என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.
    • தலைஞாயிறு பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் அண்ணாதுரை, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் மகேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மகேந்திரன், செல்வி சேவியர், உதயகுமார், கஸ்தூரி மாசிலாமணி, ஞானசேகரன் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைஞாயிறு தொகுதியில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், மேட்டூர் அணையில் இருந்து அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் கடைமடை பாசன பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும், ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சாலைகளை மேம்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தினர்.

    இதற்கு பதில் அளித்து ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி பேசியதாவது:-

    குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக முன்னுரிமை அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • அம்பாளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் சிம்ம, கிளி, அன்னபச்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்பு, புலி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து, கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியை கருப்பங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
    • குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.

    ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

    குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.

    எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • முருகனுக்கு பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தகடேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார். இங்கு நடைபெற்று வரும் வைகாசி பெருவிழாவின் 4-ம் நாள் மண்டகப்படியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்பு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும்.
    • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில மைய முடிவின்படி, தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் வசம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சித்ரா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராணி துவக்கவுரை–யாற்றினார். மாவட்டச் செயலாளர் இராஜூ விளக்கவுரை–யாற்றினார். அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் முருகையன், நெடுஞ்சாலைத்துறை சாலைப்ப–ணியாளர் சங்க நிர்வாகி ரமேஷ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சே–ரல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அன்பழகன் சிறப்புரை–யாற்றினார். நாகைமாலி எம்.எல்.ஏ. நிறைவுரை யாற்றினார். மாவட்டப் பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ஜானி டாம் வர்க்கீசிடம் அளித்தனர்.

    • சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.
    • தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்னார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தேத்தாக்குடி தெற்க்கை சேர்ந்த அழகேசன்- மலர்விழி தம்பதியரின் மகன் அகிலரசு. (வயது 12). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மலேசியா நாட்டின் ஈபோவில் நடைபெற்ற 19-வது அனைத்து உலக கராத்தே போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் அகிலரசு கலந்து கொண்டு தங்கப்பதக்கமும், தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.

    போட்டியில் இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தங்கம் வென்ற தமிழக மாணவர் அகிலரசுக்கு மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜுலு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், தங்கம் வென்று தமிழகம் வந்த மாணவன் அகிலரசுவை ஊராட்சி தலைவர் வனஜா சண்முகம், ஊராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளினார்.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கலசம்பாடி நற்கூந்தலழகி அம்மன் கோவிலின் 19-ம் ஆண்டு வைகாசி தீமிதி திருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்புக் கட்டுதல் மற்றும் பூச்சொரிதலுடன் தெரடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக அம்மன் மணி மண்டபத்திலிருந்து சிறப்பு மலர் அலங்காரத்துடன் மின் விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்ட வாக னத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரா தனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள தேவநதி வாய்க்காலில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் தூர்வாரும் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி கடைமடை பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் 28 பணிகள் 301.13 கி.மீ தொலைவிற்கு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் தூர்வாரும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

    பெருங்கட்மபனூர் மற்றும் ஓர்குடி கிராமங்களில் வாய்க்கால் தொலைவு 4.00 கி.மீ முதல் 7.00 கி.மீ வரை மற்றும் 12.00 கி.மீ முதல் 15.00 கி.மீ வரை தேவநதி வாய்க்கால் 6 கிலோமீட்டர் தூரம் வரை மற்றும் தெத்தி வடிகால் 3 கிலோமீட்டர் தூரம் வரை வடிகால் மற்றும் வாய்க்கால்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

    இதன் பாசனப்பரப்பு 12085 ஏக்கர் பயன்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத்தொடர்ந்து, பெருங்கடம்பனூர் கிராமம் புளியந்தோப்பு தெருவில் மின்சார கசிவு காரணமாக ஜெயராமன் மற்றும் பிரேம்தாஸ் ஆகியோரது தீப்பிடித்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொ றியாளர் ராஜேந்திரன், நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 3 பேரும் வேனில் வேதாரண்யம் நோக்கி சென்றனர்.
    • லாரி வேன் மீது பயங்கரமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 39).

    அதே பகுதியை சேர்ந்த பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேரும் லோடு வேனில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    வேனை செந்தில் ஓட்டினார்.

    அப்போது வேதாரண்யம் சாலையில் காமேஸ்வரம் ஏரிக்கரை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி வேன் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் செந்தில், பிரபு, தமிழ்மணி ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சையில் இருந்த செந்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பிரபு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கிழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடைக்கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    ராமநாதபுர மாவட்ட கலெக்டராக இருந்து வந்த ஜானி டாம் வர்கீஸ் நாகை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.

    கலெக்டர் அலுவலகம் வந்த புதிய கலெக்டரை கூடுதல் ஆட்சியர் பிரித்விராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

    பிறகு ஆட்சியர் அறைக்கு வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று க்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் நாகை புதிய கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கூறியதாவது:-

    கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்னை களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    மேலும் நாகை மாவட்டத்தில் கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து, மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் சாராய கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    மேலும் பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வேட்டைக்காரனிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பூமிக்கு அடியில், பேரல்களில் 200 லிட்டர் சாராய ஊரல்கள் புதைத்து வைக்கப்ப ட்டிருந்தை கண்டு பிடித்தனர்.

    பின்னர் 200 லிட்டர் சாராய ஊரலை தரையில் கொட்டி அழித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கண்டிய ன்காடு பகுதியை சேர்ந்த குழந்தை வேல் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு ஹர்ஷ் சிங் சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும், மேலும் குற்றவாளிகள் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய கோவில்.
    • அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த திருக்கண்ணபு ரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது.

    இக்கோவில், 108 வைணவ தலங்களில் 17-வது தலமாகும்.

    ஆழ்வார்களால் மங்களாசா சனம் செய்யப்பட்ட பெருமை யுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா நேற்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 29-ந்தேதி தங்க கருடசேவை, அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி திருக்கல்யாண உற்சவம், 3-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×