search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் யூனியனில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி  - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்
    X

    ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்த காட்சி.

    ராதாபுரம் யூனியனில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்

    • 27 பஞ்சாயத்துகளிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டினை தீர்க்கும் வகையில், 'நீரோ 65' என்ற திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகள், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், நெல்லை திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் யூனியனில் உள்ள 27 பஞ்சாயத்துகளிலும் போர்க்கால அடிப்படையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தீவிரமான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊராட்சி நிதி, ஊராட்சி ஒன்றிய நிதி மற்றும் ஊராட்சி நிதிகளின் கீழ் பணிகள் எடுக்கப்பட்டு சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக உதயத்தூர் பஞ்சாயத்தில் நீரோ 65 திட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதியில் ஆண்டு முழுவதும் மக்களுக்கு பயன்படும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது. விரைவில் அனைத்து ஆழ்துளை கிணறுகளும், பைப்லைன்களும் அமைக்கப்பட்டு இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்'' என்று கூறினார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தன், வேலப்பன், ஒன்றிய கவுன்சிலர் படையப்பா முருகன், இசக்கிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. திசையன்விளையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நவ்வலடியில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நவ்வலடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆயங்குளத்தில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வழங்கினார். விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் ராதிகா சரவணகுமார், ஆனந்தகுமார், சாந்தா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×