என் மலர்
நாகப்பட்டினம்
- சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார்.
- நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் ஜன்னத் (வயது 29). இவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இரவில் நள்ளிரவில் திருப்பூண்டி சிந்தாமணி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை நெஞ்சுவலி காரணமாக அதே பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்ராம் (35) என்பவர் திருப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்.
அப்போது சுப்பிரமணியனை பரிசோதித்து அவரை நாகை அரசு மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப டாக்டர் ஜன்னத் அறிவுறுத்தினார். இதனை கேட்ட புவனேஷ்ராம் மேல் சிகிச்சைக்கு அனுப்பாமல் இங்கேயே மருத்துவம் பார்க்க வேண்டும். பணியின்போது ஹிஜாப் எதற்கு அணிந்துள்ளீர்கள்? நீங்கள் டாக்டராக என்று சந்தேகம் உள்ளது. ஹிஜாப்பை கழற்றுங்கள் என கூறி ஜன்னதிடம் தகராறில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்தார்.
அதற்கு ஜன்னத், நள்ளிரவில் ஒரு பெண்ணிடம் வீணாக தகராறில் ஈடுபடாதீர்கள் என கூறியும் புவனேஷ்ராம் தொடர்ந்து ஹிஜாப் குறித்து பேசி தகராறில் ஈடுபட்டார். மேலும் இதனை தனது செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இதுகுறித்து தகவல் அறிந்த கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி, ம.ம.க, ம.ஜ.க உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து தலைமையில் ஆஸ்பத்திரி அருகே வேளாங்கண்ணி - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ.க நிர்வாகி புவனேஷ்வராமை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கீழையூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 9-ம் நாள் விழாவான வசந்த உற்சவ திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
- சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாக நடனமாடினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்கு சொந்த மான வண்டமர்பூங்குழலாள் சமதே பிரமபுரீஸ்வரர் சுவாமி, தியாகராஜ சுவாமி கோவில் உள்ளது.
பழமை வாய்ந்த இக்கோவிலில் பிரம்மோற்சவ வைகாசி பெருந்திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அபிஷேக ஆராத னைகள் மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது. இந்நிலையில் 9-ம் நாள் திருவிழாவான வசந்த உற்சவர் திருவிழா நேற்று இரவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏராளமான சிவ தொண்டர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி முழக்கத்தோடு தியாகரா ஜரை சுமந்தபடி நடனமாடினர். பிரிங்க நடன கோலத்தில் தியாகராஜ சுவாமி
கமலாம்பாளுடன் வசந்த மண்டபத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிவ வாத்திய வாசிப்பிற்கு ஏற்ப சிறுவர்கள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தது பக்தர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இதில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
- கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
முக்குலத்து புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு. சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.
இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதியடைந்து வருகின்றனர்.
குழந்தைகளால் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாது.
எனவே மாணவ- மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு வெயிலின் தாக்கம் குறைந்த பிறகு பள்ளிகளை திறக்க வேண்டும்.
மேலும் கல்வி துறையின் அறிவுறுத்தலை மீறி சட்ட விரோதமாக கோடை விடுமுறையில் இயங்கும் சில தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி தலைமையில் என்ஜினீயர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் நாகை அருகே பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை சாலையின் தரம் உயர்த்தும் பணியினை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளர் முருகானந்தம், நாகை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சிவக்குமார் உள்பட நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.
- சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தில் குடிநீர் வழங்கக்கோரி நேற்று முன்தினம் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் சிக்கல் பஸ் நிறுத்தம் முன்பு காலிகுடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சிக்கல் ஊராட்சி கீழவெளி கிராமத்தை சேர்ந்த சேகர், பிரேம்நாத், சிவக்குமார், பிரபாகரன், சங்கர் மற்றும் 3 பெண்கள் உள்பட 8 பேர் மீது கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை எனும் கிராமம் உள்ளது.
இங்குள்ள வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள ராமர் பாதம் முதல் கோடியக்கரை வரை உள்ள சாலையின் இருபுறமும் அரை அடியில் பள்ளம் உள்ளது.
இதனால் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மேலும், அந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் பயணம் செல்பவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற குழகர்கோவிலில் வைகாசி விசாக திருவிழா இந்த மாதம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
- அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் 6 முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லாத மற்றும் இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் ஊராட்சி தலைவர் சந்திரா சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் அசோக்கு மார், தலைமையாசிரியர்கள் தனலட்சுமி, ரவீந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் ரேணுகா குமரகுரு, நீலவண்ணன், அங்கன்வாடி அமைப்பாளர் கஸ்தூரி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கிராம நிர்வாக அலுவலர், அனைத்து பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஆதனூர் ஊராட்சியில் பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோரிடம் கல்வியின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது.
- வருகிற 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம் நடைபெற உள்ளது.
- உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
வேதாரண்யம்:
உலக சுற்றுச்சூழல் தினம் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி வருகிறது.
இதனை யொட்டி நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா அறிவுரையின்படி, முதற்கட்டமாக கோடியக்காட்டில் புயல் பாதுகாப்பு கட்டிட வளாகப்பகுதியில் ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமையில், கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி துணை தலைவர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன், ஊராட்சி செயலாளர் சுபா, வனவர்கள் சதீஷ்குமார், ராமதாஸ் மற்றும் வனத்துறை பணியாளர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதுகுறித்து கோடியக்கரை வனச்சரகர் அயூப் கான் கூறுகையில்:-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி விழிப்புணர்வு முகாமும், 31-ந் தேதி பிளாஸ்டிக் ஒழிப்பு முகாமும், அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி கடற்கரை தூய்மை படுத்தும் பணியும், நிறைவாக 5-ந் தேதி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடுக்கடை கடைத்தெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- ரூ.2 ஆயிரம் பணம் மற்றும் மளிகை பொருட்களை திருடி சென்றார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியை அடுத்த கட்டுமாவடி ஊராட்சி தண்டாளம் பள்ளிவாசல் தெருவில் பாஸ்கரன் (வயது 45) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை பிடிக்கக் கோரி புகார் ஒன்று அளித்து இருந்தார்.
புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நடுக்கடை கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆலத்தூர் மேலத்தெருவை சேர்ந்த லட்சுமணன் (வயது 33) என்பதும் இவர் நேற்று முதல் நாள் இரவு மளிகை கடையில் பூட்டை உடைத்து 2000 ரூபாய் பணம் மற்றும் 2000 மதிப்பிலான மளிகை பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
உடனே திட்டச்சேரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
- கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.
தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட காவடிகளை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
- அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழாவின் 4-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு பால்காவடி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் விரதம் இருந்த பக்தர்கள் பால்,பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட காவடிகளை தலையில் சுமந்தவாறு புதியபேருந்து நிலையத்தில் உள்ள ஸ்ரீ அச்சம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் முக்கிய வீதிகள் வழியாக நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் வரை மேள தாளங்கள் முழங்க இன்னிசையோடு பார்வதி, சிவன், காளி, கருப்புசாமி வேடமிட்டு நடனத்தோடு காவடிகள் சென்று அம்மனுக்கு பால் பன்னீர் சந்தன அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் இந்திரா.
இவரது மகள் குணவதி (வயது 15).
இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதில் மாணவி குணவதி ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தது தெரியவந்தது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டினார்.
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் குணவதியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.
இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்






