என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.
    • களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * த.வெ.க. தலைவர் விஜய் தரக்குறைவாக விமர்சித்து தரம் தாழ்த்திக்கொள்கிறார்.

    * மக்கள் மத்தியில் தனது தரத்தை விஜயே தாழ்த்திக் கொள்ளும் நிலையில் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டியதில்லை.

    * விஜய் ஆச்சரியக்குறியோ, தற்குறியோ எங்களுக்கு தெரியாது. தி.மு.க.வுக்கு தேர்தல் தான் குறி.

    * எங்களுக்கு தனிப்பட்ட முறையில் யாரும் எதிரி இல்லை.

    * தி.மு.க.வுக்கு விஜய் போட்டியே இல்லை.

    * விஜய் உள்ளிட்ட யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் தி.மு.க.விற்கு இல்லை.

    * எங்களுக்கு போட்டி என்று யாரும் இல்லை.

    * பா.ஜ.க.வின் 'C' டீம்தான் விஜய். முன்பு ஸ்லீப்பர்செல்களாக இருந்து அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்.

    * களத்தில் இருக்கக்கூடிய எல்லோரையும் நாங்கள் சமமாகத்தான் பார்க்கிறோம்.

    * திராவிட இயக்க வரலாற்றை இளைய தலைமுறை அறியச் செய்யும் திருவிழா.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான்.
    • கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறுப்பு டி.ஜி.பி. விவகாரத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் விவரங்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும். யூடியூபில் வருகின்ற செய்திகள் பேசுவதை எல்லாம் செய்திகள் என்று எடுத்துக்கொண்டு ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக தான் பா.ஜ.க. அரசின் சிறந்த சேவகர் என்று நிரூபித்துக் கொண்டு வருகிறார். மத்திய அரசுக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் குறுக்கே விழுந்து தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒன்றிய பா.ஜ.க. அரசை காப்பாற்றி வருகிறார்.

    அது டி.ஜி.பி. விவகாரத்திலும் நடந்துள்ளது. ஆளுநர் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என்று எண்ணிய மத்திய பா.ஜ.க. அரசு அது டி.ஜி.பி. மூலம் நடந்து விடாதா என்று எண்ணினார்கள். ஆனால் டி.ஜி.பி. மூலம் நடக்க முடியவில்லை.

    தமிழ்நாட்டிற்கு பொறுப்பு டி.ஜி.பி. என்று அறிமுகப்படுத்தியதே அ.தி.மு.க. தான். 2011-ம் ஆண்டு ராமானுஜத்தை உளவுத்துறை டி.ஜி.பி. ஆகவும், சட்ட-ஒழுங்கு பொறுப்பு டி.ஜி.பி. ஆகவும் அ.தி.மு.க. அரசுதான் கொண்டு வந்தது.

    ராஜேந்திரன் என்பவரையும் பொறுப்பு டி.ஜி.பி.யாக கொண்டு வந்ததும் அ.தி.மு.க. தான். தற்போது இதை பற்றி பேசி பா.ஜ.க. அரசின் விசுவாசி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துக் கொண்டு வருகிறார். பொறுப்பு டி.ஜி.பி. பற்றி பேசுவதற்கு எந்தவித அருகதையும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது.

    அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கோலமாக கடந்த சட்ட ஒழுங்கை திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக கொண்டு வந்துள்ளது.

    கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரெயில் கொண்டுவரப்பட வேண்டும். சென்னையில் சிறப்பாக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. எங்களுக்கு எந்த அளவு போட வேண்டும் என்பது சரியாக தெரியும். யார் எங்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டாம். போலியான தருணங்களை சொல்லி நிராகரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.
    • அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை NDA-வில் இணைப்பது பற்றி காலம் தான் முடிவு செய்யும்.

    * அமைச்சர் சேகர்பாபு சொல்வது உண்மைதான். பா.ஜ.க.வில் 3 ஆண்டுகள் தான் பதவி.

    * 3 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேளை பதவி நீட்டிக்கப்படலாம்.

    * தி.மு.க.வை சேர்ந்த சேகர்பாபு பா.ஜ.க.வை பற்றி பேச வேண்டியதில்லை.

    * அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை.

    * நடிகர் விஜயின் த.வெ.க.வை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை.

    * த.வெ.க. இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.
    • எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இ.பி.எஸ். விமர்சனம் குறித்து கவலையில்லை. மீண்டும் தி.முக. தான் ஆட்சியை கைப்பற்றும்.

    * எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லாததால் தி.மு.க.வை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்.

    * வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    * எத்தனை முனை போட்டி வந்தாலும் 2026 தேர்தலில் வென்று 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைப்போம்.

    * எதிர்க்கட்சிகளை பலமாகவும் பார்க்கவில்லை, பலவீனமாகவும் பார்க்கவில்லை. எங்க வேலையை நாங்கள் பார்க்கிறோம்.

    * எப்போதும் எங்களுக்கு மனசு நல்லா இருக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
    • தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

    * தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படும்.

    * மகளிருக்கு ரூ.1000 கொடுப்பது சாத்தியமில்லை என அ.தி.மு.க.வினர் கூறினர்.

    * மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர்.

    * பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

    * நமது திட்டங்களை பிற மாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன.

    * இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    * எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர்.

    * வதந்திகளை நம்பாதீர்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும்.

    * நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர்.

    * கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    * பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தி.மு.க.வின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    * போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்களுக்கு பணி செய்வதே.

    * தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது.

    * தி.மு.க. ஆட்சி 2.o உறுதியாகி விட்டது

    * தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

    * வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

    * உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? என்று ஆராயுங்கள்.

    * எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
    • கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகள் வெளியிட்டார்.

    * புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.

    * கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.

    * ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.

    * கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    * கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.

    • கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் புதுக்கோட்டை.
    • பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.203 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * குகைக்கோவில், கல்வெட்டு, தொல்லியல் சின்னங்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் புதுக்கோட்டை.

    * கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மாவட்டம் தான் புதுக்கோட்டை.

    * புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆண்டில் ரூ.11,481 கோடியில் 38.35 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    * அரசியல் லாபத்திற்காகவும் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் தி.மு.க. அரசு மீது சிலர் அவதூறு பரப்புகின்றனர்.

    * அவதூறு பரப்புவோருக்கு முதல் ஆளாக அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்து வருகிறார்.

    * சாதி அடையாளமாக சூட்டப்பட்ட விடுதிகளின் பெயரை சமூகநீதியின் அடையாளமாக மாற்றியவர் அமைச்சர் மெய்யநாதன்.

    * பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்து தமிழ்நாட்டை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது திராவிட மாடல் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை.
    • எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வெளி மாநிலங்களுக்கு செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். ஆனால் பீகாரில் இருந்து வருபவர்கள் கோயம்புத்தூரில் இரண்டு மாதமும், திருப்பூரில் இரண்டு மாதமும் திருச்சி திருநெல்வேலியில் மூன்று மாதமும் வேலை பார்க்கிறார்கள்.

    இப்படி அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு தற்காலிகமாகத்தான் பணிபுரிகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் நிரந்தரமாக அங்கே இருக்கின்றனர்.

    அதனால் நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியும்.

    ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களை நிரந்தரவாசிகளாக எடுத்துக் கொள்ள முடியாது. நிரந்தர வாசிகளாக இருப்பவர்கள் தான் வாக்களிக்க முடியும்.

    2026 தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போகும். மீண்டும் திமுகவின் 2.0 தொடரும்.

    விவசாயிகளுக்கு இழப்பீடு ஏற்படும் பொழுது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.

    நயினார் நாகேந்திரன் அவருக்கு கொடுத்த தலைவர் என்ற பதவியை தக்க வைப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசி வருகிறார். புதிய கூட்டணிகள் அவர்களிடத்தில் செல்ல போவதில்லை.

    கேரளா பிஎம்சி திட்டத்தில் சேர்த்ததைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களது கொள்கையைத்தான் நாங்கள் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த இடங்களில் கரையில் கயிறு கட்டி படகுகளை நிறுத்தினர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதியான கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இங்குள்ள மீன்பிடி இறங்குதளங்களில் இருந்து 370 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.

    இதேபோல கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாப்பட்டினம் உள்பட கடற்கரை பகுதிகளில் சுமார் 1,300 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இவர்கள் கடலில் குறிப்பிட்ட நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடித்து வருவார்கள். இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல இடங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை மழை இருந்தது. அதன்பின் மழை பெய்யவில்லை.

    இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியினால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களுக்கும் தடை அமலானது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதேபோல நாட்டுப்படகு மீனவர்கள் அந்தந்த இடங்களில் கரையில் கயிறு கட்டி படகுகளை நிறுத்தினர். தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாவட்டச் செயலாளருக்கு தெரியாமல் கட்சி நிர்வாகி அழைத்து சென்றதாக தெரிகிறது.
    • இதனால் மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுக்கோட்டைக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார். அப்போது அவரை கட்சி நிர்வாகி ஒருவர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.

    அப்பேது மாவட்ட செயலாளர் தனக்கு தெரியாமல் அழைத்துச் சென்றதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மாவட்ட செயலாளருடன் அந்த நிர்வாகியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    • த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.
    • ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும்.

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது,

    * விஜய் வருகையால் தி.மு.க.வின் வாக்கு வங்கி பாதிக்க எந்த ஒரு வாய்ப்பும் கிடையாது.

    * விஜய் சுற்றுப்பயணத்தில் பொது சொத்துக்கள் சேதம்.

    * த.வெ.க. விதிமுறைகளை மீறிய விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

    * ஒருவருக்கு ஆபத்து ஏற்பட்டால் எந்த பகுதியாக இருந்தாலும் அவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்லத்தான் செய்யும். ஆம்புலன்ஸை விட்டு கூட்டத்தை கலைக்க வேண்டிய அவசியம் எல்லாம் தி.மு.க.வுக்கு கிடையாது.

    * 2011ல் திடீரென்று தான் தி.மு.க.வை ஆதரித்து வடிவேல் பிரசாரத்திற்கு வந்தார். எந்த ஒரு விளம்பரமும் கிடையாது. அவருக்கு கூடிய கூட்டம் போல் வேறு எங்கும் கூடவில்லை. அது வாக்காக மாறியதா இல்லை.

    * சனி, ஞாயிறு தான் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அப்போது விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.
    • குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.

    புதுக்கோட்டை:

    த.வெ.க. தலைவர் விஜய், கேப்டன் விஜயகாந்தை பின்பற்றி வருவதாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    * விஜய் தற்போது சந்திக்கும் நெருக்கடிகளை தே.மு.தி.கவும் சந்தித்து கடந்து வந்தது.

    * 20 ஆண்டுகளில் எத்தனையோ சவால்களால், எத்தனையோ விதமான இடையூறுகளை கடந்து 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.

    * குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற முதல் தலைவர் விஜயகாந்த் தான்.

    * தமிழகத்தில் மிகப்பெரிய 2 கட்சிகள், தேசிய கட்சிகள் உள்ளதால் தடைகளை கடந்து வருவது தான் வெற்றி.

    * தடைகள் இருக்கும். தடைகளை உடைத்து வருவதுதான் வெற்றி.

    * ஆட்சியில் பங்கு என்பதை வரவேற்கிறோம். ஏன் என்றால்.. அதிகாரம் ஒரே இடத்தில் இல்லாமல், எல்லாருக்கும் பகிர்ந்து தரப்படும்போது கேள்விகள் கேட்க முடியும். மக்களுக்கு இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றார்.

    இதனிடைய, அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் ஒன்றாக இருந்தால் தான் பலம். பிரிந்து இருந்தால் எப்படி பலம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறினார். 

    ×