search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அனல் காற்றுடன் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்
    X

    நெல்லையில் அனல் காற்றுடன் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்

    • தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • சமீபத்தில் பெய்த மழையால் அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக அந்த மாதத்தின் இறுதியில் தான் தொடங்கியது.

    அனல் காற்று

    ஒரு சில நாட்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. மாறாக தற்போது கோடை வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    கடந்த ஒரு சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்படுவதோடு, அனல் காற்றும் வீசுவதால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். வெப்பம் அதிகரிப்பால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

    பெரும்பாலானோர் சாலைகளில் நடந்து செல்லும் போது குடைகளை பிடித்தபடி செல்கின்றனர். மாநகர், புறநகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள், குளிர்பா னங்களை அருந்துவதற்காக குளிர் பான கடைகளை தேடி மக்கள் கூட்டம் செல்வதை காண முடிகிறது. ஏற்கனவே கோடையில் சுட்டெரித்த வெயிலால் அணைகள், குளங்கள் உள்ளிட்டவை வறண்ட நிலையில் காணப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் பாபநாசம் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படாது. ஆனாலும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தின் போது நெல் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடும் விவசாயி கள் குளங்களில் தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு பயிரிடவில்லை. இதனால் தரிசு நிலங் களாக காட்சியளிக்கிறது. மேலும் குளங்களும் வறண்டு, வெடிப்பு விழுந்த நிலையில் உள்ளது.

    Next Story
    ×