50 சதவீத மானியத்தில் விதை- உரங்கள் வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம்

தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து தயாராகலாம்.
50 சதவீத மானியத்தில் விதை- உரங்கள் வாங்கி விவசாயிகள் பயன்பெறலாம்
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு வேளாண்மை அலுவலகத்தில் 44 டன் ஆடுதுறை 53 நெல் விதை இருப்பு உள்ளது என்றும், விவசாயிகள் 50 சதவீத மானியத்தில் வாங்கி பயன்படுத்தலாம் என வேளாண்மை துறை அலுவலர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தலைஞாயிறு பகுதியில் 4 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி நடைபெறும்.

ஆனால், இந்த ஆண்டு சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளதால் தலைஞாயிறு பகுதியில் கூடுதலாக 5 ஆயிரம் எக்டரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடிக்காக தலைஞாயிறு, நீர்முளை, கொத்தங்குடி, பனங்காடி ஆகிய 4 வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஆடுதுறை 53 நெல் விதை 44 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சாகுபடிக்கு தேவையான சிங் சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட நுண்ணூட்ட சத்து உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விதை மற்றும் உரங்கள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடிக்கு தற்போது கோடை உழவு செய்ய ஏற்ற நேரமாகும்.

எனவே, குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் வயல்களை கோடை உழவு செய்து குறுவை சாகுபடிக்கு தயாராகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com