என் மலர்
நீங்கள் தேடியது "Disaster Management Awareness Camp"
- முகாமில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினரால் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு செயல் முறைகள் நடத்தி காட்டப்பட்டது.
- அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "பேரிடர் மேலாண்மை" விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் வரவேற்று பேசினார். வள்ளியூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் பால சுப்பிரமணியம் தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினரால் தீயணைப்பு குறித்த விழிப்புணர்வு செயல் முறைகள் நடத்தி காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. முடிவில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.






