே நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது.

    எத்தனை ஊழல் வழக்குகள் இருந்தாலும் பா.ஜ.க.வில் யாரேனும் சேர்ந்தால் அவர்கள் புனிதராகி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலமான நடவடிக்கையை பா.ஜ.க. செய்து வருகிறது. மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

    இவர் அவர் கூறினார்.

    • பிளாஸ்டிக்கை சாலையில் வீசுவதால் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
    • ஆய்வில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விட்டு அவை சாலையில் வீசப்படுவதால் மழை நீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

    மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் கடைகள், மீன் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனைத்தொ டர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின்படி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்த லின் பேரில் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்து பூந்துறை, உடையார்பட்டி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வா ளர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள 35 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையா ளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையிலான குழுவினர் 15 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு அந்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையானது தொடர்ந்து அனைத்து கடைகளிலும் மாநகரம் முழுவதும் நடைபெறும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல், பூம்பருப்பு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாள் வளைகாப்பு திருவிழாவிற்கு வருகை தந்த பெண் பக்தர்கள் 5 ஆயிரம் பேருக்கு மங்கல நாண், வளையல்கள் 4, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு அடங்கிய தொகுப்பினையும், அனைத்து பக்தர்களுக்கும் அம்பாளின் திருவருட்பிரசாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம் மற்றும் பூம்பருப்பு ஆகியவற்றை பொது மக்களுக்கு மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜு தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் முசம்மில் அகமது, கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், ரவிந்தர், மாரியப்பன் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் . இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க. நெல்லை பகுதி கழக முன்னாள் செயலாளரும், மாநகராட்சி 27-வது வார்டு கவுன்சிலருமான உலகநாதன் செய்திருந்தார்.

    • தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக அந்த மாதத்தின் இறுதியில் தான் தொடங்கியது.

    அனல் காற்று

    ஒரு சில நாட்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. மாறாக தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுவதோடு, அனல் காற்றும் வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வெப்பம் அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    பெரும்பாலானோர் சாலைகளில் நடந்து செல்லும் போது குடைகளை பிடித்தபடி செல்கின்றனர். மாநகர், புறநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், குளிர்பா னங்களை அருந்துவதற்காக குளிர் பான கடைகளை தேடி மக்கள் கூட்டம் செல்வதை காண முடிகிறது. ஏற்கனவே கோடையில் சுட்டெரித்த வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்டவை வறண்ட நிலையில் காணப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தின் போது நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் விவசாயி கள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு பயிரிடவில்லை. இதனால் தரிசு நிலங் களாக காட்சியளிக்கிறது. மேலும் குளங்களும் வறண்டு, வெடிப்பு விழுந்த நிலையில் உள்ளது.

    • மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.
    • திறப்பு விழாவில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பாளை யூனியன் பாளையஞ்செட்டிகுளத்தில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்ளுா் மேம்பாட்டு நிதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். மாநில மகளிா் தொண்டரணி துணைச்செயலாளா் விஜிலா சத்யானந்த் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணைச்செயலாளா் ஆவின் ஆறுமுகம், விவசாய தொழிலாளா் அணி துணை செயலாளா் கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றிய செயலாளா்கள் வேலன்குளம் முருகன், போா்வெல் கணேசன், இ.பி நடராஜன், வட்டார காங்கிரஸ் தலைவா் கனகராஜ், பாளையஞ்செட்டி குளம் ஊராட்சி மன்ற தலைவா் ஏமன், துணைத்தலைவா் சஞ்சய் காந்தி, ஒன்றிய அவைத்தலைவா் விஜயகுமாா், மாவட்ட பிரதிநிதி முத்துசாமி மற்றும் நிா்வாகிகள் திருப்பதி, ஜெயசீலன், குறிச்சி ராஜபாண்டி, பெட்டைகுளம் முருகன், மணப்படை வீடு சண்முகவேல், துணை செயலாளா் சம்பத்ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

    • 27 பஞ்சாயத்துகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் வகையில், 'நீரோ 65' என்ற திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் யூனியனில் உள்ள 27 பஞ்சாயத்துகளிலும் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தீவிரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதிகளின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக உதயத்தூர் பஞ்சாயத்தில் நீரோ 65 திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆழ்துளை கிணறுகளும், பைப்லைன்களும் அமைக்கப்பட்டு இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று கூறினார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன், இசக்கிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நவ்வலடியில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நவ்வலடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயங்குளத்தில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார். விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் ராதிகா சரவணகுமார், ஆனந்தகுமார், சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினரால் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு செயல் முறைகள் நடத்தி காட்டப்பட்டது.
    • அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "பேரிடர் மேலாண்மை" விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்று பேசினார். வள்ளியூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் பால சுப்பிரமணியம் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினரால் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு செயல் முறைகள் நடத்தி காட்டப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. முடிவில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • பிரதோஷத்தையொட்டி சோமநாதசுவாமி, கோமதி அம்பாள், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுகு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • கோவில் சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்கு களில் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கோமதி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஆனி மாத சனி பிரதோஷ விழா நடந்தது. இதையொட்டி சோமநாதசு வாமி, கோமதி அம்பாள், நந்தி பகவான் உள்ளிட்ட சுவாமிகளுகு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.

    விரைவில் இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற வேண்டி நந்தியம் பெருமானுக்கு 1008 செவ்விளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் விஷேச அலங்கார தீபாரா தனைகள் நடைபெற்றது. சுவாமி, அம்பாளுக்கு செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டி ருந்தது. சுவாமி, அம்பாள், நந்தி பகவானுக்கு 3 அர்ச்சகர்களை கொண்டு ஒரே நேரத்தில் அபிஷேக, தீபாராதனைகள் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, 1008 தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. கோவில் சன்னதிகள், பிரகாரங்கள், மண்டபங்களில் வைக்கப்பட்டிருந்த விளக்கு களில் பக்தர்கள் தீபம் ஏற்றினர்.

    இதனால் தீப ஒளியில் கோவில் சன்னதிகள், மண்டபங்கள் ஜொலித்தன. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்புடை மருதூர் ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபா செய்திருந்தனர்.

    ×